வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இதை சாப்பிடுவது மிக அவசியம்.!

Ekadasi Fasting Eat Agattikirai and Tulsi Tirtha

விரதத்தில் மிகச் சிறந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் என்பார்கள் இதை சரியாக இருப்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதம் இருக்கும் மறுநாள் துவாதசி நாள் என்பார்கள். ஒவ்வொரு ஏகாதசி விரதம் முடித்த மறுநாளில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து குளிர்ந்த நீரால் நீராட வேண்டும். பின்னர் நாம் துளசி தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் நமது விரதம் இன்னும் மேன்மையடையும். மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருப்பதினால் நமது உடலுக்குத் தேவையான வெப்பங்கள் அனைத்தும் குறைந்திருக்கும். நாம் அதிகாலையில் குளிர்ந்த நீரால் நீராடுவதனால் நமது உடல் முழுக்க உஷ்ணம் இல்லாமல் தவித்து வரும், இதை சரி செய்வதற்காகவே நாம் துளசி தீர்த்தத்தை அருந்துகிறோம். இதனால் நமது உடலுக்கு தேவையான வெப்பத்தை இது தருகிறது.

அதேபோல் விரதம் முடித்த பின்பு நாம் உண்ணும் விருந்தில் அகத்திக் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும், அதுமட்டுமல்லாமல் நெல்லிக்காய், சுண்டைக்காய் நிச்சயம் நம் உணவில் இருக்க வேண்டும். அகத்திக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருப்பதினால் நமது பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடைய இது உதவுகிறது.

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

நம் எண்ணம் மற்றும் நமது உடல் ஆரோக்கியம் எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருப்பதற்காகவே நாம் விரதங்களை மேற்கொள்கிறோம். அதிலும் வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது எல்லா விரதங்களை விட சக்தி வாய்ந்த விரதமாகும். நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் இந்த விரதம் நமது உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

வருடம் முழுக்க நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் நமது ஜீரண மண்டலத்திற்கு இது ஓய்வு அளிக்கின்றது அதுமட்டுமல்லாமல் நமது உடல் முழுக்க ஓய்வு அளித்து புதிய செல்களை உருவாக்குகிறது. இத்தகைய அதிகம் நிறைந்த விரதத்தை நமது முன்னோர்கள் பின்தொடர்ந்தார்கள்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம். நாம் முற்பிறவியில் செய்த பாவத்தை அனைத்தும் போக்கும் சக்தி கொண்டது இந்த ஏகாதசி விரதம் இதை சிவபெருமான் அன்னை பார்வதிக்கு எடுத்துரைத்துள்ளார்.

மேலும் படிக்க – மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

ஏகாதசி விரதத்தை முடித்த பின்பு நாம் 21 காய்களை கொண்ட உணவை சமைத்து உண்ண வேண்டும். இதை உண்பதற்கு முன்பு ஏழைகள் அல்லது அனாதைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பின்பு நாம் இதை உண்ணுவதன் மூலம் நமது விரதம் முழுமையடையும் அதுமட்டுமல்லாமல் இந்த உணவில் நிச்சயம் அகத்திக் கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் இருக்க வேண்டும். இது அனைத்தும் நமது உடலில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சினையை தீர்த்து வைக்கும்.

விருந்து உண்ட பிறகு நாம் பகல் நேரத்தில் உறங்காமல் இருந்து கடவுளை பிரார்த்தனை செய்தால் சொர்க்கவாசல் திறக்கப்படும். நாம் மகாவிஷ்ணு உடன் சேர்ந்து சொர்க்க வாசல் வழியாக சென்று இறைவனை தரிசித்தால் நமக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். எனவே மிகவும் சிறப்பு வாய்ந்த மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசியில் நாம் மறக்காமல் விரதம் இருந்து நமது பாவங்களை போக்கி புண்ணியத்தை சேர்க்கும் நல்ல வழியாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன