அவசர உணவு அழிவைத் தரும்.!

eating fast can cause many health problems

நம்முடைய அன்றாட வாழ்வுக்கான ஆற்றலை நாம் உண்ணும் உணவு தான் நமக்கு தருகிறது. ஆனால் நாம் உணவை மதிப்பதே இல்லை, இதனால் நாம் ஏதோ கடமைக்கு என்று தான் சாப்பிடுகிறோம். எப்போது நமக்கு பசி எடுக்க தொடங்குகிறதோ அப்போதுதான் பசியின் அருமை புரிந்து நாம் உணவை மதித்து உண்கிறோம். ஆனால், மற்ற சமயங்களில் நாம் செய்யும் வேலைகளில் அல்லது விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறோம். இதனால் உண்ணுவதற்காக நாம் குறுகிய நேரங்களே எடுத்துக் கொள்கிறோம் அதிலும் ஒரு சிலர் 5 நிமிடத்திற்குள் உணவை அருந்திவிட்டு அவரின் மற்ற வேலைகளை செய்யத் தொடங்குகிறார்கள். இதனால் நீங்கள் உங்கள் நேரத்தை சேமிக்கலாம் ஆனால் நடுநிலை வயது வரும்போது உங்கள் உடல்நிலையை இந்த பழக்கம் பாதிக்க செய்கிறது.

வேகமாக உணவு உண்பவர்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இவர்கள் எவ்வளவு உணவுகள் எடுத்துக் கொள்கிறார் என்ற அளவு கட்டுப்பாடு இல்லாமல் முடிந்தவரை குறுகிய நேரத்தில் உணவுகளை அருந்துவதனால் அளவுக்குமீறி உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் இவரின் மூளை இவர் போதுமான அளவு உட்கொண்டுள்ளாரா என்பதை  கணக்கிடுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், இவர் உடல் பருமன் அடைந்து விடுகிறார்.

மேலும் படிக்க – தினமும் சுண்டல் சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!

வேகமாக உணவு உண்பவர்களுக்கு மற்றொரு பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது நாம் குறுகிய நேரத்தில் அதிக உணவை உட்கொள்வதினால் அதை அனைத்தையும் செரிமானம் செய்வதற்கு நம் உடல் கஷ்டப்படுகிறது. இதனால் நமக்கு அஜீரண கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உணவுகளை அதிவேகமாக உண்பவர்களின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இதனால், உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்த வரை பொறுமையாக உண்பதே நல்லது.

உணவை நாம் சரியாக உண்பதற்கான சில வழிமுறைகள். பொதுவாகவே நாம் உணவு உண்பதற்காக சரியான நேரம் வரும் வரை காத்திருக்கிறோம். அப்படி இல்லாமல் உங்களுக்கு எப்போது உணவு உண்ண தோன்றுகிறதோ அப்போதே சாப்பிடுவது நல்லது. அது மட்டுமல்லாமல் பசி எடுக்கும் வரை காத்திருக்காமல் உணவை நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்ணுங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

வீட்டில் நாம் தொலைக்காட்சியை அல்லது ஏதாவது பொழுதுபோக்கு பொருட்களை கொண்டு விளையாடியபடி உணவு உண்டால், நம் பெற்றோர்கள் நம்மை அடித்து உணவில் கவனம் செலுத்து என்று கூறுவார்கள். இதை நாம் உடனே பின்பற்ற வேண்டும் இல்லையெனில் நாம் எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதை நம் மூளை அறியாமல் நம்மை அதிகமான உணவை உட்கொள்ள தூண்டிவிடும். இதனால் நாம் குண்டாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே உணவை முடிந்த வரை வேகமாக உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு என்னதான் அவசரம் என்றாலும் குறைந்த உணவை எடுத்துக்கொண்டு அதை சரியாக மென்று உண்ண வேண்டும். இதை செய்வதன் மூலமாக நீங்கள் உண்ணும் உணவு விரைவில் ஜீரணமாகி உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன