ஃபிட்டாக இருப்பதற்கு வெங்காயத்தை பயன்படுத்துங்கள்..!

  • by
eat onion to stay fit

அக்காலத்தில் பயன்படுத்தி வந்த ஆயுர்வேத மருத்துவத்தின் அதிகமாக பயன்படுத்தி வந்ததுதான் வெங்காயம். இது இன்றும் பாட்டி வைத்தியத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின் போன்றவைகள் அதிகமாக உள்ளது. எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் சருமம், கூந்தல் மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் வலிமையாகி ஆரோக்கியமாக இருக்கும்.

பித்தம் குறையும்

வெயிலின் தாக்கத்தினாலும் அல்லது அதிக உடல் உழைப்பினால் ஒரு சிலருக்குப் பிரச்சினைகள் ஏற்படும். இதனால் மயக்கம், வாந்தி போன்றவை உண்டாகும். இதுபோன்று தவிப்பவர்கள் நான்கைந்து வெங்காயத்தை எடுத்துக்கொண்டு, அதனுடன் வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் விலகும்.

மேலும் படிக்க – மகத்துவ சத்துக்கள் பல கொண்ட மல்லி விதை

ஆசனக்கடுப்பு நீங்கும்

வெங்காயத்தில் இருந்து வெளியாகும் நெடியை நுகர்வதின் மூலமாக தீராத தலைவலியும் குணமாகும். அதை தவிர்த்து இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக ஆசனங்களின் உண்டாகும் உஷ்ணம் குறைத்து உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். வயிற்றுக் கோளாறு அல்லது வயிற்று வலி உள்ளவர்கள் வெங்காயத்தை அரைத்து அதை மோரில் கலந்து குடிப்பதன் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும்.

மூட்டு வலிக்கு தீர்வு

வயதானவர்களுக்கு உண்டாகும் மூட்டுவலியை குறைப்பதற்கும் மற்றும் அதை முழுமையாக குணப்படுத்துவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தலாம். இவர்கள் கடுகு எண்ணெயில் சிறிதளவு வெங்காயத்தை சேர்த்து மூட்டுகளில் தடவ வேண்டும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் பச்சை வெங்காயத்தை அரைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் இரவில் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் உண்டாகும்.

ஆண்மை சக்தி

ஆண்மை சக்தி குறைவாக உள்ளவர்கள் வெங்காயத்தை நன்கு வதக்கி அதில் தேனை சேர்ந்து தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும், அதை தவிர்த்து உடலுறவு உணர்வுகளை தூண்டும். ஒரு சிலர் திடீரென்று மயக்கமடைந்தால் அவர்களை வெங்காயத்தை நுகரச் செய்ய வேண்டும், இதனால் மயக்கம் நிலை கடந்து இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

நுரையீரல் பாதுகாப்பு

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமாகவும் மற்றும் நம்முடைய புகை பழக்கத்தினாலும் நம்முடைய நுரையீரல் பெரிதாக பாதிப்படைகிறது. எனவே இவர்கள் வெங்காயச் சாறினை ஒரு வேளை, ஒரு மூடி என தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். இதனால் இவர்கள் நுரையீரல் சுத்தமடைந்து ஆரோக்கியமாகும்.

மேலும் படிக்க – ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பனை வெல்லம்..!

பெண்கள் பிரச்சினை

வெங்காயத்தில் கொழுப்புத் தன்மை குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வெங்காயத்தை அதிகமாக உட்கொள்ள லாம். அதேபோல் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டால் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வாருங்கள், அதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முகப்பருக்களை உடனேயே தீர்ப்பதற்கும் வெங்காயத்தை அரைத்து அந்த சாரினை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவுங்கள். கண்களில் சோர்வு உள்ளவர்கள் மற்றும் கண்கள் வலி உள்ளார்கள் அதை தீர்ப்பதற்கு வெங்காய சாறை சம அளவு தேன் கலந்து ஒரு சொட்டு பயன்படுத்தலாம்.

இதேபோல் சக்கரை நோய் உள்ளவர்களும் வெங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம், இதில் இருக்கும் தன்மை உங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சமமாக வைத்துக்கொள்ளும். இதைத் தவிர்த்து கூந்தல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் சரும அழகிற்கும் அதிகமாக உதவும் இந்த வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மனம் வலிமையாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன