ஜூம் செயலியால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

  • by
don't use zoom app for video calling purpose, its dangerous

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதினால் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை பற்றிய தகவல்களை ஜூம் என்று செயலியின் மூலமாக தங்களது மேலதிகாரிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள். இதை தவிர்த்து கொரோனா பாதிப்பினால் எல்லோரும் வீட்டில் இருப்பதினால் படிப்பு சம்பந்தமான விஷயங்களை பகிர்வதற்காக ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் ஜூம் என்ற செயலியை இந்தியாவில் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை எல்லோருக்கும் அறிவுரை கூறியுள்ளது.

தகவல் திருட்டு

ஜூம் என்ற செயலியின்ன் மூலமாக கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி வருகிறது. இதை தவிர்த்து இந்த தகவல்கள் அனைத்தும் டார்க் வெப் என்று அழைக்கப்படும் திருடர்கள் அதிகமாக வாழும் இனைய உலகத்தில் விற்கப்படுகிறது, அதுவும் வெறும் மூன்று ரூபாய்க்கு ஒரு தகவல்களை இவர்கள் விற்கிறார்கள். குறைந்த விலையில் கிடைப்பதால் நமது தகவல்கள் மிக எளிமையாக இணைய தளத்தில் இருக்கும் ஏமாற்றுக்காரர்கள் வாங்கி நம்முடைய செல்போன்களில் இருந்து பணத்தை திருடுவார்கள்.

மேலும் படிக்க – அமர்களமாக்கும் அளில்லா ட்ரோன் தக்ஷா

பாதுகாப்பில்லாத செயலி

நாம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவைகளில் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்கிறது. இடையே இருக்கும் சர்வர் கூட நாம் என்ன அனுப்புகிறோம் என்பதை படிக்க முடியாது. ஆனால் இதே தொழில்நுட்பத்தை சார்ந்ததுதான் ஜூம் என்று தவறான கருத்துகளை வெளியிட்டு மக்களிடையே இதை பிரபலப்படுத்தினார். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது டிரான்ஸ்மிஷன் என்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாகவே செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் சர்வரை ஹாக் செய்தால் போதும் அதில் இருக்கும் தகவல்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

குழு காணொளி

ஜூம் செயலியை நாம் பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் காணொளியில் பேசலாம், மற்ற செயலிகளில் அதிகபட்சமாக நான்கு பேரிடம் மட்டுமே பேச முடியும் ஆனால் இதில் கிட்டதட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நாம் ஒரே நேரத்தில் பேசமுடியும். இதனாலேயே இந்த செயலி மிகவும் பிரபலமாகவும் மற்றும் எல்லோரின் மொபைல்களிலும் இருக்கிறது. அதைப்போல் இதன் மூலமாக காணொளி அழைப்புகளை செய்வதன் மூலமாக இடையிடையே குழுவில் தொடர்பில்லாத நபர் காணொளி அழைப்பில் இணைந்து ஆபாச படங்களை வெளியிட்டு வருவதாகவும் ஒரு சிலர் கூறியுள்ளார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இதை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார்கள்.

பேஸ்புக் நிறுவனம்

ஜூம் மூலமாக திருடப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் ஒரு சிலர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலமாக ஜூம் மற்றும் பேஸ்புக் இருவரும் இணைந்து இந்தத் தவறுகளை செய்கிதுள்ளார்களா அல்லது இது தற்செயலாக நடந்ததா என்ற விசாரணையும் செய்து வருகிறார்கள் இருந்தும் ஃபேஸ்புக் இதற்காக மன்னிப்புக் கோரி அபராதத் தொகையையும் செலுத்தியுள்ளது. ஆனால் ஜூம் செயலி இன்னும் விசாரணையில் இருக்கிறது, இருந்தும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – வெக்கையை குறைக்கும் வெட்டிவேர் பண்புகள்

என்னென்ன தகவல்

இவர்கள் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் அந்தரங்க காணொளிகளை இந்த ஜூம் ஆப் வெளியிடும் தகவல்கள் மூலமாக திருடுகிறார்கள். அதே போல் நம்முடைய வங்கி கணக்கின் விவரங்கள் மற்றும் ரகசிய எண் என எல்லாவற்றையும் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள். உங்களிடம் திருடுவதற்கான தகவல்கள் இல்லை என்றாலும் இந்த செயலியினால் கேமரா மூலமாக உங்களை கண்காணிக்க முடியும். எனவே இதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஜூம் செயலியை உடனே டெலீட் செய்திடுங்கள்.

இதற்கு மாற்றாக நீங்கள் கூகுள் டியோ, வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இதன்மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட காணொளிகளை நம்மால் மேற்கொள்ளமுடியும் அதை தவிர்த்து இது மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் செயலியாகும். எனவே உங்கள் அந்தரங்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் இதுபோன்ற செயலிகளை முற்றிலுமாக தவிர்த்து பாதுகாப்பாக இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன