வெயிலை தணிக்க வெளிநாட்டு பானங்களா? வேண்டவே வேண்டாம்!!!

  • by
don't drink foreign cool drinks fight summer

“வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி “… என்ற பாடலைக் கேட்ட உடனே நம் அனைவருக்கும் நினைவில் வருவது கோடை காலம் தான். கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வரவிருக்கும் வெயிலை சமாளிக்க நாம் என்னென்ன உணவுகள் உண்ண வேண்டும் என்பதை தெளிவாக தயார் செய்து கொள்ளவேண்டும். அதேசமயம் எதை உண்ணக் கூடாது என்ற கவனமும் அவசியம். 

வெயில் காலங்களில் குளு குளு ஏசியில்  வேலை பார்ப்பவர்கள் முதல் 103 டிகிரி வெயில் வேலை பார்ப்பவர்கள் வரை அனைவருக்குமே சூட்டைத் தணிக்க ஒரு பானம் தேவைப்படுகிறது.

நம்ம ஊரில் கிடைக்கும் இளநீரும் பதநீரும் கொடுக்காத குளிர்ச்சியா இந்த வெளிநாட்டு பானங்கள் தரப் போகின்றன.

மேலும் படிக்க – தினமும் சுண்டல் சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!

வெளிநாட்டு பானங்களின் வியாபார யுக்திகள்;

“தாகம் எடுத்தால் தண்ணீர் தேடக்கூடாது” எங்கள் நிறுவனத்துடன் குளிர்பானத்தை மட்டும் தான் தேட வேண்டும், என்று விளம்பரம் செய்து வெள்ள நுரை ததும்பத் ததும்ப பாயும் வெளிநாட்டு பானங்களில் விளம்பரங்களை கண்டு ஏமார்ந்து போகிறோம் நாம்.  இந்தியாவில் ஒரு வருடத்தில் மனிதன் சராசரியாக 12 லிட்டர் வெளிநாட்டு பானம் அருந்துவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதுவே அமெரிக்காவில் 1665 லிட்டர்கள் என்ன ஜெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் அளவுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டு பானங்களில் விற்பனையை அதிகரிக்க சந்தை நிறுவனங்கள் முடிவு செய்து கொண்டிருக்கின்றன. அதற்காகத்தான் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகளையும் கிரிகேட் வீரர்களையும் வைத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அந்த பானங்களால் உண்டாகும் கேடுகளைப் பற்றி யாரும் வாய் திறக்க முன்வரமாட்டார்கள். 

வெளிநாட்டு பானங்களின் விபரீதங்கள்;

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று குளிர்பானங்கள் அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப்  பட்டியலிட்டு இருந்தது.

  • வெளிநாட்டு பானங்களை அருந்தும் நபருக்கு பிறரை காட்டிலும் 61 சதவீத இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்.
  •  ஒரு பாட்டில் பானத்தில் குறைந்தபட்சம் ஆறு ஏழு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையானதை விட அதிக கலோரிகளை அள்ளித்தரும் அந்த சர்க்கரையால் விரைவிலேயே சர்க்கரை நோயும் வந்து விடுகிறது.
  • வெளிநாட்டு பானங்களின் சிறப்பே புளிப்புச்சுவை தான் ஆனால் அந்த புளிப்புச்சுவை உண்டாக்க சேர்க்கப்படும் உப்பு மனித உடலின் எலும்புகளில் அழித்து ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற சிக்கலை வரவைக்கிறது.
  • நாகரீக கலாச்சாரத்தில் தன்னை மிகைப்படுத்தி காட்டிக் கொள்வதற்காக ஆண்களைவிட பெண்களை இந்த பானங்களை அதிகமாக அருந்துகிறார்கள். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் மற்றும் உப்புகள் மாதவிடாய் சுழற்சியை சிதைத்து சினைப்பை நீர்க்கட்டிகளை ஏற்படுத்துகிறது.

 கணைய புற்றுநோய் வருவதற்கும் அடித்தளமாக அமைகிறதுஇந்த வெளிநாட்டு பானம்.

மேலும் படிக்க – ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

குளிர்பானங்களுக்கு மாற்றாக வரும் செயற்கை பழச்சாறுகள்;

வெளிநாட்டு பானங்களை பற்றி தெரிந்த பலர்  இவைகளை விட்டு விலகி பழச்சாறு தான்ஆரோக்கியம் என்று முடிவுசெய்து அதற்கு மாற தொடங்கியுள்ளனர். ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களோ பழச்சாற்றை விதவிதமாக சந்தைப்படுத்த தொடங்கியிருக்கின்றன. தோட்டத்திலிருந்து நேரடியாக பறித்து பிரிசவேட்டிவ் ஏதுமில்லாமல் அப்படியே,பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறு இது என விளம்பரப்படுத்தும் சந்தைகள் அதில் நடக்கும் செயற்கை தொழில்நுட்பத்தை நிச்சயமாக சொல்ல மாட்டார்கள். அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.

பழத்தை கழுவி அதிலிருந்து சாற்றை எடுத்து பழத்தின் எண்ணெய் தன்மையை நீக்கி விடுகிறார்கள்.

நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமெனில் அதிலுள்ள ஆக்ஸிஜனை வெளியேற்றி ஆகவேண்டும். அதாவது பால் பதப்படுத்துவது போல படுத்துகிறார்கள். அதில் இயற்கையாக இருக்கும் கசப்புத் தன்மையை நீக்கி ,அமிலத் தன்மையைக் குறைத்து அல்லது கூட்டியோ சீராக்கி கொதிக்கவைத்து பிறகு குளிர்வித்து விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல எந்திரங்கள் பயன்படுகின்றன. இப்படித்தான் பழங்களை படாதபாடு படுத்தி கடைசியாக பழச்சாற்றை பெறுகின்றன.

 இந்தப் பழ கான்சன்ட்ரேட்டை தான் நம்மூரில் உள்ள பல குளிர்பான நிறுவனங்கள் வாங்கி அதனுடன் நீர் மற்றும் அமிலத்தை சரிசெய்யும் பொருட்களையும் சேர்த்து பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்கின்றனர் .

பிரேசில் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் கொண்ட பழச்சாறு குளிர்சாதன வசதி கொண்ட கப்பல்களின் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக நம் இந்திய தண்ணீர் தெளிக்கப்பட்டு இதுதான் இயற்கை பானம் என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது .

துவைத்துப், பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட நம் தோட்டத்தில் இயற்கையாக விளையும் கொய்யா எவ்வளவு மேலானது.

மேலும் படிக்க – தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் ஆரோக்கியம். எப்போதேனும் அவசரத்துக்கு தாகம் தணித்துக் கொள்ள மட்டுமே இந்த பானங்கள் சரியானது. பெட்டி பெட்டியாக வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் புதைத்து வைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்த பயனும் இல்லை. மாறாக நம் உடல்நலம் தான் கெட்டுப் போகிறது.

வெளிநாட்டு பானங்களை தவிர்ப்போம்.இதைபற்றிய விழிப்புணர்வை நம் குழந்தைகளிடையே கண்டிப்பாக கூறவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன