வரி, நிதி மற்றும் தொழில் சார்ந்தவைகளில் சந்தேகமா?

  • by

பட்டயக் கணக்காளர் (Chartered Accountant)என்பது தனித்தன்மை வாய்ந்த ஒரு தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு கொண்ட பதவியாகும். பட்டயக் கணக்காளரை, பட்டயக் கணக்கறிஞர் என்றும் அழைப்பதுண்டு. பட்டயக் கணக்காளர்கள் அரசு அல்லது தனியார் உயர் நிறுவனங்களில் வரிமுறைமை, நிதிக்கணக்கியல், வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல கணக்கியல், நிதியியல் போன்ற துறைகளில் உயர் பணியில் அமர்த்தப்படும் பொறுப்புடையவர்கள்.

பட்டய கணக்காளருக்கான பட்டம் உலகில் மிகவும் மதிப்புமிக்க பட்டபடிப்புகளில் ஒன்றாகும். சவாலான மற்றும் கடினமான தேர்வுகளை இது கொண்டுள்ளது இதில் வெற்றி பெற வேண்டும் எனில் அதிக மன உறுதி, படிப்பில் கவனம் தேவை. எனவே தான் நிதி மற்றும் தொழில் துறையில் பட்டய கணக்காளரின் தேவை இன்று உலக அளவில் முன்னிலையில் உள்ளது. பட்டய கணக்காளர் (CA) படித்து முடித்தவுடன் நீங்கள் ஆடிட்டராக செயல்படலாம் அல்லது பெரிய நிறுவனங்களில் கணக்காளர் பதவி வகிக்கலாம். இதை நன்முறையில் படித்து இதில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து பலர் இன்று வாழ்வில் நன்முறையில் உள்ளனர்.

வருமான வரி தணிக்கை :

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறி விலகினால் சரியாக இருக்கும். ஒருவரின் ஆண்டு வருமானம் 1 கோடி என்றால், நீங்கள் சென்ற ஆண்டுகளின் செலவிற்கான ஆதாரங்களான பில்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அத்தகைய பில்களை ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளர் அவர்கள் ஆய்வு செய்து, உங்கள் வருமானத்தில் அது சரியான செலவு தானா என அவர் ஆராய்வார். பின்பு அந்த பில்களை பட்டய கணக்காளர் கணக்கீடு செய்து குறிப்பிட்ட அளவு வரி செலுத்த வேண்டும் என்று கூறுவர். பின்னர் அதை அரசிற்கு நீங்கள் மறுக்காமல் கட்ட வேண்டும்.

வரி தணிக்கை வடிவங்கள் :

  • கஸ்டம்ஸ் அண்ட் டைரக்ட் டாக்ஸ்(Customs and direct tax) இதை தனிப்பட்ட நபரின் தணிக்கை (Individual audit) என்றும் அழைப்பர்.
  • கம்பெனி தணிக்கை (Indirect tax & assessment)

என்று பரவலாக இரு வகைகள் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு ஏற்றாற்போல் இவற்றுள் வேறுபாடுகள் ஏற்படலாம்.

This image has an empty alt attribute; its file name is shutterstock_1745216318-1-1024x652.jpg

வருமானம் கணக்கிடும் முறை :

பின்வரும் ஐந்து வகைகளில் ஒருவரது ஆண்டு வருமானம் கணக்கிட பட்டு, அதில் சில பல விலக்கு அளித்த பின், கிடைக்கும் நிகர தொகையில் வரி விதிக்கப்படும். பொதுவாக தனிநபர்கள், வருமானம் கணக்கிடப்படும் போது, விதியில் பிற பாகுபாடுகள் கிடையாது.

வீட்டு வாடகை வருமானம் :

  • Income from House property – ஒருவருக்கு இருக்கும் சொந்த வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை பணம்.

வியாபார அல்லது தொழில் வருமானம் :

  • Income from Business/profession – செய்யும் தொழிலிலிருந்து கிடைக்கப்பெறும் லாபம்.

சொத்துக்கள் மூலம் வரும் லாபம் :

  • Income from capital gains – வீடு, நகைகள், பங்குகள் விற்றதனால் ஏற்படும் லாபம்.

ஊதிய வருமானம் :

  • ஒரு பணி செய்து பெறும் ஊதியம், வருமானமாக கணக்கிடப்படும்.

இதர வருமானம் :

  • Income from other sources – வங்கி டெபாசிடிலிருந்து கிடைக்கும் வட்டி பணம், பரிசு தொகை போன்றன.

ரித்தேஷ் கக்கரா அவர்கள் 4 வருடங்களுக்கும் மேல் பட்டய கணக்காளராக அனுபவம் பெற்றுள்ள ஒரு நிபுணர். நீங்கள் வருமான வரி சார்ந்த தொழில் செய்கிறீர்கள், அல்லது உங்கள் தொழில் வரி சார்ந்த சந்தேகங்கள், எப்போது முதலீடு செய்வது, நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களையும் நீங்கள் ரித்தேஷ் கக்கராவிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.

வரி, நிதி சார்ந்த சந்தேகங்களுக்கு ரித்தேஷ் கக்கராவை தொடர்புகொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன