கால்சியம் சத்து வேண்டுமா??? உடனே வாங்க வேண்டிய தானியம் இதுதான்…!

  • by
eat this food to get more calcium strength

நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கு எழுபது எண்பது வயதுகளில் வராத எலும்பு பிரச்சினைகள் கூட இப்போது இருக்கும் 10 வயது குழந்தைக்கு வந்துவிடுகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய கால்சியம் பற்றாக்குறை உணவு முறைதான். இன்று எலும்புகளில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போடுவது இந்த கால்சியம் குறைபாடுதான். நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கேழ்வரகை அன்றாடம் எடுத்துக் கொண்டால் தானாகவே கால்சியம்சத்து நம்மை நிச்சயமாக வந்தடையும்.

மற்ற தானியங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு

நிலவிவரும் நவீன விவசாய காலத்தில் பூச்சி மருந்துகள், உரங்கள் இல்லாமல் ஒரு தானியத்தை நிச்சயமாக உருவாக்க முடியாது. ஆனால் உரம் போட்டால்தான் ஆபத்து என விவசாயிகள் நினைக்கும் ஒரு பயிர் தான் கேழ்வரகு. கேழ்வரகில் பூச்சிக்கொல்லி உரங்கள் போட்டால்தான் செடி வேகமாக உயர்ந்து வளரும். இதனால் கதிர் மட்டும் சிறியதாகிவிடும். விதைகளும் குறைந்துபோகும். அதனால்தான் கேழ்வரகிற்க்கு உரங்கள் போடுவதே இல்லை. எந்த கடையில் வாங்கினாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறப்புமிக்க தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.

மேலும் படிக்க – பொருட்களின் மேல் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்..!

கேழ்வரகு எங்கு தோன்றியது

கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில் தான். ஆனால் நமக்கும் கேழ்வரகும் பல நூற்றாண்டு தொடர்பு இருக்கிறது. நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல ஓசூர், தளி போன்ற பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா ஒரு அறுவடை திருநாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேழ்வரகில் உள்ள சத்துக்கள் 

அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்று உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கும் பொழுது அரிசி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த ஒரு உணவு தானியமாக தேர்ந்தெடுக்கப்பட்டது கேழ்வரகு தான்.

அரிசி கோதுமையை விட அதிகளவு இரும்புச்சத்தும் ,கால்சியமும் கேழ்வரகில் தான் அதிகமாக அடங்கியுள்ளது. பாலில் இருப்பதை போல் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியில் இருப்பது போல் பத்து மடங்கு கால்சியமும் கேழ்வரகில் இருக்கிறது. ஆனால் பாலும் அரிசியும் உடம்பை வளர்க்க உதவுகிறது.

ஆனால் கேழ்வரகு உடலின் உடலை குறைப்பதற்கு உதவும் .இதனால்தான் டயட் இருப்பவர்கள் அனைவரும் கேழ்வரகு கஞ்சியினை அதிகம் விரும்புகின்றனர்.

யாரெல்லாம் கேழ்வரகை அதிகம் சாப்பிட வேண்டும் 

100 கிராம் அரிசி கோதுமையில் வெறும் 28 மில்லி கிராம் கால்சியம் சத்துகள் அடங்கியுள்ளது. ஆனால் 100 கிராம் கேழ்வரகில் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. இதனால் தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முதல் திட உணவில் முதலிடம் கேழ்வரகுக்கு தான்.

பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது ஒரு அவசியமான அத்தியாவசியமான உணவுப் பொருளாகும். சமீபத்திய ஆய்வுகளில்  மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்து பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த கேழ்வரகை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த கேழ்வரகு நன்கு உதவி செய்யும்

கேழ்வரகில் இருக்கும் தனிச்சிறப்பு புரதம் 

இப்பொழுது சந்தைகளில் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பது     “மித்தி யானைன்” புரதம் அடங்கியுள்ள மாத்திரைகள் தான். இந்த மித்தியாைனைன் புரதம் அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். தோல் நகம், முடி காக்கவும் சீக்கிரம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது இந்த புரதம்.  ஈரலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை விரட்டியடிக்க மித்தியானைன் என்னும் முக்கிய அமினோ

அமிலம் பயன்படுகிறது. மாத்திரை வடிவில் இந்த புரதத்தை வாங்கி உண்பதற்கு பதிலாக கேழ்வரகை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – காரட்டை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கேழ்வரகினால் பெருமை கொள்ளும் ஆப்பிரிக்கா

ஒலிம்பிக்கில் ஆப்பிரிக்கா நாட்டினர் சிறுத்தை மாதிரி சிறப்பாக ஓடுவதற்கு இவர்களின் பாரம்பரிய கேழ்வரகு கஞ்சி தான் காரணமாம். ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவுகளில் நிச்சயம் கேழ்வரகு தான் முதலிடம் .அவர்களுடைய சிக்ஸ் பேக் உடம்பிற்கும், கால்பந்தில் கலக்குவதற்கும் கேழ்வரகின் கால்சியமும் அதில் உள்ள அமினோ அமிலங்களும் தான் காரணம் என்று கூறுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.

ஆந்திர மாநிலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த குழந்தைகளுக்கு உடல் எடையை கூட்டுவதற்காக சத்தை வழங்குவதற்காகவும் தினசரி உணவாக முளைகட்டிய கேழ்வரகு கொடுத்து வந்துள்ளனர் .ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளில் ஒரு ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகளுக்கு உடலில் நல்ல முன்னேற்றமும் தேவையான ஊட்டச்சத்தும் கொடுத்திருக்கிறது இந்த கேழ்வரகு.

கால்சியம் மாத்திரைகளை தேடித்தேடி வாங்குவதை தவிர்த்து கேழ்வரகை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டு எலும்புகளை பலப்படுத்தும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன