காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

  • by

சிறந்த காதல் வாழ்க்கை வாழனுமா இதனைப் பின்பற்றுங்கள், உங்கள் காதல் வாழ்க்கையை பலப்படுத்த. காலை முதல் மாலை வரை உங்கள் அன்பு மிக்க இதயத்தை  எல்லையற்ற அன்பு மற்றும் கேரினால் பாதுகாக்கவும்.  

ஈருடல் ஓர் உயிராய் இருங்கள்:

உங்கள் துணையாக வாழ்நாள் முழுவதும் அந்த ஜீவனுடன்  இதயம் பரிமாறிம் சுவாசித்து வாழும் அந்த வாழ்க்கை நிகரற்றது. உங்களது அன்றாட வேலையைப் போல் காதலி, காதலுடன் கலந்து பழகுதல் அவசியம் ஆகும். 

காதலிக்கான நேரம் காலை மாலை முதல் அட்டவணைப் போட்டு ஒதுக்குங்கள் அழகான வாழ்கை பெறலாம்.  உங்கள் வாழ்க்கையில் சிறந்த தருணங்கள் எது என்றால் உங்களவர் உங்களுக்கு ஒதுக்கும் நேரம அது என்பதை தெளிவுப் படுத்துங்கள். 

காதல் இணைப்பு

உணர்வுபூர்வமான காதல்:

வெற்றிகரமான காதல் வாழ்க்கையை தொடரும் அனைவருக்கும் நீங்கள் முன் உதாரணம் என்பதுபோல் இருக்க வேண்டும். ஊடல் இருத்தல் அவசியம் சின்ன  சின்ன சண்டைகள் ஊடல்கள் இருக்கும் பொழுது இருவரின் அன்பு மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு ஆகியவை எல்லையற்றது ஆகும். அதனை எடுத்துச் செல்லுதல் அவசியம் ஆகும். 

உங்கள் காதல் உணர்வுபூர்வமான ஒன்றாகும். அதனை நாம்  எடுத்து செல்லும் வேகம் அதனை எத்தனை புரிதலுடன் நகர்த்துகின்றோம் என்பதில்தான் வாழ்வுள்ளது   

காதல் இணைப்பு

மேலும் படிக்க்: அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

இருவரும் எங்கு வேண்டுமானாலும்  பணியாற்றுங்கள் ஆனால் கிடைக்கும் இடைவேளையில் இன்பமான அன்பு பரிமாற்றம் அவசியம், அலுவலகத்தில் ஆபிசர் கத்துகின்றாரா கோபத்தை வெளியில் காட்ட முடியவில்லையா, உங்களவருக்கு கால் செய்து கரித்துக் கொட்டுங்கள். அவர் அதை புரிந்து சிரிக்கட்டும். சிரிப்புடன்  அவர் பேசும் சிநேகமான வார்த்தை மனதில் உள்ள கசப்புகளை எல்லாம் போக்கும். அதே போல் உங்கள் அவருக்கு எந்த கோபமானாலும் உங்களிடம் காட்டடும் அதற்கு தகுந்த பிணைப்போடு நீங்கள் பேசும் பொழுது உலகமே எதிர்த்து நின்றாலும் எல்லாம் கால் தூசிக்கு சமமாகிவிடும். 

மேலும் படியுங்கள்: காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

உற்ற துணையாக இருங்கள்:

உற்ற துணையாக இருங்கள் உங்களவருடன்  எப்பொழுதும் பயணியுங்கள் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர்  கம்பெனி கொடுக்க வேண்டியது அசியம் ஆகும். காதலியுடன் இணைந்து சாப்பிங் செய்யுங்கள் அதனுடன்  என்ன அவர் வாங்குகிறார். என்ன அவரின் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போன்று காதலரின்  தேவை என்ன என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.. 

இருவரின்  தேவை இருவருக்கும் பொதுவான விசயங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். 

இணைந்து பயணிப்பது போல் இணைந்து செயல்படுதல் அவசியம் ஆகும்.  எண்னங்களை பகிர்ந்து கொள்ளுதல், செய்யும் வேலையை இருவருக்குள்ளும் முறையான பரிமாற்றம் என்பது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

எது பிடிக்கும் எது பிடிக்காது:

இருவருக்கும் எது பிடிக்கும், பிடிக்காதது என்பது இருவருக்கும் பரஸ்பரம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் அன்புக்குரியவர்  எந்த நேரத்தில் எப்படி இருப்பார் போன்ற அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

வாரம் ஒரு முறை கோவில் அல்லது  அருகில் இருக்கும்ன் பொது இடங்களுக்கு இருவரும் பயணிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன