தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்களுக்காகவே தேங்காய்ப்பால் ஸ்பிரே.!

don't you like coconut oil? use this better alternative coconut milk spray

நாம் நம் தலைமுடி ஆரோக்கியத்திற்காக காலம்காலமாய் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய். ஆனால் ஒரு சிலருக்கோ தேங்காய் எண்ணெயை கண்டாலே வெறுப்பு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் எப்போதெல்லாம் இவர்கள் தேங்காய் எண்ணையை தங்கள் தலையில் தடவி கிறார்களோ அப்போதெல்லாம் தேங்காய் எண்ணெய் வடிந்து தங்கள் முகத்தில் மேல் வடிவதினால் இவர்களின் அழகு கெட்டுப் போவது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு வறுமையில் வாடிய பெண் போல காட்சியளிக்கும். இதனால் சில பெண்கள் தேங்காய் எண்ணையை தடவுவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால்  தேங்காய் எண்ணெயின் சக்தி அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக தேங்காய்பால் ஸ்பிரே இருக்கிறது அதை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

நாம் தேங்காயை எடுத்துக் கொண்டு அதை நன்கு அரைத்து பின்பு அதை வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு உங்களுக்கு தேவையான இயற்கை எண்ணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ்மேரி அல்லது மிளகுக்கீரை போன்ற எண்ணெயாக இருந்தாலும் சரி இதில் ஏதாவது ஒரு எண்ணை எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டுக்கொள்ளுங்கள் பின்பு தேங்காய் பாலையும் அதில் கலந்து நன்கு குலுக்க வேண்டும் இரண்டும் ஒன்றோடு இணையும் வரை குலுக்க வேண்டும்.

மேலும் படிக்க – தூங்குவதற்கான எண்ணங்கள் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளதா..!

அவ்வளவுதான் தேங்காய் பால் ஸ்பரே ரெடி இதை நீங்கள் உங்கள் தலையில் ஸ்பிரே மூலமாக பயன்படுத்தலாம் பிறகு அதன் தேவை முடிந்தபின்பு இதனை குளிர்சாதன பெட்டிக்குள் வைக்க வேண்டும். பிறகு எப்போதெல்லாம் உங்களுக்கு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதை எடுத்து நன்கு குலுக்கிய பின் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் சக்தியை விட இந்த பாலின் சக்தி இரண்டு மடங்கு அதிகமாக செயல்படும்.

இந்த ஸ்பிரேவில் அதிக அளவிலான புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் முடியின் வேர் வரை சென்று வலுப்படுத்த உதவுகிறது. மேலும் மெல்லிய முடி, உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை கூட இது சரி செய்கிறது. இந்த தேங்காய் பால் ஸ்பிரே உங்கள் தலைக்கு ஏற்ற ஷாம்பு அல்லது கண்டீஷனர் கூட பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்.!

கடையில் விற்கும் ஏதேதோ பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டிலேயே இதுபோன்ற இயற்கை குணம் கொண்ட மருத்துவ எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன