ஊற வைத்த ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

eating soaked oats daily will reduce your weight

ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளையே தேர்ந்தெடுக்கிறோம். அதற்காக நாம் பச்சை காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்கிறோம். ஒரு சிலரோ இதை விட மிக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள் அதற்காக அவர்களை சர்க்கரை, உப்பு என எதையும் கலந்து கொள்ளாமல் கடுமையான டயட் இருப்பார்கள். அது போன்றவர்களே அதிகமாக பயன்படுத்துவது ஓட்ஸ். இதை இவர்கள் சாதாரணமாக கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து உப்புமாவை போல் சாப்பிடுவார்கள். ஆனால் இதை வேறு ஒரு வழியில் சாப்பிட்டால் நாம் இன்னும் வேகமாக உடல் எடையை குறைக்க முடியும்.

ஓட்ஸை நாம் வேக வைத்து சாப்பிடாமல் இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது கொதி நிலைக்கு சென்ற உடன் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதுபோல்தான் ஓட்ஸல் நடக்கிறது. ஆனால் இதை நாம் கொதிக்க வைக்காமல் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நமக்கு வந்து சேருகிறது.

மேலும் படிக்க – உலர்திராட்சையில் உள்ள சத்துக்கள்

ஓட்ஸ் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறுவதினால் அதில் இருக்கும் ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் இருக்கும் அசிடிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் இது மிக விரைவில் ஜீரணம் ஆகிறது. அது மட்டுமல்லாமல் இது நம் உடலிலேயே நீண்ட நேரம் இருப்பதினால் நமக்கு பசி உணர்வை இது ஏற்படுத்தாமல் நம்மை பார்த்துக் கொள்கிறது. இதனால் நாம் அன்றாட வாழ்வில் உணவுகளை குறைந்த அளவே உண்ணுகிறோம் இதனால் நம் உடல் பருமன் அடையாமல் இருக்கிறோம்.

ஓட்ஸ் நம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நமது இருதயம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் நமக்கு நீரிழிவு நோய் பிரச்சனைகள் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.

ஊற வைத்த ஓட்ஸில் நமக்கு பிடித்த சில பொருட்களை சேர்த்துக் கொண்டு ருசியாக சாப்பிடலாம். ஊற வைப்பதற்கு நாம் பால், தயிர் அல்லது தண்ணீரை பயன்படுத்தலாம் பிறகு காலையில் இதை சாப்பிடுவதற்கு முன்பு அதில் நட்ஸ், உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவை களை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

தாளித்த நெய்யை இதன் மேல் ஊற்றி சாப்பிடலாம். உங்களுக்கு இனிப்பு பிடிக்கவில்லை என்றால் ஓட்ஸில் சிறிது உப்பு மற்றும் மசாலாப் பொருட்களை கலந்து சாப்பிடலாம். இதை காலை உணவாக மட்டும் அருந்தாமல் பல காய்கறிகளை சேர்த்து செய்து மதியமும் உட்கொள்ளலாம் இதனால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஊற வைத்த ஓட்ஸ் உடன் நமக்கு பிடித்த காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் உடம்பில் இருக்கும் நச்சுத் தன்மையைப் போக்கி ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை இது தருகிறது எனவே ஆரோக்கியமான வாழ்வதற்கு ஓட்ஸய் இதுபோல் சாப்பிடுவது நல்லது.

1 thought on “ஊற வைத்த ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!”

  1. Pingback: பித்தப்பையில் இதுபோன்ற உணவுகளால் நோய் ஏற்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன