புளி சாப்பிட்டு வந்தால் வாழ்வில் சலிப்பு போகும்!

  • by

தினமும் நாம் பயன்படுத்தும் உணவு பொருளில் மிக முக்கியமானது தக்காளி. மற்றும் புளி இவை இரண்டும்  புளிப்பு சுவை கொண்டுள்ளது. புளிப்பு சுவை கொண்ட புளியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் உள்ளன.  புளி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

இந்திய புளியில் உள்ள சத்துக்கள்  மிகவும் சிறப்பு வாய்ந்தது . இதற்கு உலகம் முழுவதும்  வரவேற்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் புளியானது சட்னி, சாம்பார்,   செமி கிரேவி போன்றவற்றில் பயன்படுத்துகின்றோம். 


மேலும் படிக்க:திணை வகைகள் தின்றால் திடகாத்திரம் ஆகலாம், வியாதிகளும் தீரும்.!

புளியின் மருத்துப் பலன்கள்:

புளிய மரத்தின் இலை பழம்,  பட்டை ஆகியவை அனைத்து, மருத்துவ குணம்  கொண்டவை ஆகும். இது வயிறு, ஜீரண கோளாறுகளை இது போக்கும். நீரில் இதனை கரைத்து உணவில் சேர்த்து சமைப்பது நம் நாட்டில் வளக்கமாக கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க: உலர்திராட்சையில் உள்ள சத்துக்கள்

அமெரிக்கா நாட்டில்  மருந்துகள் தயாரிக்க வருடத்திற்கு  90,000 கிலோ புளியை இறக்குமதி செய்து மருந்துகளை தயாரிக்கிம்ன்றது. புளியின்  தன்மையானது சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்பட்டு வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள  ரத்தக் கட்டுகள் கரைந்து போகும். புளியன் தண்ணீரை கொப்பளித்து வருவதனால் வாயில் ஏற்பட்டுள்ள வாய்ப்புண்கள் குணமாகும். 

புளி, சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போடும்பொழுது விசம் இறங்கி மீண்டும் பிறப்பு கிடைக்கும்.  புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி சுளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாவுதுடன் பசியை அடக்கும். 

புளிய இலையில் இவ்வளவு இருக்கு:

புளியங்கொழுந்தை பச்சையாக கழுவி சாப்பிடலாம்.. அதன் சாறு சத்துக்கள் கொண்டது. புளிய கொழுந்தை  பருப்புடன் செய்த கூட்டை சாப்பிட்டால் உடல் நலம் பெறும். அத்னுடன் உடல் பரிபூரண பலம் பெறும். 

புளிய மரத்தில் விளையும் அனைத்தும், ஆரோக்கியம் தரக்கூடியது. 

 புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம்  வராது. உடலொல் அசதி மற்றும் சத்துக்கள் குறைவால் ஏற்படும். தலைச்சுற்றல் தீரும். புளிய மரப்பட்டையும் மருத்துவ குணம் கொண்ட “டானிக்’. புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கும்  மருந்துகள் குஷ்டரோகத்திற்கு பயன்படுத்துகின்றோம். 

புளியில் உள்ள வைட்டமின் சி சத்தானது  புளியானது நோய் நீக்கியாகும். மேலும் இது  புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகின்ற ஆற்றல் கொண்டு செயல்படுகின்றது. 

மேலும் படிக்க: பாசிப்பயிறு முளைக்கட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்..!

.செரிமான கோளாறு நீக்கும் நிவாரணி: இது மூட்டுவலியை போக்கும். விணக்கெண்ணெயுடன்  கொஞ்சம் புளி இலைகளை வதக்கி வலி உள்ள இடத்தில் பற்றுபோல் கட்டிவந்தால் உடலினை குணப்படுத்தும். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன