மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

  • by
Easy Way To Reduce Stress

எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தாளும் மன அழுத்தம் மட்டும் நம்மை அவ்வப்போது தோற்றிக் கொண்டே இருக்கும். இதில் நமது உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பது என்றால் இதை உணர்வுகள் மூலமாகவே குணப்படுத்த முடியும். எனவே நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி மன அழுத்தத்தை போக்க முடியும் அதற்கான சில வழிகளை காணலாம்.

வாய்விட்டு சிரியுங்கள்

இப்போது இருக்கும் சமூகத்தில் நாம் வெளிப்படையாக சிரித்தாள் அவர்களை பைத்தியம் என்கிறார்கள், இல்லையெனில் நாகரீகம் தெரியாதவர் என்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றியெல்லாம் நினைக்காமல் வாய்விட்டு சிரியுங்கள். இது உங்களுடைய வாழ்க்கை, நிலைமையை மேம்படுத்துவதற்காக நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். எனவே சிரிக்கும் தருணங்களில் நன்கு வாய்விட்டு சிரியுங்கள். இதனால் நம் உடலுக்குள் ஆக்சிஜன் அளவு அதிகமாக செல்லும் உடல் உறுப்புகளில் இருக்கும் ரத்த ஓட்டம் சீராகும். அதுவே நம் மன பதட்டத்தை போக்க உதவும்.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

செல்லப்பிராணிகளை வளருங்கள் அதனுடன் விளையாடுங்கள்

வீட்டில் நாய் அல்லது பூனைகளை வளர்ப்பதன் மூலமாக நமது மன அழுத்தப் பிரச்சினை தீரும். ஒருசிலருக்கு லவ் பேர்ட்ஸ் அல்லது மீன்களை வளர்ப்பார்கள் இதுவும் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். நம் உடலில் இருக்கும் நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் சுரந்து நமது மன அழுத்தத்தை குறைத்து விடும்.

உங்கள் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

முடிந்தவரை உங்கள் வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பொருளும் உங்கள் மன பதட்டத்தை அதிகரிக்கக் கூடாது எனவே அது போன்றவைகளை அகற்றி, உங்களுக்கு பிடித்த பொருட்களினால் வீட்டை அலங்காரம் செய்யுங்கள். இதனால் உங்கள் வீடு மற்றும் அலுவலகம் இனிமையான ஒரு இடமாக அமையும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

பொழுதுபோக்கை சரியாக தேர்ந்தெடுங்கள்

நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் தொலைக்காட்சி அல்லது பாடல்கள் உங்கள் மன அழுத்தத்தை போக்கும் உள்ளதாக இருக்க வேண்டும். உங்கள் பொழுதுகளை போக்கி கொண்டு உங்களுக்கு பிடித்த வீட்டு வேலைகளை செய்யுங்கள். இது உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும், சுறுப்பாக வைத்துக்கொள்ளும். இதனால் உங்கள் மன அழுத்தமும் குறையும்.

இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்

இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலமாக மன அழுத்தம் குறையும்.

உங்கள் நேரத்தை அதிகரியுங்கள்

முடிந்தவரை உங்களுடன் நீங்கள் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். உங்களைப் பற்றி எண்ணி அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பதை யோசித்துப் பாருங்கள். குளிக்கும் பொழுது அல்லது வீட்டில் யாரும் இல்லாத பொழுது சத்தமாக பாடலை பாடுங்கள். மனம் விட்டு சிரியுங்கள். குறும்புத்தனமான ஏதாவது செய்யுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து விடும்.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

உடற்பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்க உதவுவது உடற்பயிற்சி. இதனால் தினமும் காலை அல்லது மாலை நடைப்பயிற்சி செய்யுங்கள். அதிகாலையில் மூச்சை நன்கு இழுத்துவிடும் போது மன பதட்டம் குறையும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள். உடல் உறவுகளில் ஈடுபடும் போதும் உங்கள் மன அழுத்தம் குறையும் எனவே இதற்கான நல்ல தருணத்தை உருவாக்கி மன அழுத்தத்தை குறையுங்கள்.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை மனதில் எண்ணிக் கொண்டு வாழுங்கள் அதுவே உங்கள் மன பதட்டம் மற்றும் மன பிரச்சனையை குறைக்கும் இதனால் மன அழுத்தம் ஏதும் உண்டாகாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன