கொரனாவால் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு

  • by

கொரனா பாதிப்பால்  இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  பீதி அதிகரித்து காணப்படுகின்றது. சீனாவில் கொரானா பாதிப்புக்குபின் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. உலகத்தில் இதுவரை 15,000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  இதில் 4 இலட்சம் பேருக்கு மேல் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரானா தொற்று  நோய் இதனை எதிர்கொள்ள உடலில் அதிக எதிர்ப்புச் சக்தி அவசியம் ஆகும்.  இது அனைவரையும் தாக்கும் பெரும் ஆட்கொள்ளி நோயாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மாஸ்க் போட்டால்  கொரானா தாக்காது என்பது வதந்தி,  கொரனா மனித உடலுக்குள் புகாமல் வெளியே இருக்கும் வரை  உயிரோடு இருக்கும். இதனை போக்க தும்மல், இருமல் இருக்கும் நபர்கள்  அணிந்தால் கொரானாவின் ஜெட் வேக பாய்ச்சலை தடுக்கலாம். 

மேலும் படிக்க: கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு: 

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பானது பெரிய அளவில் இது  பரவியுள்ளது 144 வது தடை உத்தரவால் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி, பள்ளி மற்றும்  அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. 

 தமிழ்நாட்டில் அனைத்து அடிப்படை தேவைப் பொருட்கள் அனைத்தும் பெறலாம். பெட்ரோல் கிடைக்கும். திருமணங்களை நடத்தலாம். தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நிற்கச் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மா உணவங்கள், பார்மஸி ஆகியவை திறந்திருக்கும் இது போன்ற உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் 95 பேருக்கும், தெலுங்கானாவில் 30க்கும் மேற்பட்டோரும், தமிழகத்தில் 12 பேருக்கும் 7 பேருக்கு என நாடு முழுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் நீதிமன்றங்கள் என அனைத்தும்  முக்கிய வழக்குகள் தவிர மற்ற அனைத்தும் கிடைக்கப் பெறலாம். கொரானாவை எதிர்த்து தமிழ்நாட்டை காக்க மத்திய அரசு சார்பாக ரூபாய் 900 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.

தனியார் லேப்கள் விலை நிர்ணயம்:

தமிழகத்தில் 4000க்கு பேருக்கு மேல் மருத்துவர்கள் கொண்ட பெரும் மருத்துவ குழுக்களை தயார் செய்தனர்.  நாடுமுழுவதும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. கொரானாவுக்கு தனியார் கொரானா பரிசோதனைக்கு தனியார் லேப்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 4500 ரூபாய் வரை மட்டுமே பெற வேண்டும். 

நாடு முழுவது ஸ்தம்பித்து நிற்கும் நிலையில்  பிஎஸ்என்எல் பிராண்ட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் இலவசமாக வழங்க அறிவித்துள்ளது. கொரானா தாக்கிய யாரேனும் வெளியே தங்கினால் அவர்களுக்கு தண்டனையானது உறுதியாகும். நாட்டில் கொரானாவை பாதிக்கப்பட்டோர் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அரசின் கரங்கள் மக்களை காக்க மெனக்கெடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது  ஆகும். இந்தியாவுக்குள் செல்ல உள்நாட்டு விமானங்கள் அனைத்து ரத்தாகின்றது. நாட்டின் வர்த்தகங்கள் எல்லாம் வறுத்தபடும் அளவுக்கு சரிந்து கொண்டிருக்கின்றது. நாடு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தடையை சந்திக்க உள்ளது குறிபிடத்தக்கது ஆகும். 

கொரானாவால் மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கின்றது. இப்படியே போனால் நாட்டில் உள்ள  அன்றாட பிழைப்பு நடத்தும் மக்களின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். 

மேலும் படிக்க: கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன