மருத்துவத்துறையில் மகத்துவமான பணி ஆற்றும் அருண்குமார்.!

  • by
Dr.arunkumar who is doing extra ordinary services in medical field

டாக்டர் அருண்குமார்  தமிழ்நாட்டின் மிகச் சிறந்த குழந்தைகள் நல மருத்துவராக இருக்கின்றார். கடவுளின் மரு உருவம் டாக்டர் என்பார்கள். அவர்கள் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவராக இருப்பது என்பது இன்னும் சிறப்பு மிக்கது ஆகும்.   ஏனெனில் குழந்தைக்ளுக்கு பாதுகாப்பு என்பது அவசியம் ஆகும். பீடியாட்ரிஸ் என்பவர் குழந்தைகள் குறித்து முழுமையான பயிற்சி பெற்று இருக்கும் துறை ஆகும். மேலும் இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு என்பது அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை அதனை இவர் சிறப்பாக செய்கின்றார். 

அலோபதி மருத்துவத்தில் சிறப்பு மருத்துவராக ஒவ்வொரு துறைக்கும் வல்லுநர்கள் இருப்பார்கள். அதுவும் குழந்தைகள் நலன் மருத்துவராக இருப்பது என்பது  மீண்டும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. மருத்துவத்துறையில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிறப்புத்தன்மை உண்டு அதில் குழந்தைகள் நலன் மருத்துவம் என்பது சிறப்பானது ஆகும். 

மருத்துவம் சம்மந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள டாக்டர் அருண்குமார் விடீயோக்களை பாருங்கள்

உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பு நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் குழந்தைக்கு எந்த குழந்தை மருத்துவர் சரியானவர்?என, உங்கள் தேடலைத் தொடங்குவதற்கு முன், இந்த வகையான மருத்துவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்திருப்போம். 

குழந்தை மருத்துவர்கள் என்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் மருத்துவர்கள், உடல், நடத்தை மற்றும் மனநல பிரச்சினைகள் உட்பட. சிறு சுகாதார பிரச்சினைகள் முதல் கடுமையான நோய்கள் வரை குழந்தை பருவ நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க அவர்களுக்கு சிகிச்சை முறையான பயிற்சி அளிப்பார்.

குழந்தை மருத்துவர்களுக்கு உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கான சிறப்பு திறன்களை வழங்கும் ஒரு கல்வி உள்ளது. அவர்கள் மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றப் பின் மீண்டும் மற்றும் குழந்தை மருத்துவத்தில் 3 ஆண்டு சிறப்பு படிப்பு முடித்து தேர்வுகள் மற்றும் மருத்துவமனை பயிற்சி முடித்து தங்கள் துறையில் சிறந்து செயல்பட்டு   அவர்களின் சிகிச்சையை தொடங்குவார்கள்.

டாக்டர் அருண்குமார் குழந்தை நல மருத்துவராக சென்னையில்  ஸ்டேன்லி மெடிக்கல் கல்லுரியில் படித்தார். இவர் பள்ளிப்படிப்பிலேயே மாவட்ட ரேங்க் ஹோல்டராக இருந்துள்ளார்.  தனது எம்.பி.பி.எஸ் படிப்பை டிஸ்டிங்சனில் முடித்த டாக்டர் அருண்குமார். போஸ்ட் கிரட்ஜூவேசனில் பெங்களூரு பீடியாட்ரிக்ஸ் சொசைட்டி  வழங்கும் சிறந்த பி.ஜி கிராஜூவேட்டாக பீடியாட்ரிக்ஸ் துறையில் சிறந்து விளங்கி பட்டம் பெற்றார். 

மேலும் படிக்க – கொரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..!

டாக்டர் அருண் குமார் பெங்களூரில் சிறந்த கார்டியலஜி நிறுவனமான நிமான்ஸ் மற்றும் ஜெயதேவா இன்ஸ்டியூட் ஆப் கார்டியலஜி  மற்றும் கிட்வி இன்ஸ்டியூட் ஆப் ஆங்காலஜி ஆகிய இன்ஸ்டியூட்களில் சிறந்து பயிற்சி பெற்றார். இத்துடன் இந்தியாவின் சிறந்த  கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்று ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் பீடியாட்ரிஸ் கன்சல்டண்ட் ஆக 2015 முதல் பணியாற்றுகின்றார். 

சிறந்த டயட் ஆலோசனைகள்:

இவர் பல்வேறு மருத்துவ கலந்துரையாடலில் கலந்து கொண்டு  மருத்துவ ஆலோசனைகள் எல்லாம் சிறப்பாக வழங்கிவருகின்றார். இவர் உடல் பருமன் சிக்கலைப் போக்க மக்களுக்கு  பாலியோ டயட் ஆலோசகராக இருந்து பலருக்கு முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளார். டாக்டர் அருண் ஒபிசிட்டி, டைப்ட்டிஸ், மெடாபாலிக் சிண்டோரம், பேட்டி லிவர், பிசியோஎஸ், இன்பெர்ட்டிலிட்டி எனப்படும் மகளிருக்கான சிறந்த ஆலோக்சனைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றார். 

5000 பேர்க்கு சிகிச்சை : 

டாக்டர் அருண் 5000 பேருக்கு மருத்துவ ஆலோசகராக வழிகாட்டியுள்ளார். ஒபிசிட்டி, டயாப்ட்டிஸ் கட்டுப்பாடு, பிசிஒஎஸ் எனப்படும் கருப்பையில் சினைக்கட்டியால் குழந்தைப் பேரு  பிரச்சனைகளை எல்லாம் குணப்படுத்தியுள்ளார். டாக்டர் அருண் 208 இல் 2018 ஆம் ஆண்டில் பாலியோகான் அமைப்பை நடத்தினார். 

மேலும் படிக்க – ஏப்ரல் 14கிற்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்..!

தன்னிகரற்ற சேவை:

இவரின் தன்னிகரற்ற சேவையை ஊடகங்களும் , ஊர் மக்களும்  பராட்டி இவரை பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதுண்டு. இவர் ஊடகங்களில் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். சமூக ஊடகங்களிலும் இவரைப் பின்பற்றி மக்கள் பல  ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். இரண்டு லட்சம் வரையிலான மக்கள் இவரை யூ டியூபில் பின்பற்றி இவரின் ஆலோசனைகள் பெறுகின்றனர். 

கொரனாவுக்கான சிறப்பு  ஆலோசனைகள்: 

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரிக்கையில் அது குறித்து   இவர் தனது ஆலோசனைகளை மக்களுக்கு தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் ஸ்பார்க் லைவ் Spark.ive   மூலம் மக்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றார். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன