தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடியுங்கள்

  • by

தண்ணீரை தினமும்  வெறும் வயிற்றில் குடித்து வருதல்  அதனை கட கட குடிக்க கூடாது. முதல் சிப்பில் தண்ணீரை குடிப்பதைவிட கொஞ்சம் கொஞ்சமாக 7 முறை தண்ணீரை சுவைத்து நாக்கில் வைத்து முழுங்க வேண்டும்.  தாகம் எடுத்து தண்ணீர் குடிக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் அடையும். உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைக்கப் பெறலாம். 

ஆற்றல் தரும் தண்ணீர்:

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும். 

நீர்ச்சக்து அவசியம்:

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வரலாம. நீர்சக்துள்ள பொருட்களை சாப்பிட்டு வருதல் இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும்.   உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். மேலும் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வரலாம். ஆனால் மெதுவாக வாய்வைத்து தண்ணீரை  விழுங்க வேண்டும். , உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறையும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க – கம்பில் இருக்கும் அதீத நன்மைகள்..!

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடியுங்கள்:

தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடிப்பது நல்லது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் இயக்கத்திற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என அது தீர்மானித்து செயல்படுகின்றதோ அவ்வளவு தண்ணீர் குடித்தால் போதுமானது. அதிகமாக பேசும் ஆசிரியர்கள், பேச்சாளர்கள் ஆகியோர்க்கு தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும். சிறு நீர் கழித்தப்பின்  கொஞ்சம் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். உணவு சாப்பிடும் முன் அரைமணி நேரம் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் நீர் குடிக்க கூடாது. 

 உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்து   தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் குடிக்கலாம்.  தண்ணீரானது உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும். தண்ணீர் குறைப்பாட்டால்  உடலில் வறட்சி ஏற்படுகின்றது. நீர்ச்சக்தி அளவாக கொண்டுள்ளோர் முகமானது எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.  கொழுப்பை குறைத்து ஆரோக்கியத்தை பெருக்கும் சக்தி தண்ணீருக்குண்டு. உணவு இல்லாமல் வாழ முடியும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. 

மேலும் படிக்க – விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

தண்ணீருடன் வெந்தயம், சீரகம் மற்றும் கருப்பு வர திராட்சை ஊர வைத்து குடிக்கும் பொழுது தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். கழிவுகள் வெளியேறுதல் உடலில் வெப்பம் சீராக இயங்குதல் போன்றவை நடைபெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன