மதுரை மாநகராட்சியின் வீட்டுக்கு வீடு காய்கறி திட்டம்..!

  • by
door step vegetable delivery in madurai

சமூக இடைவெளியை எல்லோரும் கடைபிடித்து, தங்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் அறிவித்துள்ள நேரத்திற்குள் வாங்கிக் கொள்ள வேண்டும். இது தவறும் பொழுது காய்கறிகளை வாங்குவதற்கான கூட்டம் அதிகரிக்கிறது, அதைத் தவிர்த்து சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் அனைவரும் முட்டி மோதிக் கொண்டு காய்கறிகளை வாங்குகிறார்கள். இதை தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சி ஒரு செயலை செய்துள்ளது.

வீட்டுக்கு வீடு காய்கறி

மதுரையில் உள்ள கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் தள்ளு வண்டி மூலமாக வீட்டுக்கு வீடு காய்கறிகளை விற்கும் பணிகள் தொடங்கி உள்ளார்கள். இதன் மூலமாக வெறும் 250 ரூபாய்க்கு கிட்டத்தட்ட 19 வகையான காய்கறிகள் கிடைக்கின்றன. அதில் தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு என அத்தியாவசிய காய்கறிகள் அனைத்தும் இந்த 250 உட்பட்ட பையில் கிடைக்கின்றது.

மேலும் படிக்க – இதுவரை உலகில் பரவி உள்ள வைரஸ்களின் வரலாறுகள்..!

வேளாண்மை திட்டம்

மதுரை ஸ்மார்ட் சிட்டி மற்றும் மேலாண்மை திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் குறைந்த விலையிலும் காய்கறிகளை வாங்கிக் கொள்ள முடியும் மற்றும் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள். இதை மற்றவர்களும் பின் தொடர்ந்து சமூக இடைவெளியை அதிகரிக்கலாம். தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் கடைகள் மதியம் 1 மணிவரை தான் திரந்திருக்கும் என புதிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளார்கள். இதன் மூலமாக கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே இதுபோன்ற தள்ளுவண்டி காய்கறி திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்

சில நாட்களுக்கு முன்பு தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்கும் வியாபாரிகள் வண்டிகளை கீழே தள்ளி அவர்களை காவல் துறையினர் அடித்துத் துரத்தினார்கள். இதை அரசாங்கம் கண்டித்து தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டும். அதையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கையுறைகள், முகக் கவசங்கள் போன்ற அனைத்தையும் அணிந்து இது போன்ற வியபாரங்களை செய்ய அனுமதித்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க – பாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

தேனி உழவர் சந்தை

அதேபோல் தேனி உழவர் சந்தையில் 150 ரூபாய்க்கு கிட்டத்தட்ட 18 வகையான காய்கறிகளை தருகிறார்கள், ஒவ்வொன்றும் அந்த விலைக்கு மற்றும் எடைக்கு ஏற்ற படி விற்கிறார்கள். எனவே இதுபோன்ற உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளை மொத்தமாக எடுத்து மக்கள் இருக்கும் பகுதிகளில் விற்பதன் மூலமாக கூட்ட நெரிசலை நம்மால் குறைக்க முடியும்.

இதுபோல் கிராமப்புறங்களில் அதிக அளவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை அவரவர்களே தூய்மையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலமாக அவர்கள் வியாபாரமும் அதிகரிக்கும், சமூக இடைவெளி அதிகரித்துக் கொரோனா வைரஸ் தொற்று வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன