தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியினால் உங்கள் நோய்களை தடுக்கலாம்..!

  • by
doing regular exercise can make you immune to diseases

ஆரோக்கியமான வாழ்விற்கு அத்தியாவசியமாக இருப்பது உடற்பயிற்சிகள். இதை தினமும் செய்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரித்து உங்கள் மேல் எந்த ஒரு நோய்த்தொற்றுகள் அண்டாமல் உறுதியாக வாழ முடியும். இக்கால நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி மிக அவசியமான ஒன்று எனவே இதை செய்வதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

இதயத்தை வலுப்படுத்துங்கள்

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் இருதயம் பலமடங்கு வலுவடைகிறது. ஒரு நிலையான நடைபயிற்சி உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இருதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி உங்களை ஆரோக்கியமாகவும் எந்த ஒரு இருதயப் பிரச்சினை இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி..!

அதிகாலை ஓட்டம்

அதிகாலையில் நாம் எந்த அளவிற்கு ஓடுகிறோம் அந்த அளவிற்கு நம்முடைய உடல் உறுதியாகிறது. நம்முடைய எலும்புகள், தசைகள் மற்றும் மூளை செயல்பாடு என அனைத்தும் உறுதியாக பெறுவதற்கு நாம் அதிக அளவில், மிக விரைவாக ஓட வேண்டும். தினமும் 10 கிலோ மீட்டர் அல்லது 30 நிமிடங்கள் ஓடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு போது மனது. இதை தினமும் செய்வதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை நீங்களே காணலாம்.

நச்சுக்களை வெளியேற்றும்

நாம் காலையில் செய்யப்படும் உடற்பயிற்சி நம்முடைய உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். சிறிய உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை பலமுறை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் இருந்து வியர்வை சுரக்கும். எனவே வியர்வையின் வழியாகவும் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – துளசி, மஞ்சள், கிராம்பு கொண்டு தயாரிக்கும் கசாயம்..!

சிறிய உடற்பயிற்சி

நாம் பெரியதாக உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அதிகாலையில் கைகள், கால்கள், தலைகள், இடுப்புகள் போன்ற பகுதிகளில் சிறிய அளவு வளைவு நெளிவுகளை கொடுத்து செய்யப்படும் உடற்பயிற்சிகளே போதுமானது. இதை தினமும் செய்வதன் மூலமாக உங்கள் எலும்புகள் உறுதியாகி உடல் வலிகள் ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் ஒரு இடத்தில் இருப்பவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே தினமும் சில உடற்பயிற்சிகளை செய்து உங்கள் வாழ்க்கையை இனிமையாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன