நீண்ட காலமாக தலையணையை மாற்றாமல் இருப்பவரா நீங்கள்?

  • by
effects of sleeping in same pillow for a long time

உங்களுக்கான ஒரு அதிர்ச்சி செய்தி!

சமீப காலங்களில் அதிகமாக கழுத்து வலியின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே
வருகிறது. இதற்கு நாம் பல்வேறு காரணங்களை கூறினாலும் மிக முக்கிய
காரணமாக இருப்பது நாம் படுத்து உறங்கும் முறை தான். நாம் உறங்கும்போது
நமது கழுத்து தசைகளையும், தோள்பட்டை தசைகளையும் நேர்கோட்டில்
வைத்து உறங்காமல் இருப்பதுதான் இந்த கழுத்து வலி ஏற்பட மிக முக்கியக்
காரணமாக இருக்கிறது. 

எப்படி படுப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது 

படுத்து கொண்டே டிவி பார்ப்பது,படுத்துக்கொண்டே புத்தகம் பார்ப்பது,
சோபாவில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, போன்ற பல
பொதுவான காரணங்களால் இந்த கழுத்து வலியின் தாக்கம்
அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒவ்வொருவரும் தனது இரவு தூக்கத்தை
ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்கினால் தான் அவர்களால் ஆரோக்கியமான
வாழ்வு வாழ முடியும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எட்டு மணி
நேரம் தூங்கும்போது சில நேர இடைவெளிகளில் தலையணைக்கு நாம்
முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தூங்கும்போது நம் தலையணைக்கு
கொடுக்கும் முக்கியத்துவம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

மேலும் படிக்க – கற்றாழை ஜெல்லில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!


நாம் தூங்கும் போது நம் கழுத்து தசைகளும் தோள்பட்டை தசைகளும் சீராக
இயங்க தலைக்கு வைத்திருக்கும் தலையணை முக்கிய பங்கு
வகிக்கிறது.பலரும் கழுத்து பிடிப்பால் வாழ்வில் ஒரு முறையாவது பாதிக்கப்பட்டு இருப்போம். அதற்கு காரணம் தூங்கும்போது கழுத்தை கோணல்மாணலாக வைத்திருந்ததால் நரம்பு பிடிப்பு ஏற்பட்டு மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது கழுத்தை ஒரு பக்கமாக வைத்து நடக்க நேரிடும்.

கழுத்து வலிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் தலையணை 

காலங்காலமாக மாற்றாமல் நாம் உபயோகிக்கும் தலையணை சில நாட்கள்
செல்ல செல்ல கல்லைப்போல் கடினமாக மாறிவிடுகிறது. அதுமட்டுமில்லாமல்
நம் தலைப்பகுதியின் எடை மற்றும் தூங்கும் நிலைக்கு ஏற்ப தலையணையில்
பள்ளங்கள் ஏற்படுவதை உணரமுடியும்.ஆனால் இந்த நிலையில்
தலையணையை வைக்கக்கூடாது என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
நாட்கள் செல்லச்  நாம் பயன்படுத்தும் கற்களைப் போன்ற தலையணை நம்
கழுத்து தசைகளையும் கற்களைப் போல மாற்றிவிடுகிறது. இதனால் தசைகளில்
சிறுசிறு வலி ஏற்படும்.

தலையணையை எப்போது மாற்ற வேண்டும்?

குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் உபயோகிக்கும்
தலையணையை மாற்றுவது அவசியமானதாக இருக்கிறது. இவ்வாறு
செய்வதால் கழுத்தில் ஏற்படும் தேய்மானத்தை நம்மால் தவிர்க்க முடியும்.
கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு தலையணைக்கு நிச்சயம் சம்பந்தம்
இருக்கிறது.

தொடர்ச்சியாக தவறான தலையணையை நாம் பயன்படுத்தி வருவதால்
கழுத்தை சுற்றியுள்ள தசைகள் அதன் இயக்க தன்மையை குறைத்துக்கொண்டு
கடினமாக மாறிவிடுகிறது. இதனால் கழுத்தின் இரு புறமும் உள்ள தோள்
பகுதிகளில் மிகுந்த வலி உண்டாகும். அது கை தசைகளிலும் வலியை
ஏற்படுத்தும்.இத்தனை வலிகளையும் சரி செய்ய பெரும்பாலும் தலையணையை
மாற்றம் செய்தால் போதும். அல்லது படுக்கையில் செய்யும் சிறு மாற்றமும்
இந்த வழிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.

மேலும் படிக்க – புதினா இலை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சியுடன் வாழலாம்

எப்படி படுத்தால் கழுத்து வலி வராது 

பொதுவாக நாம் உறங்கும்போது அல்லது ஓய்வு எடுக்கும்போது
தலையணையை மிக உயரமாக வைத்து படுக்கக்கூடாது. தாழ்வாகவும் வைத்து
படுக்கக்கூடாது. உங்கள் இரண்டு கைகளையும் வணக்கம் கூறுவதுபோல
கைகூடினால் எவ்வளவு உயரம் வருமோ ,அவ்வளவு உயரமே தலையணையின்
உயரமாக இருக்க வேண்டும். அதுவே உங்கள் கழுத்துக்கு போதுமானது.
உங்கள் கண் பார்வை வானத்தை நோக்கியவாறு தினமும் 15 நிமிடமாவது
தலையணை இல்லாமல் நேராக படுக்க வேண்டும். இது உங்கள் கழுத்து
தசைகளை இலகுவாக வேலை செய்ய உதவியாக இருக்கும்.

தலையணையை தேர்வு செய்வது எப்படி?

தரமான இலவம்பஞ்சு போன்றவற்றால் செய்த தலையணை நம் கழுத்துக்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.

கழுத்துக்கும் தலைக்கும் இடையே சிலர் கைகளை வைத்துக்கொண்டு
உறங்குவார்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
நாம் உறங்கும்போது வலப்பக்கமும் இடப்பக்கமும் திரும்பி படுக்கும் போது
நமது தலையானது உடல் பகுதியோடு நேர்கோட்டில் இருக்கும் மாதிரி படுத்து
உறங்க வேண்டும்.

மேலும் படிக்க – கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

கழுத்து வலி ஏற்பட்டால் இருக்க செய்யக்கூடாதவை 

சிலர் கழுத்து வலி ஏற்பட்ட உடனே எண்ணையை கொண்டு கழுத்தை
நீவுவார்கள். கழுத்தை சுற்றி உள்ள தசைகள் மிக சிறிய தசைகள் எண்ணெய்
கொண்டு நீவும்போது அவைவீக்கம் அடைய வாய்ப்புகள் அதிகம். முடிந்தவரை
அவ்வாறு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

உங்கள் பிசியோதெரபி மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளையும், கழுத்து
வலிக்கான பயிற்சிகளையும் செய்துவந்தால் நல்ல மாற்றத்தை உணர முடியும். 
வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலையணையை மாற்றிவிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன