காப்பியை இதைக் கலந்து குடித்துப் பாருங்கள் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.!

drinking coffee mixed with ghee will improve your health

அனைவருக்கும் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் எந்த அளவுக்கு நாம் காபியை உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு தீமைகளும் நமக்கு ஏற்படுகிறது. இதில் சேர்க்கப்படும் சர்க்கரை, காபி குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் என பிரச்சனைகள் இருந்தாலும் நமது மனநிம்மதிக்கும் புத்துணர்ச்சிகாக காபி குடிக்கிறோம். இத்தகைய ஆரோக்கியமற்ற காப்பியை ஆரோக்கியமான காப்பியாக மாற்றுவதற்கு அதில் ஒரு ஸ்பூன் நெய் போட்டால் போதும்.

ஆனால் இது அனைவருக்கும் ஏற்றதள்ள யார் டயட் அல்லது கீட்டோ டயட்டை மேற்கொள்கிறார்களே அவர்களுக்கு ஏற்ற பானமாகும். இவர்கள் இதை அறிந்து இவர்கள் காப்பியுடன் நெய்யை கலந்து குடித்தால் இவர்கள் உடம்பில் இருந்து கழிவுகள் வெளியேறி உடல் எடை குறைக்க முடியும். நெய் என்பது பண்டைய காலங்களில் ஓர் ஆயுர்வேத மருந்தாக இருந்தது, இப்போது நாம் அதை உணவுகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். நெய் செரிமானம் ஆவதற்கு மிக எளிய நேரமே எடுத்துக் கொள்கிறது இதனாலும் இதை காபியுடன் கலந்து குடிப்பதினால் நமக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை இது வரவிடாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க – கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

இதில் ஒமேகா-3 அதிகமாக இருப்பதினால் நம் உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரித்து நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உங்களின் மனநிலை மற்றும் ஹார்மோன் உற்பத்தியை இந்த பானம் செய்கிறது. இதில் கார்போஹைட்ரேட் மிகக் குறைந்த அளவு உள்ளதால் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

நாம் தொய்வு அடையும் நேரங்களில்தான் காப்பியை அருந்துவோம் இதனால் நாம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி உடல் ஆற்றல் அதிகரிக்க முடியும். அதுவே நெய்யை கலந்து காபியை குடித்தால் இது உங்களுக்கு இரண்டு மடங்கு ஆற்றலை தரும். எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுகள் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான் சிறந்த உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்வதினால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன