பழந்தமிழர்களின் முதுமக்கள் தாழி பற்றி உங்களுக்கு தெரியுமா???

  • by
do you know about this ancient tamils crematory method

நம் பழந்தமிழர்களின் ஆயுட்காலம் இருநூறு முன்னூறு ஆண்டுகளாக இருந்தன. ஆனால் இன்றோ 70 வதை தாண்டுவதே படாதபாடு ஆகிவிடுகிறது. இதற்கு காரணம் நம் உணவு பழக்கவழக்கம் முறையும், மாசற்ற காற்று, பாரம்பரியத்தை மறந்து நவீன கலாச்சாரத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டது தான் காரணம்.

மூத்தகுடி நம் தமிழ் குடி தான். இதற்கு அகழ்வாராய்ச்சியிலும் தொல்லியல் துறையிலும் இன்றளவும் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  நம் பழந்தமிழர்கள் இறந்தவுடன் எரிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லை இறந்தவர்களை மண் பானைக்குள் வைத்து புதைத்து விடுவார்கள். இந்த பானைக்கு பெயர்தான் முதுமக்கள் தாழி.

முதுமக்கள் தாழி என்றால் என்ன?

நம் முன்னோர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய உடலை அடக்கம் செய்வதற்கு நாம் மண்பானையை தான் பயன்படுத்தி இருக்கிறோம். முன்பெல்லாம் அவர்களின் ஆயுட்காலம் இருநூறு முன்னூறு ஆண்டுகளாக இருந்தது. அப்பொழுதும் அவர்கள் பிராணன் உடலைவிட்டு வெளியேறுவதில்லை. உடலானது சுருங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் அந்த வடிவத்திற்கு வந்துவிடும். அந்த நிலையில் அவர்களுடைய கொள்ளுப் பேரன் ஒரு பெரிய மண்பானையில் அவரது உடலையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அதனுள் போட்டு புதைத்து வைத்து விடுவார்களாம். இதுதான் பழந்தமிழர்கள் முதுமக்கள் தாழி என்று அழைத்தனர்.

மேலும் படிக்க – காதலா வேலையா வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்..!

முதுமக்கள் தாழி இருந்ததற்கான சான்றுகள் 

ஏற்காடு பகுதியில் தொல்லியலாளர்கள் மேற்கொண்ட  ஆய்வில் மலைப்பகுதியில் மேலூர் கிராமத்தில் குப்பன் என்பவரது தோட்டத்தில் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு போன்றவை குறித்து மேற்கொண்ட இந்த ஆய்வில் இறந்தவர்களை மண்பானையில் வைத்து புதைக்கும் பழக்கம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி நான்காம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கிறது. இறந்தவர்களின் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய

பொருட்களையும் சேர்த்து ஆழமான குழியில் புதைத்து வந்துள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குழிக்கு ” மாண்டவர் குழி ” என்று பெயரிட்டுள்ளனர். இதனை பாண்டவர் குழி, பாண்டியன் குழி என்றும் அழைத்திருக்கின்றனர். ஏற்காடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுமக்கள் தாழியை வைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கான சான்று கிடைத்துள்ளது. திருச்சியிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி யானது 3000 வருடங்கள் பழமையானது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனித உடலுக்கும் மண்பானைக்கும் உள்ள தொடர்பு 

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. மனிதனின் இடுப்பு பகுதி வரை மண்ணுடன் தொடர்புடையது. வயிற்றுக்கு மேல் நுரையீரல் போன்றவை காற்றுடன் தொடர்புடையது. மூளைக்கும் மண்டையோட்டு இருக்கும் இடையே காணப்படும் CSM என்னும் திரவம் மெல்லிய பேப்பர் அளவிலான காற்று போன்ற வெற்றிடத்தை கொண்டுள்ளது. 

இதேபோல் மண் பானை செய்வதற்கு முதலில் மண்ணும் ,அதன் பின் நீர் ,அவை செய்து முடித்தபின் நெருப்பில் சுட்டு காற்றில் காய வைக்கப்படுகிறது. அதன்பின் மண்பானையில் உட்புறம் இருக்கும் வெற்றிடம் ஆகாயத்தை குறிக்கிறது.

மண் பானையும் அதேபோல்தான் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அவர்களுடைய இறப்புவரை தொடர்கிறது.  இதனால்தான் சுடுகாட்டில் ஒருவர் இறந்த பின்னர் அவர்களை சுற்றி மண் பானை உடைக்கும் பழக்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

பழந்தமிழர்  மண்பானையில் வைத்தமுக்கியமான இரண்டு உணவு பொருட்கள் என்ன தெரியுமா?

பழங்காலங்களில் உப்பு மற்றும் புளியை இரண்டு பெரிய மண் ஜாடிகளில் வைத்து பயன்படுத்தி வந்தார்கள். உப்பை நம் மண் பானையில் வைத்து

பயன்படுத்துவதால் தைராய்டு போன்ற பல பிரச்சினைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். உப்பில் உள்ள சோடியம் குளோரைடு அதிக வேதி தன்மையுடையது. இதை மண்பானையில் வைத்து பயன்படுத்தும் பொழுது அதிகப்படியான உப்பின் நச்சுத்தன்மையை மண் பானையில் உள்ள போரோ சிட்டி என் துளைகள் வழியாக வெளியேற்றிவிடுகிறது. மண்பானையில் உப்பினை பயன்படுத்தி வந்தால் உப்பின் வெளிப்புறமாக வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம்.

மேலும் படிக்க – நாடு முழுவதும் முடக்கத்தில் இருக்கும் பொழுது காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி திட்டமிட்டு பயன்படுத்துவது..!

புளியானது டாட ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இதை நாம் உணவில் அப்படியே சேர்த்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சி போன்ற பல பிரச்சனைகள் வரும். இதனால் மண்பானையில் வைத்து பயன்படுத்தினால் அதன் அமிலத் தன்மை குறைந்து சமநிலைக்கு வருகிறது.

மண்பானை நம் முன்னோர்கள் நோயின்றி பலகாலம் வாழ்ந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் உணவும், ,சமைக்கவும் பயன்படுத்திய மண்பானை தான்.

இன்று ஆடு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்வது போல மனிதர்களுக்கும் கருத்தரித்தல் மையம் தெருவுக்கு ஒன்றாக தொடங்கப்பட்டு வருகிறது. நம பாரம்பரியத்தை பேணிக்காத்தல் மட்டுமே இம்மாதிரியான பிரச்சனைகளிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன