சோமவார விரதம் இருந்தால் சொகுசு வாழ்க்கை கிடைக்கும்!

  • by

சோமவார பூஜை செய்தால் சொகுசான வாழ்வினை சோமநாதரான சிவபெருமான வழங்குவார். சோமவார பூஜையானது   சிவபெருமானுக்கு உரியது. அவருக்கு சோமவாரமான திங்கள் அன்று அதிகாலை 5 மணிக்கு குளித்து முடித்து பூக்கள், தண்ணீர்,  தீப ஆராதனைக்கான பொருட்கள் ஆகிய அனைத்தும் பெண் எடுத்துச் சென்று வழிபடுவார்கள்.

சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து அவருக்கு மலர்  சாத்தி தீபா ஆராதனை நடத்தி வருவது காலம் காலமாக பழக்கத்தி உள்ளது. இது குறித்து இன்றைய ஜென்ரேசன் மக்களுக்கு தெரிய  வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம் என  அழைக்கப்படும் திங்கட்கிழமை ஆகும். ‘சோம’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு. பார்வதியுடன் கூடிய சிவபெருமான்,மற்றும்  சந்திரன் என்று பொருள்படும், பார்வதியுடன் கூடிய சிவபெருமானை வழிபட்டு வந்தால் வாழ்வு வளம் பெறும். 

சோமவார பூஜை

சந்திரன்  பெற்ற வரம்:

ஒரு முறை சந்திரன் கொடிய நோயால்  அவதிபடும் பொழுது நோய் குணமாக சிவனை  நோக்கி வேண்டி தவம் இருந்த சந்திரன், சிவபெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றார்.  சந்திரன் ,நவக்கிரகங்களில் ஒருவராகவும் மாறினார். சந்திரன் அருள் பெற்று அவர் பெயராலே தோன்றியதே சோமவாரம் திங்கட்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்வு வளம் பெறும். 

சந்திரனின் வேண்டுகோளின்படி  அவனது பெயரால் அவனது வாரத்தில்  அதாவது திங்கள்கிழமை அன்று விரதம் இருந்து  சிவபெருமானை வேண்டிக்கொண்ட நாளே சோமவார விரதம் என பெயர் பெற்றது. 

சோமவார பூஜை

சோமவார பூஜையின் பலன்கள்:

 சோம வாரப் பூஜையின் பயனாக  பிரிந்த குடும்பம் ஒன்று சேர்க்க முடியும். விரும்புபவர்கள் ஒன்று  சேர ,திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சாம்ப பரமேசுவரரை நினைத்து இந்த சோமவார விரதத்தை  கடைப்பிடித்து,வந்தால் வெகுதூரத்தில் உள்ள கணவன் மனைவி உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ்வாரகள். 

சோமவார விரதமானது மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  சோம வார பூஜையானது மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற கணவன், மனம் மாறி வீடு  வந்து சேருவான். மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும்.

மேலும் படிக்க – மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

 ஆர்யா வர்த்தா நாட்டை ஆண்ட சித்ரவர்மன் என்ற மன்னனின்  ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் கணிக்க  உத்தரவிட்டான். ஜாதகத்தில் உள்ள தோசம் காரணமாக தனது மகளுக்கு கணவன் இருக்கமாட்டார் எனக் கூறப்பட்டது

இந்த பிரச்சனையை போக்க மன்னர் உபாயம் தேடி அலைந்தார். இதனை போக்க அவருக்கு கிடைத்த உபாயமானது சோமவார விரதம் ஆகும். 

சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அதன் பயனாக சீமந்தினிக்கு நளனின் பேரன், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது.

சந்திராங்கதன் கதை:

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினார்.  தேடி கிடைக்காததால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை விடாமல் கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்கு பலன்  கிடைக்கப்பெற்றாள்.

திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப்போனதாகவும், சிலநாட்கள் அவர்களிடம் இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரணை செய்து சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னை கொண்டு வந்து விட்டதாக கூறினான். 

சக்தி வாய்ந்த சோமவார விரதம் 

சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் இதனைப் பின்ப்பற்றி வருதல் சிறப்பு  தரும்.  

சோமவார பூஜை

சோமவார புஜை: 

விடியற்காலையிலேயே ராகு காலத்துக்கு முன்பே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்தபின் . மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். 

 கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனகுங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும். 

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

சோமவார நெய்வேத்தியம்:

திங்கள் கிழமை  செய்யும் பூஜையானது  நைவேத்தியமாக சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைக்க வேண்டும். சிவநாமங்களை சொல்லி  கற்பூர ஆரத்தி காட்டுதல் சிறப்புதரும்.

சோம வார பூஜை முடித்து  வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்து, அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு, பழம் இவற்றுடன் தட்சணை ஆகியவை கொடுத்து, அவர்களை வணங்கி ஆசி பெறுதல் நலம் பயக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன