மன அழுத்தம் உங்களை வலுப்படுத்தும்.!

do you know that your stress can increase your immune system

மனஅழுத்தம் என்பது எல்லோரும் மிகப் பெரிய பிரச்சினையாகவே பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் எதற்கெடுத்தாலும் நாம் வருத்தப்பட தொடங்கிவிடுவோம். இதை தவிர்த்து அதைப் பற்றிய அதிகமான சிந்தனைகள் நமக்குள்ளேயே தங்கி விடுவதால் அது மன அழுத்த பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதை தடுப்பதற்கான வழிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் அதை தவிர்த்து இதற்காக ஏராளமான பணத்தை செலவு செய்கிறோம். இது அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மன அழுத்தம் அதிகரிக்கும்.

மன அழுத்தம் என்பது வெவ்வேறு விதமாக ஏற்படுகிறது நாம் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது நமது வெற்றியைப் பற்றி சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளானார் அந்த மன அழுத்தம் நம்மை வெற்றி அடையவே செய்கிறது. இதனால் இதுபோன்ற மன அழுத்தங்களில் நமது உடல்களில் எந்த தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.

மேலும் படிக்க – ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தேகம் ஆரோக்கியம் பெறும்..!

பொதுவாக தேவையில்லாதவை பற்றி சிந்திக்கும் மன அழுத்தங்களை உங்களை பாதிப்படையச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு தங்கள் நாட்களை வீணாக்குபவர்களுக்கு மன வருத்தம் அதிகரிக்கிறது இது போன்ற மன அழுத்தம் உடையவர்கள் முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து பேசி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.

ஒரு சில மன அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது எப்படி என்றால் பரிட்சைக்கு அல்லது ஏதாவது நேர்காணலுக்கு செல்லும் போது நம்மை அறியாமல் நமக்கு மன உளைச்சல் ஏற்படும். நம் மீதே நமக்கு சந்தேகம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு நேர்காணலில் வெற்றியடைவோம் இத்தகைய மன அழுத்தம் உண்மையில் உங்களை மேம்படுத்த உதவுகிறது. இது போன்ற மன அழுத்தம் உங்கள் பயங்களைப் போக்கி உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து உங்கள் சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..!

நோய் எதிர்ப்பு சக்தி என்பது எப்படி ஒரு முறை வந்த கிருமிகளை மற்றொரு முறை வரவிடாமல் தடுக்கிறது அதே போல் தான் நம் மன அழுத்தத்தின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் வர விடாமல் தடுக்கிறது. இதனால் இந்த நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தின்போது நமது மூளை ஆற்றல் அதிகரிக்கிறது. நம் உடல் திறன் அதிகரித்து நம்மை சரியான பாதைக்கு கொண்டு செல்கிறது. எனவே மன அழுத்தத்தைப் பற்றி கவலைப்படாமல் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வெற்றி காண்பவர்களுக்கு மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சனையே அல்ல.

2 thoughts on “மன அழுத்தம் உங்களை வலுப்படுத்தும்.!”

  1. Pingback: அதிகநேரம் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்து

  2. Pingback: குறைவாக/அதிகமாக தூங்குபவர்களுக்கு நுரையீரல் நோய்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன