தமிழ் சினிமா பிரபலங்களில் கொரோனா நன்கொடை..!

  • by
donations of tamil celebrities for corona virus crisis

இந்தியாவை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். இதை தவிர்த்து சுகாதாரத் துறையினர், மத்திய மற்றும் மாநில அரசு தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் இணைந்துள்ளார்கள். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாம் எந்த வேலைகளையும் செய்யாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நம்முடைய பொருளாதார மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது, இதைத் தவிர்த்து அன்றாட வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளர்களின் வருமானம் முடங்கிருக்கிறது. இதை சரி செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் நன்கொடைகளை கேட்டு வருகிறது. இந்த அறிவிப்பால் தமிழக நடிகை, நடிகர்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ததுள்ளார்கள்.

மக்கள் ஆதரவு

ஏழை, பணக்காரன் என பாகுபாடு ஏதும் இல்லாமல் உழைத்த பணத்தை மக்கள் அதிகமாக செலவு செய்யும் ஒரு துறை எதுவென்றால் அதுதன் சினிமா துறை. சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தன் உறவினர்களாக பார்த்து கொண்டாடப்படும் மக்கள் ஏராளமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள். எனவே இவர்களால் அதிக லாபத்தைக் கொண்டு வரும் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்காக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மத்திய மற்றும் மாநில அரசுக்கு உதவி தொகைகள், அதேபோல் சினிமா சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கான உதவித் தொகைகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனுக்கு நடந்த விபரீதம்..!

அதிக நன்கொடை

தமிழகத்தில் அதிக வருமானம் பெறும் நடிகர் நடிகைகளை தவிர்த்து, சமூக சேவைகளில் இணைந்து வேலை செய்யும் நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் அவர்கள் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் குமார் அவர்கள் ஒரு கோடியே 25 லட்ச ரூபாயை எல்லோருக்கும் நன்கொடையாக கொடுத்துள்ளார். இவர்கள் அளித்த பணம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும், ஒன்று மத்திய அரசு மற்றும் மாநில அரசு, மூன்றாவது தினசரி கூலி செய்பவர்கள் அல்லது சினிமா துறையில் கஷ்டப்படுபவர்களுக்கு.

திரைப்பட சங்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 50 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகை தினசரி வேலை செய்பவர்களுக்கு மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர்களுக்கு என அறிவித்துள்ளார். அதேபோல் நடிகர் சூர்யா, கார்த்திக் மற்றும் அவர்களின் தந்தை சிவகுமார் மூவரும் இணைந்து 10 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்கள். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் 10 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.

மேலும் படிக்க – ரகுல் ப்ரீத் சிங்கின் வாழ்க்கை..!

ஊக்கம் அளிப்பவர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, திரைப்பட சங்கத்திற்கு கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். விஜய் சேதுபதி 10 லட்ச ரூபாயை தனது சங்கத்திற்கு அளித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயன் தமிழக அரசிற்கு 25 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதைத் தவிர்த்து ஏராளமான பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இவர்கள் விளம்பரத்தை விரும்பாததால் இவர்கள் செய்த இந்த நன்கொடைகள் வெளிவராமல் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏதேனும் உதவிகளை ஒரு சிலர் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதில் உதவி இயக்குனர்கள், சினிமாவில் பல ஆண்டுகளாக உழைத்து வருபவர்கள் என அனைவருக்கும் உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏராளமான நிறுவனங்கள் அளித்து வருகிறது. இதை தவிர்த்து சினிமா பிரபலங்கள் அளிக்கக்கூடிய ஊக்கத்தொகையை இவர்கள் பெற்று வருகிறார்கள். நம் நாட்டின் முன்னேற்றம், நம் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து எல்லா உதவிகளும் வரவேற்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன