கொரோனா வைரஸுக்கு வழிவகுக்கும் குடிப்பழக்கம்..!

  • by
drinking habit increases the chance of getting affected by corona virus

கொரோனா வைரஸ் நம் நாட்டில் நுழைந்து காலம் முதல் இன்று வரை எல்லா மருத்துவர்களும் நமக்கு அறிவுரை சொல்வதில் இருக்கும் மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் “நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்” அதை தவிர்த்து “நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் செயல்களை முழுமையாக தவிர்த்திடுங்கள்”. இதை யார் சரியாக பின்தொடர்கிறார்களே அவர்கள், ஒருவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டாலும் உடனடியாக குணமாகி வீடு திரும்ப முடியும். அதுவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக மற்றும் அலட்சியமாக இருப்பவர்கள் உடல் நிலை மேலும் பாதிப்படையும்.

மதுப்பழக்கம்

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைந்து உள்ளார்கள். இதற்குக் காரணம் மது குடிப்பவர்களினால் வைரஸ் பரவுவது என்பதை தவிர்த்து, மதுப்பழக்கம் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இதனால் இந்த வைரஸ் தொற்று உங்களை தாக்கினாலும் உங்களை காப்பாற்றுவது மிகக் கடினமாகும். இதைக் கருத்தில் கொண்டுதான் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி மதுக்கடைகள் அனைத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் சமூக தொற்றாக பரவும் கொரோனா..!

புகைப்பழக்கம்

மதுப் பழக்கத்தைத் தொடர்ந்து புகை பிடிப்பதினாளும் மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதைத் தவிர்த்து உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கச் செய்து கொரோனா வைரஸ் தொற்று உங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. எனவே மதுப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பதே சந்தேகம்தான்.

உடனே கைவிடுங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் நம் நாட்டிலிருந்து போகும் வரையாவது புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும். இதைத் தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை உண்டு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை முழுமையாக தவிர்த்து எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

மேலும் படிக்க – வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

இதைத் தவிர்த்து அரசாங்கம் சொல்லும் வழிகளை பின்தொடர்ந்து உங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது எனவே இதை நன்கு அறிந்து எப்போதும் சமூக இடைவெளியை பின் தொடர்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன