ஆண்கள் சிகப்பாகுவதற்குப் பயன்படுத்தும் சிறந்த பத்து கிரீம்கள்

do you know what are the best skin whitening cream for men

காலங்கள் செல்லச் செல்ல ஆண்களும் தங்கள் அழகின் மேல் அக்கறை கொண்டுள்ளார்கள். இதற்காக பெண்களைப் போலவே அவர்களும் தங்கள் நிறத்தை வெண்மை ஆக்குவதற்காக பலவகையான க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதில் எது சிறந்தது எந்த கிரீம் ஆண்களின் சருமத்திற்கு ஏற்றது என்பதை தெளிவாக இந்த பட்டியலில் பார்ப்போம்.

1. இமாமி ஃபார் அண்ட் ஹாண்ட்சம்

ஆண்களுக்கான க்ரீமை முதன்முதலில் வெளியிட்டவர்கள் இவர்தான். ஆரம்பத்தில் இது வெற்றிகரமான ஒன்றாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் அதிகமான ஆண்கள் பயன்படுத்தும் கிரீம்களில் இதுவும் ஒன்றாகும். இது உங்கள் சிகப்பழகை மேம்படுத்தவும் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்கி உங்களை பொலிவுடன் வைக்க இந்த கிரீம் உதவுகிறது. இதை தவிர்த்து உங்களுக்கு வயதான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இது பார்த்துக் கொள்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு நம்பகத்தன்மையான கிரீம்களில் இதுவும் ஒன்று.

2. ஃபேர் அண்ட் லவ்லி மேக்ஸ் ஃபேர்னஸ்

பல ஆண்டுகளாகவே பெண்களுக்கான கிரீம்களை கண்டுபிடித்து வந்த இந்த ஃபேரன் லவ்லி ஆண்களுக்கும் கிரீமை வெளியிட்டுள்ளார்கள். அது நினைத்ததை விட அதிகமாக வெற்றியடைந்தது ஆண்கள் வெளியே செல்வதாக இருந்தால் முதலில் அவர்கள் பயன்படுத்தும் கிரீம் இதுவாகும் ஏனென்றால் உடனடியாக உங்களுக்கு சிகப்பு நிறத்தை தருவது மட்டுமில்லாமல் சூரிய ஒளியால் ஏற்படும் கருமையும் இது தடுக்கிறது. இதைத் தவிர்த்து வறண்ட சருமம் உள்ள ஆண்களுக்கு மிக உதவிகரமாக க்ரீம் இதுவாகும்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களின் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள்..!

3. கார்னியர் மென் பவர் லைட்

பிரபலமான தோல் பராமரிப்பு பொருட்களில் பெயர் பெற்ற நிறுவனமான கார்னியரிலிருந்து வெளியானது தான் ஆண்களுக்கான பிரத்தியோக கிரீம். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒன்றாகும். இதைத் தவிர உங்கள் முகத்தில் ஈரப்பதத்தையும் இது அதிகரிக்கிறது இதனால் உங்கள் சருமம் எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் இருக்க இது உதவுகிறது. இது உங்களின் முகத்தின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது.

4. நிவ்யா மென் டார்க் ஸ்பார்ட் ரெடக்ஷன்

இந்த க்ரீம் உண்மையிலேயே ஒரு அற்புதமான தயாரிப்பாகும், ஆண்களுக்காக இவர்கள் ஏராளமான பொருட்களை கண்டுபிடித்து இருந்தாலும் அவர்களின் நிறத்தை அதிகரிக்கும் இந்த கிரீம் மிகப்பெரிய ஒரு வெற்றி பொருளாகும். இது நம் மேல் ஏற்படும் சூரியக் கதிர்வீச்சில் இருந்து நம்மை காத்து முகத்தை பொலிவோடும், அழகாகவும் காண்பிக்கிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்த ரகசிய பார்முலாவை கொண்டு நம்மை அழகாக காண்பிக்கிறார்கள்.

5. லாரியால் பரிஸ் மென் எக்ஸ்பர்ட்

இது மிகவும் விலை உயர்ந்த க்ரீம் ஆகும். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை அதிகரிப்பதற்காக விலையை பற்றி கவலைப்படாமல் இதை அதிகமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது ஒரு திரவ வடிவத்தில் இருப்பதினால் நம் முகத்தில் மிக எளிமையாக ஒட்டிக்கொண்டு நம்மை உடனடியாக வெண்மையாக காட்டுகிறது. கிட்டத்தட்ட இதை சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய் என்று கூட சொல்லலாம். பல வல்லுநர்கள் பரிந்துரைக்கும் கிரீம்களில் இதுவும் ஒன்று.

மேலும் படிக்க – தேவையற்ற ரோமங்கள் நீக்க இதை செய்யுங்க

6. பான்ட்ஸ் மென் எனர்ஜி

இதில் காபிபீன் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதினால் கருமையான சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. இதைத் தவிர்த்து உங்கள் சருமத்தில் இருக்கும் செல்களில் வளத்தை அதிகரித்து நீண்டநேரம் உங்களை பொலிவுடன் வைக்கிறது. உங்களின் சருமத்தின் நிறத்தை சீராக மாற்றி மீண்டும் கருமையாக மாறாமல் பார்த்துக் கொள்கிறது.

7. வி எல் சி சி மென் ஆக்டிவ்

இதில் மல்பெரி சாறுகள் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை உங்கள் சருமத்தை ஒளிரச் செய்கிறது. உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய்களை அகற்றி  ஈரப்பதமாக வைக்கிறது. உங்கள் சருமத்தில் ஏற்படும் அழுக்குகள் மற்றும் தோல் பிரச்சனைகளிலிருந்து இது பாதுகாக்கிறது. இதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதுபோன்ற சமயங்களில் வரும் பிரச்சனை அனைத்தையும் இந்த கிரீம் வரவிடாமல் தடுக்கிறது.

8. ஓரிபிலேம் நார்த் மென்ஸ் கிரீம்

இது முரட்டுத்தனமான கடுமையான சருமத்தைக் கொண்ட ஆண்களுக்கு ஏற்ற க்ரீமாகும். இதில் திராட்சை மற்றும் மல்பெரி சாறுகள் இருப்பதினால் உங்கள் சருமத்தை பாதுகாத்து கரு நிறத்தை போக்கி வெண்மையாக மாற்றுகிறது. இந்தியாவில் கோடை காலங்களுக்கு ஏற்ற கிரீம்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் படிக்க – இளஞ்சிவப்பு இதழுக்கு இது அவசியமுங்க

9. பான்ஸ் ஆயில் கண்ட்ரோல் ஃபேர்னஸ் க்ரீம்

ஆண்கள் சருமத்தில் ஏற்படும் எண்ணெய்களை அதிக அளவில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது இந்த கிரீம். இது எப்போதும் உங்கள் சிறந்த நண்பராக இருக்கும், இதில் களிமண் சத்துகள் இருப்பதனால் உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து அழுக்குகளை உறிஞ்சி மிக ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் உங்கள் முகத்தை வைக்க உதவுகிறது.

10. லிபியா மென் ஆயில் கன்ட்ரோல் க்ரீம்

இதில் ஆண்கள் சருமத்தை மென்மையாக்கும் சக்திகளைக் கொண்டு உள்ளது. இதை தவிர்த்து உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் அதை நீக்கி உங்களை அழகாக மாற்றுகிறது. இது மட்டுமில்லாமல் ஆண்களுக்கு வெயில் தாக்கத்தால் ஏற்படும் கருமை மற்றும் சோர்வு மூலமாக ஏற்படும் கருவளையங்கள் போன்ற அனைத்தையும் இதை தடவுவதன் மூலம் குணப்படுத்தலாம்.

எனவே ஆண்களுக்காக பிரத்தியோக கிரீம்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் அவர்கள் இன்று வரை இதை சரிவர பயன்படுத்துவதில்லை எனவே உங்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் எப்போதும் இளமையாக இருப்பதற்கு இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தி பலன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன