லாக்டவுன் செலிபிரட்டிகள் அலப்பரைகள் பாருங்க!

  • by

லாக்டவுன் காலத்தில்  மக்களுக்கு வீட்டிலேயே இருந்து போராடித்து போகும். பிள்ளைகள். பெற்றோர்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் மற்றும்  பேஸ் புக், டிவிட்டர் ஆகியவற்றில் மக்கள் அதிகமாக மூழ்கி கிடக்கின்றோம். இப்பொழுது லாக்டவுனில் செலிபிரட்டிகள் அனைவரும் அதிகமாக தங்கள் பதிவை கொடுத்து வருகின்றனர். 

மனிரத்னம் மக்களுடன் உரையாடல்:

 லாக்டவுன் காலத்தில்  இந்திய அளவில் இயக்குநர் மணி ரத்னம்  இயக்குநர் ரசிகர்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கொடுக்கின்றனர்.   இயக்குநர் மணிரத்னம் லாக்டவுன் காலத்தில் மக்களிடம் பேச முன்வந்துள்ளார். நடிகை சுஹாசினி மணிரத்னம் அவர்கள் மணிரத்னம் அவர்களிடம்  கேட்க வேண்டிய கேள்விகளை சுய அறிமுகத்துடன் வீடியோவா எடுத்து அனுப்புங்கள் அதற்கு இயக்குநர் விடைத் தருவார் என்று அறிவித்தார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கானப்பதில்கள் வெளியாகும் நேரத்தையு,  அறிவித்தார். 

நடிகர் மாதவன் அலைபாயுதே  படத்தின் 20ஆண்டை நிறைவை நினைவுப்படுத்தி கேள்விகளை எழுப்பினார். 

நமிதா கொடுத்த வேண்டுகோள்: 

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் வீடியோவைப் பகிர்ந்த நமிதா, “நாங்கள் எங்கள் தெருக்களுக்கு அருகிலும் அருகிலும் 40 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்தோம்.  நாங்கள் கை கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தோம்! அவை உண்மையில் பட்டினி கிடந்தன, தண்ணீரும் கூட இல்லை. உங்கள் அபார்ட்மெண்ட் அல்லது வாயிலுக்கு வெளியே குறைந்த பட்சம் தண்ணீர் மற்றும் பிஸ்கட் வைத்திருக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் உருக்கமாக மக்களிடம் கேட்டுக் கொண்டார். 

.இந்த விலங்குகளில் பல பலவீனமாகவும் காயமாகவும் இருந்தன. தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், இந்த வழிகள் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சார்ந்துள்ளது மனிதர்களாகிய நாம் அதனை உணர வேண்டும் அந்த ஜீவன்களுக்கு உதவ வேண்டும் என்பதை நமீதா வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: ஒற்றுமையான ஊரடங்கால் கொரானாவை வெல்வோம்!

பல பிரபலங்கள் மற்றும் விலங்கு காதலர்கள் இந்த ஊரடங்கின்  போது விலங்குகள் உயிர்வாழ உதவ தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும்படி வீடியோக்களைப் பதிவிட்டனர்.  சில நடிகர்கள் தங்கள் ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டனர் அந்த வகையில் சிம்பு லாக்டவுன் முடியும் பொழுது இன்னொரு மன்மதனாகப் பரிணமிப்பார். இவரை போன்றே   சத்தியராஜின் மகன் மற்றும் நடிகர் சிபிராஜூம் தனது ஒர்க் டவுன் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர். 

இதுபோன்ற வீடியோக்களால் மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு என்ற தனி ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்த வருகின்றனர். இது நல்ல டிரெண்டிகாக மக்கள் பயன்படுத்து வருகின்றனர்.  இது போன்ற பொழுது போக்கு அம்சங்கள் தற்பொழுதைய லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு செலிபிரட்டிகள் செய்யும் பன் வீடியோஸ் எல்லாம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

லாக்டவுனில் பலர்  வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றனர் அத்துடன்  போனில் தங்கள் நேரங்களை செலவிடுகின்றனர். யோகா செய்தல் அத்துடன் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒர்க் அவுட்கள் மற்றும் உடலுக்கு ஆற்றல்  தரும் நல்ல தூக்கம் போன்றவை எல்லாம் செய்யப்படுகின்றன. லாக்டவுனில் நாம் மன உலைச்சல் ஆக வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு தொலைக்காட்சியில் நல்லப் படங்கள் மற்றும் புத்தகங்கள் எல்லாம் படிக்கின்றனர். 

மேலும் படிக்க:இருமபுச் சத்துகளை உடலில் அதிகரிக்க வேண்டும்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன