அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு.!

do you have frequent urination, solution for the problem is here

சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை வரை சிறுநீர் கழிக்கலாம் ஆனால் ஒரு சிலருக்கு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படும், இதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதினால் அவர்கள் அவ்வப்போது கழிவறைக்கு சென்று வருவார்கள். இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மிக மோசமான முறையிலேயே கழிக்கிறார்கள். இப்படி சிறுநீர் அடிக்கடி வெளியிடுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலங்களில் நம் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருப்பதினால் நமக்கு சிறுநீரக எண்ணங்கள் ஏற்படும். இது சாதாரணம்தான் ஆனால் அதுவே மற்ற நாட்களில் நம்மை அறியாமல் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் ஏற்பட்டால் அது சிறுநீரக தொற்று அல்லது நீரிழிவு நோயாக இருக்கலாம். மன அழுத்தம் கவலை மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இவர்களுக்கும் சிறுநீர் அடிக்கடி வெளியேறும். டீ காபி அல்லது மதுவை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனையின் தாக்கம் இருக்கும்.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

சிறுநீர்ப் பையில் கற்கள் சிறுநீரகப் பாதையில் புற்றுநோய் அல்லது சிறுநீரகத்தில் தொற்று போன்ற பிரச்சினைகளாளும் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாதபடி வெளியேறும். உங்களுக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல், கீழ் முதுகு வலி, சிறுநீரகம் செல்லும் போது அடைப்புகள் அல்லது சிறுநீரக வெளியேறும்போது வலிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

சிறுநீரக பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது அதற்கான தீர்வை நாம் வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். சைப்ரஸ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து சிறுநீரகம் வெளியேறும் பகுதியில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சைப்ரஸ் என்னையும் இருக்கும் பண்புகளினால் உங்கள் சிறுநீரக பிரச்சனையை தீர்க்க முடியும்.

மேலும் படிக்க – காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

பேக்கிங் சோடாவை சிறிதளவு ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம், அல்லது தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் போதும் சிறுநீரகப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை இது விளக்குகிறது. துளசி இலை, குருதி நெல்லி பழச்சாறு, நார் சக்தி அதிகம் உள்ள பழங்கள், கிரீன் டீ, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனைகளிருந்து நாம் தீர்வு காண முடியும்.

1 thought on “அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு.!”

  1. Pingback: ஆபாச படங்கள் பார்ப்பதினால் ஏற்படும் ஆபத்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன