ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்குமானதா?

 • by

ஆயுர்வேதா என்பது சமஸ்கிருதச் சொல். தமிழில் ஆயுர்வேதம் என்று இது அழைக்கப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா மட்டுமல்லாது இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளில் ஆயுர்வேதம் மிகவும் பிரபலமாக இருந்தது, ஆயுர்வேதம் என்ற சொல்லுக்கு நீண்ட வாழ்வு என்பது பொருள் ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கியவர்கள் அரசனுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்டனர். பழங்காலத்தில் பல்வேறு நோய்களை குணமாக்குவதற்கு ஆயுர்வேதம் பயன்பட்டது இன்றும் அயன்பாட்டில் உள்ளது. இந்த மருத்துவமுறையில் இதில் பக்கவிளைவுகள் கிடையாது.

ஆயுர்வேதத்தில் சுஸ்ருதர், வாகபட்டர் மற்றும் ஷரகர் ஆகிய முனிகள் தலைசிறந்து விளங்கியவர்கள். ஷத்வம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களுக்கு, ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், மற்றும் கபம் என்ற 3 குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது.

 • வாதம் – உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது.
 • பித்தம் – உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது.
 • கபம் – ஜட தன்மை கொண்டது.

ஆயுர்வேத மருந்துகள்:-

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய ஆயுர்வேதத்தில் மருந்துகள் பல்வேறு வகையில் கொடுக்கப்படுகிறது. இன்று நாம் பயன்படுத்தும் ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல முறைகள் அன்றே நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. அவற்றை இங்கே காண்போம்…

 • அரிஷ்டம்
 • ஆஸவங்கள்
 • சூரணங்கள்
 • அர்க்கங்கள்
 • க்ருதம்
 • கல்கம்
 • மாத்திரைகள்
 • பானகம்
 • லேஹியங்கள்

அரிஷ்டம் :

 • இவை பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்துகளை அப்படியே அல்லது தோராயமாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது. அரிஷ்டங்கள் தயாரிக்கும் முன், அதற்கு தேவையான பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தயாரிக்கப்படும் இடங்கள் குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம்.

பானகம் :

 • பானகம் என்பது ஒரு நீர்க்கரைசல் போல் இருக்கும். கிட்டத்தட்ட 95 சதவிகிதம் நீரும் ஏனைய சதவிகிதம் மருந்தும் எடுத்துக்கொள்வது. மேலும் இஹை நன்கு காய்ச்சியும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பனை வெள்ளம் நாட்டு சர்க்கரை, போன்றவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கல்கம் :

 • கல்கம் என்பது நோய்க்கு தேவையான மருந்துகள் விழுதாக அரைக்கப்பட்டு எண்ணெய் உடன் கலக்கப்படுகின்றன. இதைத்தான் கல்கம் என்கிறார்கள்.

ஆயுர்வேத அங்கங்கள் :

 • இரசாயன தந்திரா முறை – நீண்ட ஆயுளுக்கான மருத்துவம்
 • வாஜீகரணம் முறை – புத்துயிர்ப்பு மருத்துவம்
 • காய சிகிச்சை முறை – உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
 • பூதவித்யை முறை – மன நலம் காத்தல்
 • குமார பிரியா முறை – குழந்தை வளர்ப்பு மருத்துவம்
 • அக்தம் முறை – முறி மருந்துகள் அளித்தல்
 • சல்யம் முறை – அறுவை சிகிச்சை, மகப்பேறு
 • சாலக்யம் முறை – கண், காது, மூக்கு மற்றும் தலை உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்

டாக்டர் ஹரி அவர்கள் ஆன்லைனில் 15 நிமிட ஆயுர்வேத அமர்வுகளை வழங்குகிறார். அத்துடன் உங்களின் உடல் பிரச்சனைக்கு ஏற்ற மருந்துகளையும் பரிந்துரை செய்கிறார். நீரிழிவு நோயை நிர்வகித்தல், உயர் இரத்த அழுத்தம், கீல்வாதம், தோல் நோய்கள், ஒவ்வாமை, முதுகெலும்பு மற்றும் மூட்டு நோய்கள், கடுமையான தலைவலி பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள்,
இரைப்பை பிரச்சினைகள், ஒவ்வாமை என பல பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் சிறந்த முறையில் தீர்வு வழங்குகிறது. டாக்டர் ஹரி அவர்களின் அமர்வுகளை முன்பதிவு செய்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .

டாக்டர் ஹரி அவர்களின் அமர்வை முன்பதிவு செய்ய…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன