ஜாதக கணிப்பு உண்மையில் பலனளிக்கிறதா?

 • by
7 reasons why you consult an astrologer

ஜாதக பலன் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை, வான் பொருட்களில் ஏற்படும் மாற்றம் மனித வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன. ஒருவருக்கு ஜாதக குறிப்பினை கணித்து எழுத பஞ்சாங்கம் அவசியம்.

அந்த பஞ்சாங்கமானது ஜாதகரின் பிறந்த இடத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகை இரண்டினையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கபட்டதாக இருத்தல் அவசியம்.

கௌரி நல்ல நேரம் :

 • கௌரி நல்ல நேரம் அல்லது சுப நேரம் என்பது ஒரு தினத்தை 16 முகூர்த்தங்களாக பிரிப்பது.
 • அதாவது பகலில் 8 முகூர்த்தம், இரவில் 8 முகூர்த்தம் என 16 முகூர்த்தங்களை கொண்டது.
 • ஒரு முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரம். உத்தி, லாபம், தனம், அமிர்தம், சுகம், ரோகம், விஷம், சோரம் என்று 8 வகையான முகூர்த்தங்கள் கௌரி பஞ்சாங்கத்தில் உள்ளது.
 • தனம், லாபம், சுகம், உத்தி மற்றும் அமிர்தம், என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்வது நன்மை.
 • ராகு மற்றும் எம கண்ட காலங்களில் சுபச் செயல்கள் செய்யக்கூடாது.

திருமண பொருத்தம் :

திருமண பொருத்தத்திற்கு, கல்யாண பொருத்தம், ஜோடிப் பொருத்தம், ஜாதக பொருத்தம், விவாக பொருத்தம், என பல்வேறு பெயர்களால் அழைப்பர்.

ஜாதக பொருத்தங்கள் ஒருவரின் வாழ்வில் வாழ்வில் சாதக பாதகங்களை எடுத்து கூறுவதாகும். இருவர் சேர்ந்து வாழும்போது அது முக்கியமான பல திருப்பங்களை தரும். அவற்றை ஆராய்வதே திருமண பொருத்தமாகும்.

யோனி பொருத்தம் :

யோனி பொருத்தம் என்பது திருமணமானவர்கள் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இந்த நிறைவானது இருவரின் ஜென்ம நட்சத்திரத்தினை பொறுத்தது. இந்த யோனி பொருத்தம் சிற்றின்ப அல்லது காதல் பொருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும்.

இரஜ்ஜி பொருத்தம் :

இரஜ்ஜி பொருத்தம் என்பது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். ஒருவரின் வாழ்வில் ஆயுளை குறிப்பது, பெரும்பாலும் இது கணவனின் ஆயுளை குறிப்பது மேலும் இது தீர்க்க சுமங்கலி பொருத்தம் என்று பெயரும் உண்டு. இந்த பொருத்தம் இல்லை எனில் திருமணம் முடிக்கக் கூடாது.

கணப் பொருத்தம் :

கணப் பொருத்தம் என்பது ஒருவரின் குண நலன் மற்றும் பண்பு நலனைக் குறிக்கும். இந்தப்பொருத்தம் 3 வகையாக உள்ளது.

 • தேவ கணம்
 • ராட்சஷ கணம்
 • மனித கணம்
  மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் இந்த 3 ஐ கொண்டு நம் முனிகள் பிரித்துள்ளனர்.

வாஸ்து சாஸ்திரம் :

மனையடி சாஸ்திர அளவுகள் என்பது, ஒரு இல்லத்தின் நீளம் மற்றும் அகலத்தினை நிர்ணயிக்கும் கணித முறையாகும். வாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டிடத்தின் நீளம் மற்றும் அகலம் என்று வரும் போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.

மனநல ஜோதிடம், வாஸ்து, திருமண பொருத்தம், மற்றும் ஜாதகம் எழுதுவது என பல்வேறு சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் ஆலோசனை தருவதில் மனநல ஜோதிடர் திரு R.P ஹரி அவர்கள் சிறந்து விளங்குகிறார்.

திரு R.P ஹரி அவர்கள் 25 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் அனுபவம் பெற்றுள்ளதால் இவரிடம் பல்வேறு நபர்கள் ஆலோசனைகளை முன்பதிவு செய்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வருகின்றனர்.

மனநல ஜோதிடர் திரு R.P ஹரி அவர்களின் ஆலோசனையை முன்பதிவு செய்ய…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன