தமிழ் சினிமா பிரபலங்களின் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள்..!

Eat like these tamil actress to get a flawless skin and fit body

உடல் மற்றும் சரும அழகை பராமரிப்பதற்காக நாம் ஏராளமான முயற்சிகளை மேற் கொள்கிறோம். ஆனால் திரையில் தோன்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் நாம் விரும்பிய உடல் மற்றும் சரும அமைப்பை மிக எளிதாக கொண்டதைப் போல் நம்மை உணர வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் இதை அனைத்தும் எளிமையான முறையில் தான் பெற்றார்களா, இல்லை இதற்காக எதுபோன்ற டயட்களை மேற்கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இவர்களைப் போலவே உங்களின் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த உணவு முறையை சரியாக கடைபிடித்தால் போதும்.

சருமம் மற்றும்  உடலுக்கு வலிமை சேர்க்கும் உணவுகள் 

தண்ணீர், உடல் ஆரோக்கியம் மற்றும் சருமப் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று நாம் அன்றாடம் குடிக்கும் குடிநீர் தான். இதன் சக்திகளை அறியாமல் நாம் தேவைப்படும் போது தான் குடிநீரை பயன்படுத்துகிறோம். எனவே உடல் ஊக்கத்திற்க்கு தேவையான சமயங்களில் எல்லாம் இதை அருந்துவது உங்கள் சருமத்திற்கு மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது. இதைத் தவிர்த்து மஞ்சள், அவகோடா மற்றும் கீரை வகைகள் உணவுகள் உங்கள் உடல் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – டிவிட்டர் இணைய தளத்தில் வார்த்தை போர் சின்மயி, அஜீத் ரசிகர்களால் இணைய உலகம் பரபரப்பு..!

உங்கள் சருமம் வெப்பமாவதை தவிர்ப்பதற்காக ஆலுவேராவை நம் சருமம் முழுக்க தடவுவது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பப்பாளி பழம், மாம்பழம் போன்ற பழங்களில் வைட்டமின் மினரல்ஸ் மற்றும் இனிப்பு சுவை உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதேபோல் கேரட், பீஷ் ஆயில், மீன் உணவுகள் உங்கள் சருமம் வயதாவதை தடுத்து உங்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

காலையில் கிரீன் டீயும் மாலை வேளைகளில் அல்லது உணவு சமயங்களில் சிறிதளவு ரெட் வைன் எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும்.

எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

நாம் கடைபிடிக்க வேண்டிய டயட் திட்டங்களை இங்கு பார்க்கலாம். அதி காலை உணவாக நாம் வெதுவெதுப்பான நீர், பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, இரவு முழுவதும் ஊற வைத்த பாதாம் இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறுக்கு பதிலாக நீங்கள் ஆலுவேரா பழச்சாறையும் எடுத்துக்கொள்ளலாம்.

காலை உணவாக ஒரு துண்டு பிரெட், வேக வைத்த முட்டை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு பழ துண்டுகளை சாப்பிடலாம். அல்லது ஓட்ஸ், குறைந்த கொழுப்புள்ள பால், பழத்துண்டுகள் மற்றும் கிரீம் டியை சாப்பிடலாம்.

மேலும் படிக்க – சமந்தாவின் பஸ்ட் லுக் பீல் இப்படி இருக்குங்களாம் ..!

காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே நாம் வெள்ளரிக்காய், கேரட் மற்றும் ஏக்கர்ட் சாப்பிட வேண்டும். அல்லது பிரஸ் ஆன ஏதாவது பழச்சாறை சாப்பிடலாம். இல்லையெனில் இயற்கை இளநீரை குடிக்கலாம்.

மதிய வேளையில் சப்பாத்தியுடன் ஏதாவது காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவு சிக்கன் அல்லது மஸ்ரூம் சாப்பிடலாம். கடைசியில் ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும், அல்லது ஒரு கப் ப்ரவுன் ரைஸ் வேகவைத்த மீன் அல்லது சிக்கன், வெஜிடேபிள் சாலடை சாப்பிட வேண்டும்.

மாலையில் ஒரு கப் டீ மற்றும் வால்நட் 3 அல்லது 4 சாப்பிடவேண்டும். அல்லது உங்களுக்கு விருப்பமான பழச்சாறு குடிக்கலாம்.

இரவில் சைவ அல்லது அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சைவ விரும்பிகள் ஏதாவது காய்கறிகளையும், அசைவ விரும்பிகள் சிறிதளவு சிக்கன் களையும் எடுக்கலாம். இதனுடன் ரைத்த மற்றொரு பிரட் துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது கலக்கப்பட்ட காய்கறிகள் ஒரு துண்டு பிரட் மற்றும் ரைத்தாவை எடுத்துக் கொள்ளலாம். இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது மஞ்சள் கலக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.

முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை

அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அல்லது ஆலோவேரா பழச்சாறு குடிக்க வேண்டும். சரியான நேரத்தில், பசி எடுப்பதற்கு முன்பாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு சக்தி உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை பார்த்து அதற்கேற்ப காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் போதுமான அளவு நீர் சத்து, நார்சத்து, புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ் இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப கலந்து உணவுகளை உட்கொள்வது நல்லது.

மேலும் படிக்க – தனுஷின் வளர்ச்சியை பாராட்டும் வாசு..!

இந்த வழியில், அனைத்தையும் கடைபிடித்தால் நீங்களும் உங்கள் சருமத்தை தமிழ் சினிமா பிரபலங்களை போல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுவதோடு இது போன்ற உணர்வு உங்கள் முதுமையை தள்ளிப் போடுகிறது. எனவே இந்த வழிகளில் சரியாக கடைப்பிடித்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன