கபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா..!

  • by
does kabasura kudineer cures corona virus

சுவாசப்பாதையில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் சக்தியைக் கொண்டதுதான் இந்த கபசுரக்குடிநீர். எனவே ஆயுர்வேத மருந்தாக கருதப்படும் இந்த கபசுரக்குடிநீரை தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் ஏராளமாக வாங்கி பயன் படுத்துகிறார்கள். இது எந்தளவிற்கு கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதைக் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் மற்றும் ஆடாதோடை மணப்பாகு போன்றவைகள் உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையை கொண்டது. எனவே ஆயுர்வேத முறைப்படி இது போன்ற மூலிகை மூலம் வழங்கப்படும் குடிநீர் உங்கள் உடலில் தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இப்போது அலோபதியிலும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க முடியுமா என்ற முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – தமிழ் நாட்டில் ஏன் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியது..!

வைரஸை கட்டுப்படுத்தும்

பன்றி காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற பிரச்சினைகள் நமக்கு வராமல் இருப்பதற்காக இந்த ஆயுர்வேத குடிநீரை நாம் அருந்திருந்தோம், இதன் மூலமாக அந்த வைரஸின் தாக்கம் குறைந்து நம்மை எந்த ஒரு தொற்றும் தாக்காமல் இருந்தது. இந்த குடிநீரை நாம் கொரோனா வைரசின் தாக்கம் குறைவதற்கும் பயன்படுத்தலாம் என சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் செய்து வரும் நிறுவனமான ஆயுஷி வெளியிட்டுள்ளது.

இதை யார் பயன்படுத்தலாம்

கபசுரக்குடிநீர் கொரோனாவுக்கு மருந்து அல்ல, கொரோனா அறிகுறி யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் இவர்களின் தொண்டையில் தொற்றுகள் அதிகமாக பரவாமல் இருப்பதற்காக இந்த குடிநீரை அருந்தலாம்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ்..!

இதில் இருக்கும் மூலிகைகள்

கபசுரக்குடிநீரில் ஏராளமான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். இதை நீங்கள் தயாரிப்பது சற்று கடினமே, எனவே சித்த மருந்து கடைகளில் இதை வாங்கி பயன்பெறலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உங்களை தாக்காமல் இருப்பதற்காகவும் அதன் மூலமாக ஏற்படும் பயத்தைப் போக்குவதற்கு இது போன்ற மூலிகை கொண்ட குடிநீரை குடித்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன