பீபி, கொலஸ்ட்ரால் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதை சாப்பிடுங்கள்.!

Do You Have BP, Cholesterol Eat This Everyday

ஆரோக்கியமான உடலைப் பெறுவது என்பது இக்காலத்தில் அரிதாகிவிட்டது. இதற்கு காரணம் நாம் வாழும் வாழ்க்கை மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான் முதலில் நாம் செய்யும் வேலையை நம்மை பெரிதாக பாதிப்படைய செய்கிறது. எப்போதும் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரே வேலையை செய்வது நமது உடல் சோர்வடைய செய்து நமக்கு பல வியாதிகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு நாம் அதிகம் சத்துக்கள் நிறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

உங்கள் உணவில் தினமும் ஏதாவது ஒரு பெர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. பெர்ரி பழங்கள் என்றால் ஸ்டிராபெரி, ப்ளூபெர்ரி, செர்ரி பழம் இவைகளினால் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

மேலும் படிக்க – கைகள் சிவக்கும் மருதாணியால்…….!

வாழைப்பழத்தை தினமும் உட்கொள்வதினால் உங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது அதேபோல் காளான், தக்காளி, முலாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அவகோடா, மற்றும் பீன்ஸ் போன்றவைகளிலும் பொட்டாசியம் இருக்கின்றன. இதை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

பீட்ரூட் பழங்களை நீங்கள் வேகவைத்து உண்ணலாம் அல்லது அதை பழச்சாறு குடிக்கலாம். இவை இரண்டும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. டார்க் சாக்லேட் உண்பதினால் உங்கள் உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை இல்லாத டார்க் சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

கிவி பழங்களை நாம் அதிகமாக உட்கொள்வதில்லை ஆனால் இதில் ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது. இவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியம் அடையலாம். பச்சை காய்கறிகளை நாம் அதிகமாக பயன்படுத்த வேண்டும் முடிந்தவரை இதை துண்டு துண்டாக நறுக்கி சாலட் சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க – புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

காலை உணவாக நாம் ஓட்ஸ் கஞ்சி மற்றும் கிரீன் டீ அருந்தலாம் இது உங்கள் உடம்பில் இருக்கும் நச்சுத் தன்மையை குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

சியா விதைகள், பூண்டு மற்றும் பருப்பு வகைகளை நீங்கள் உங்கள் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கொழுப்புகள் குறைந்து உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து உங்களை ஆரோக்கியமாக வைத்து விடும். எனவே உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் வாழ்வது நல்லது.

1 thought on “பீபி, கொலஸ்ட்ரால் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதை சாப்பிடுங்கள்.!”

  1. Pingback: ஆண்களின் ஹார்மோன், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன