கொரோனா வைரசை கண்டு பயப்படாதீர்கள்..!

  • by
don't be feared of corona virus

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க இருக்கும் நாடுகளில் பெரிதாக பரவி உள்ளது, அதை தவிர்த்து பல லட்சம் மக்களையும் பாதித்துள்ளது. என்னதான் இந்த வைரஸ் பலபேரை பாதித்தாலும் உலகம் முழுக்க ஒப்பிடுகையில் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அப்படி இதன்மூலமாக உயிரிழந்தவர்கள் ஒன்று முதியோர்களாக இருப்பார்கள், இல்லை எனில் ஏற்கனவே ஏதேனும் உடல் பிரச்சினைகள் உள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் நீங்கள் இந்த வைரஸ் தொற்றிய நினைத்து கவலைப்படத் தேவையில்லை.

பயத்தை துறந்து விடுங்கள்

கொரோனா வைரஸை கண்டு பயந்தால் உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதுவே உங்கள் உடலை சீர்குலைக்கும், எனவே எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் கொரோனா வைரசை எதிர்கொள்ளுங்கள். மரணம் என்பது எல்லோரின் வாழ்க்கையில் நிகழக்கூடியதுதான் ஆனால் அது ஏற்படும் நாளை நினைத்து பயந்தால் உங்கள் மரணம் மிக விரைவில் உங்களை அடையும். எனவே எப்போதும் எதையும் எதிர்நோக்கி எல்லாவற்றையும் துறந்து வாழுங்கள்.

மேலும் படிக்க – ராகி மால்டில் மருத்துவ குணங்கள்..!

வருமுன் காப்போம்

அரசாங்கம் சொல்வதை அப்படியே பின்பற்றினாலே நாம் எந்த ஒரு பயமும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வருமுன் காப்பதே சிறந்தது. எனவே இந்த வைரஸ் தொற்று உங்களை தாக்காமல் இருப்பதற்கு இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவி இருக்கும் இடங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதை தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இது அனைத்திற்கும் மேலாக ஒருவேளை நீங்கள் வெளியே சென்று வீடு திரும்பினால் உங்கள் கைகள், கால்கள் போன்ற அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்திவிட்டு நுழையுங்கள்.

தூய்மையாக இருங்கள்

வெளியே செல்லாவிட்டாலும் உங்களை தூய்மையாக பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்கள் முழுமையாக நம் நாட்டை விட்டு வெளியேறினாலும் இது போன்ற தூய்மையான செயல்களை பின்தொடருங்கள். வாங்கும் பொருட்கள் முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் சுத்தப்படுத்திய பிறகு வீட்டிற்குள் அனுமதியுங்கள். சாப்பிடுவதற்கு முன்பும் மற்றும் சாப்பிட்ட பிறகும் கைகளை நன்கு கழிவுங்கள். கழிவரைகளை பயன்படுத்தியவுடன் உங்களை சுத்தப்படுத்துங்கள். அதேபோல் வீட்டையும் மற்றும் காய்கறிகளை எப்போதும் தண்ணீர் கொண்டு கழுவுங்கள். இது அனைத்தையும் சரியாக செய்தாலே உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கிருமியும் உள் நுழையாது.

மேலும் படிக்க – சீனா கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தியது..!

மற்றவர்களுக்கு உதவுங்கள்

நம்முடைய அழிவிற்குக் காரணம் பயம் தான், எனவே பயத்தை முழுமையாக துறந்து மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். பயத்தைப் போக்குவதற்கான யோகா பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களை திசை திருப்புங்கள். வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடுங்கள், எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து உங்கள் வீடு மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக மாற்றுங்கள்.

இந்த அழிவைத் தரும் பயத்தை போக்கி வீட்டிற்குள் மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள். பலநாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்களை காட்டிலும், பயத்தினால் இருதயம் பலவீனமாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே பயத்தை முழுமையாக போக்கி ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன