ஜாதகத்தில் இருக்கும் தோஷம் மற்றும் தீர்வு..!

  • by
doshas and remedies in your horoscope

பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நேரம், நாள், தேதி போன்றவைகளைப் பொருத்து அவர்களின் ஜாதகம் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் இருந்து மற்றொருவர் ஜாதகத்தில் ஏராளமான வேறுபாடுகள் உருவாகிறது. இதனால் நாம் பிறந்த நாள், நேரம்  மற்றும் தேதியை பொறுத்து நம்முடைய வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலர் பிறந்த நாள், தேதி அல்லது நேரம் சரியில்லை என்றால் அவர்கள் ஜாதகத்தில் தோஷம் உண்டாகிறது. அதை கண்டறிந்து அதை எப்படித் தீர்ப்பது போன்ற பரிகாரங்கள் ஜோதிடத்தில் இருக்கிறது.

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் என்பது திருமணமாகும் வயதில் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் மற்றும் திருமண பேச்சு எடுக்கும்போதெல்லாம் அபசகுனமாக எதிர் விளைவுகள் ஏற்படுபவர்கள் மற்றும் திருமணம் தள்ளிப் போதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இருக்கும் தோஷமாகும். இதைத் தடுப்பதற்கு சிவப்பு நிற ஆடையை அணிந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டும்.

கால சர்ப்ப தோஷம்

ஒருவரின் ஜாதகம் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் அமைந்தால் அவர்களுக்கு காலசர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள், இன்னல்கள், தடங்கல்கள் போன்றவைகள் உண்டாகும். இது அவர்களின் வாழும் இடத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் மாறுபடுகிறது, இருந்தாலும் இதை நினைத்து பெரிதாக பயப்படத் தேவையில்லை. சிறந்த ஜோதிடர்களின் அறிவுரையை கேட்டு கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை செய்தால் போதும்.

நாடி தோஷம்

திருமணத்திற்கு முன்பாக ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நாடிப் பொருத்தம் பார்க்க வேண்டும். இது ஒருவேளை தவறாக இருந்தால் அது அவர்களை பாதிப்பதை விட அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை அதிகமாக பாதிக்கிறது. எனவே இந்த தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்து அதன் பிறகு திருமணம் செய்வது சிறந்தது. ஒருவேளை திருமணம் செய்திருந்தால் அதை தடுப்பதற்கான பரிகாரங்களை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க – எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

சனி மற்றும் ராகு தோஷம்

ஒருவர் எப்போது ராகு மற்றும் சனி ஒரே வீட்டில் இருக்கும்போது பிறந்திருக்கிறாளோ அவர்களுக்கு ஸ்ராபித் தோஷம் உண்டாகிறது. இது முற்காலத்தில் செய்த தீய செயல்களினால் இக்காலத்தில் இவர்களுக்கு கிடைத்த தண்டனையாக பார்க்கப்படுகிறது. இதனால் எப்போதும் ஒரு விதமான தீய சாபத்தை சுமந்துகொண்டே பயணிக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக நாம் ராசிக் கற்களை அணிந்து கொள்ளலாம்.

உங்கள் ஜாதகத்தில் இருக்கும் மிகப்பெரிய மற்றும் உங்களை அதிகமாக கஷ்டப்படுத்தும் தோஷங்கள் இதுவாகும். இதை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை செய்வதன் மூலமாக இதன் தாக்கத்தை நம்மால் தடுக்க முடியும். எனவே சிறந்த ஜோதிடரின் ஆலோசனையை கேட்டு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை கண்டறிந்து அதற்கான உடனடி தீர்வை அளியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன