நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க சீஸ் உண்மையில் உதவுகிறதா..!

  • by
does cheese really help in improving your health

சீஸ் என்ற உணவை நாம் முதல் முதலில் விளம்பரங்களில் தான் பார்த்த பழகி இருப்போம். இதை உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய அனைத்து உணவுகளிலும் சேர்த்து நம் கண்ணோட்டத்தில் சீஸ் என்ற உணவு நம் உடலுக்கு கெடுதலை தரும் என்று நினைக்க வைத்துள்ளார்கள். ஆனால் உண்மையில் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

சீஸ் வரலாறு

எட்டாம் நூற்றாண்டில் எகிப்தியர்களினால் உருவாக்கப்பட்டது சீஸ். இதில் மொத்தம் 1829 வகைகள் உள்ளது, அதில் வெறும் 17 வகை தான் இந்தியாவில் கிடைக்கின்றது. நாம் பார்க்கும் துரித உணவுகளில் அப்படியே ஒழுகிக் கொண்டு கீழே ஊற்றவும் அதை பார்த்து நம் மயங்கி அது போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டு நம் உடல் எடையை அதிகரித்து விடுகிறோம். ஆனால் உண்மையில் சீஸ் மட்டும் உங்கள் உடல் எடையை அதிகரிப்பதில்லை.

மேலும் படிக்க – நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

சீஸில் இருக்கும் சத்துக்கள்

காலையில் எடுத்துக் கொள்ளும் பிரெட்டில் இருந்து இரவு சாப்பிடப்படும் சாலட் வரை நாம் சீஸ் பயன்படுத்துகிறோம். இதில் வைட்டமின் ஏ, டி, பி12, கால்சியம், புரதம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.

எலும்புகள் வலுவடையும்

சீஸ் கர்ப்பிணிகளுக்கு மற்றும் வளரும் சிறுவர்களுக்கு நல்ல உணவாகும். அதைத் தவிர்த்து இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளதால் அதை விரைவில் உரிய கூடிய சத்துக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

இருதய ஆரோக்கியம்

பொதுவாகவே கொழுப்பு உணவுகளை நாம் சாப்பிடும்போது நமது இதய செயல்பாடும் பாதிக்கும் என்பார்கள். ஆனால் சீஸில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்கள் இதயத்தை வலுவாக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக்கிறது .

மேலும் படிக்க – தைராய்டு பிரச்சனையை தடுப்பதற்கு வழிகள்..!

உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும்

தினமும் குறைந்த அளவு சீஸ் சாப்பிடுவதனால் உங்கள் உடல் எடை சமநிலையில் இருக்கும். அதை தவிர்த்து இதை அதிகமாக உண்டால் இது உங்கள் உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே போதுமான அளவு சீஸ் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

புற்றுநோயை தடுக்கும்

சீஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் ஏற்படும் நோய்களை அகற்றிவிடும். அதைத் தவிர்த்து நச்சுத்தன்மையை உறிஞ்சும் தன்மை இதற்கு உண்டு எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகிறது.

மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்

சீஸில் இருக்கும் ஒமேகா த்ரீ உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதைத் தவிர்த்து இதில் இருக்கும் சக்திகளினால் உங்கள் மூளை விரைவாக செயல்படும். மென்று சாப்பிடுவதன் மூலமாக உங்கள் பற்கள் வலுவடையும்.

மேலும் படிக்க – மூக்கடைப்பு மற்றும் சைனஸ்களிலிருந்து நிரந்தர தீர்வு..!

சீஸில் மென்மையான/கடினமான என இரண்டு வகைகள் உள்ளது. கடினமான சீஸை ஒப்பிடுகையில் மென்மையானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுவது மென்மையான சீஸ். எல்லா வயதினரும் போதுமான அளவு சீஸ் பயன்படுத்துவதினால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன