அழகுசாதன பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் !!!

effects of using beauty products

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் . அந்த முகத்தை
அழகுபடுத்த நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்.
அழகாக பொலிவாக இருக்க வேண்டும் எனும் அக்கறை எங்கும் பரவி
வரும் காலம் இது.


தினசரி குறைந்தபட்சம் 12 அழகுசாதனப் பொருட்களை பெண்களும் 6
அழகு சாதனப் பொருட்களை ஆண்களும் பயன்படுத்துகிறார்கள் என்கிறது
அமெரிக்க புள்ளிவிவரம். அமெரிக்காவின் சந்தையாக மாறி இருக்கும் நம் 
ஊருக்கும் இதே நிலைமைதான்.


கிட்டத்தட்ட 80,000 அழகுபடுத்தி களும், 12500-க்கும் மேற்பட்ட ரசாயன
பொருட்களும் உங்களை மணமூட்டவும் ,அழகு படுத்தவும்
பயன்படுத்தப்படுகிறது. இவை பாதுகாப்பானதா? உடல் நலத்துக்கு தீங்கு
விளைவிப்பதா? என்று எந்த ஒரு ஆய்வும் உலகில் எங்குமே
நடைபெறவில்லை. எல்லாமே அரைகுறை முடிவுகள்தான்.

மேலும் படிக்க – வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?


நெயில் பாலிஷ்


ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் இன்னொரு நாட்டில் கொடிகட்டி
பறக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து
இழுக்கும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் நெயில்பாலிஷ் இல்
லெட் என்னும் வேதிப்பொருள் கலந்துள்ளது. நெயில் பாலிஷ் நிறுவனமோ
லேட் எல்லாம் கலப்பதே இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் அந்த
பொருட்களை ஆய்வு செய்ததில் 65 சதவீதத்திற்கும் மேலான
நெயில்பாலிஷ் இல் லெட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த லெட்டை
நான் சுவாசிப்பதால் மூளை திறன் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்தி விதவிதமாக வாங்கும்
மணமூட்டிகள் என்ன இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஃபார்மால்டிஹைடு என்ற நரம்பை பாதிக்கும் நச்சு. அதிலுள்ள மற்றொரு

பொருள் எத்திலின் ஆக்சைடு புற்றுநோயை வரவழைக்கும் முக்கிய
ரசாயனங்களில் இதுவும் ஒன்று.இப்படி கிட்டத்தட்ட 22 சதவீத
மணமூட்டிகளில்  புற்றுநோயை தரும் ரசாயனங்கள் இருப்பதாக
எச்சரிக்கிறது அழகுப் பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்
” Skin Tip “அமைப்பு.

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!


கண் அழகுசாதனப் பொருட்கள் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக
வயதுக்கு வருவதற்கு நமது உணவு பழக்கம் ஒரு முக்கிய காரணமாக
இருந்தாலும் , அழகு சாதன பொருட்களில் பயன்படும் ஹார்மோன்களும்
ஒரு காரணமாக உள்ளன. பார்ப்பதற்கு வசீகரமாகவும் ,அனைவரையும்
கவர்ந்து இழுக்க வேண்டும் என்பதற்காகவும் கண்களுக்கான மேக்கப்
அழகு சாதன பொருட்கள் அதிக அளவில் சந்தையில் விற்பனையாகிக்
கொண்டிருக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பனும்
ஹார்மோன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது .


இன்று அதிகளவில் பயன்படுத்தப்படும் பவுண்டேஷன் அதாவது மேக்கப்
கலையாமல் முகத்தில் நிறுத்திவைக்கும்  வேதி பொருள்களும் தான் இந்த
பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.


காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் மேலே பூசுவதற்கு தானே உடலுக்குள்ளே
எப்படி போகும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இந்த அழகு
சாதன பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக அதில்
கலக்கப்படும் பாரா பீன் என்னும் வேதிப்பொருள், நிறமி களுக்காக
சேர்க்கப்படும் நானோ துகள்களும் உடலுக்குள் உறிஞ்சப்படுவது
உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மணமூட்டிகள் மற்றும்சன்ஸ்க்ரீன் லோசன் இவை ஆண்களின்
விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட குறைக்குமாம். அதிகமாக செண்ட்
அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் இனி கொஞ்சம் உஷாராக இருக்க
வேண்டும். அதிக அளவில் நாம் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் லோஷன்
முகத்தை பளபளப்பாக்கும் அதைவிட வைட்டமின்-டி குறைபாட்டையும்
புற்றுநோயையும் நமக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க – கண்ணாடி போன்ற சருமத்திற்கு இந்த 7 பொருளை பயன்படுத்துங்கள்..!


போலியான ஆர்கானிக் பொருட்கள்

சிலபேர் ஹெர்பல் நேச்சுரல், ஆர்கானிக் ஷாம்பு தான் பயன்படுத்துகிறோம்
என்று கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான  இந்த பொருட்களில்
உங்களை வாங்க வைக்கும் உத்தியாக லேபிளில் மட்டுமே
ஒட்டப்படுகின்றன. சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை
ஷாம்புக்களை சந்தையில் மிக அரிது. கொஞ்சம் மூலிகை, கொஞ்சம்
கெமிக்கல் என்ற கலவைகள் தான் அதிகம்.


ஆர்கானிக் என விற்கப்படும் பொருட்களில் 10 சதவிகித மூலப் பொருட்கள்
மட்டுமே ஆர்கானிக் என்கிறது ஒரு நுகர்வோர் அமைப்பு.
குழந்தைகளுக்கு என விற்கப்படும் சோப்பு, ஷாம்பு களில் 35% கெமிக்கல்
பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.


கருமையை நகைப்பது இழிவுபடுத்தும் விவரம் தெரியாமல் செய்யும்
செயலாகும். குழந்தை பருவம் முதலே கருப்பழகை ரசிக்காமல் பவுடர்
போட்டு, க்ரீம் தடவி வளர்ப்பது சிறு வயதிலேயே அந்தக் குழந்தைக்கு
கருப்பு என்றால் நல்லது இல்லையோ என்ன என்ற மனோபாவத்தை
வளர்கிறது, இதன் விளைவு 5 வயது குழந்தைக்கு ஹேர் ஸ்டைலிங்
செய்து, முகத்திற்கு ஸ்கரப் செய்து, பாலிஷ் போட்டு உயிருள்ள
குழந்தைகளை பதுமைகள் போல் பாடாய் படுத்துகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன