எளிய மேக் அப்புக்கு இதை இப்படி செய்யுங்க

  • by

பெண்களை எங்கு சென்றாலும் அவர்களுக்கு என ஒப்பணை என்பது அவசியம் ஆகும். எளிய மேக் அப்பினை பள்ளி, கல்லுரி, அலுவலகம் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோருக்கென எளிய மேக் அப்புகள் அவசியமானது தினமும் எண்ணெய் வடியும் முகத்துடன் செல்ல முடியாது.

எளிய மேக்கப் :

தினமும் பள்ளி மற்றும் கல்லுரி, வேலைக்கு செல்வோர்கள் தங்களை பராமரிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதன் பொருட்டு அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படையான பொருட்களை கைவசம் வைத்திருந்தால் போதுமானதுங்க.

பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இந்த அடிப்படை ஒப்பனை என்பது அவசியம் ஆகின்றது. வெய்யில் காலம், குளிர்காலம், சுற்றுப்புற மாசுக்கள், உடலில் ஏற்படும் சத்துக்குறைவு ஆகியவற்றால் அவர்களது சருமம் பொழிவு மங்கி காண்ப்படும்.

எண்ணெய் பசைகள் மற்றும் வரண்ட சருமம் ஆகிய சருமங்கள் உடையோர் உங்களுக்ககான சரியான அடிப்படை விசயங்களை பாலோ செய்தால் போதுமானது ஆகும்.

மேக் அப் கிட்க்ள்

எளிய மேக்கப் கிட்கள்:

எளிய மேக்கப் செய்யும் கிட்கள் எல்லாம் நலம் பயக்கும். ஆலோவீரா ஜெல்லானது வீட்டிலேயே தாயாரிக்கலாம். இதனை தினமும் குளித்து முடித்தவுடன் கைகள் கால், முகங்களில் பூசலாம். குளித்தபின் முகத்தில் ரோஸ் வாட்டர் சேர்த்தப்பின் ஆலோவீரா ஜெல் சேர்ப்பது சிறப்பானது. நாள் முழுவதும் மேக் அப் லாங் லாஸ்டிங்காக இருக்கவும் முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்க இது பயன்படுகின்றது. இதனை ஒரு டோனராகவும் பயன்படுத்தலாம்.

எளிய மேக்கப் கிட்களான ஆலோவீரா ஜெல்லு அப்பளை செய்தவுடன் முகத்திற்கு மாய்ச்சுரைசர் பயன்படுத்தலாம். வெய்யிலிலே வேலை எனில் சன்ஸ்கீரிம் லோசன் பயன்படுத்தலாம். இவை சருமத்தை வெய்யிலிருந்து காக்க உதவியாக இருக்கும். கண்களை பாதுகாக்க காஜல் அல்லது ஹோம் மேடு மை பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சியாகும். அழகு கொடுக்கும், கண்களில் உள்ள தூசுக்கள் மறையும்.

மேக் அப் கிட்க்ள்

முகத்திற்கு பவுடர் கொஞ்சம் போட்டு முகத்தைப் பொலிவுறச் செய்யலாம்.

தினமும் இரு முறை முகங்கள் கை கால்கள் கழுவுவது நல்லது. முகத்திற்கு டோனராக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். கல்ல மாவு, வேப்பிலை , கஸ்தூளி மஞ்சள், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து காலை மாலை இரு வேளைகளில் முகம் கழுவி வர முகம் பொலிவாகும். சருமத்திலுள்ள அழுக்குகள் மாயமாகும். மாசுக்கள் அனைத்தும் குறையும்.

லிப் பார்ம் இதழில் தடவிக் கொள்ளலாம். இதழ்கள் சிறப்பாக இருக்க பீட்ரூட் சாறுடன் செய்யப்பட்ட லிப் பார்ம்கள் பயன்படுத்தலாம்.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன