டாட்டூ போடுபவர்கள் பின்பற்றவேண்டியவை.!

do you have a tatoo then you should follow this

டாட்டூ போடுவது என்பது பலருக்கும் போதை ஆகி வருகிறது. இதை விளையாட்டு வீரர்கள் முதல் சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இதற்கு பின்னால் பல ஆபத்துகள் இருக்கின்றன. இதை தவிர்த்து இதனால் ஏற்படும் காயம் ஆறும் வரை நாம் இதை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் இதனால் உங்களுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிதாக டாட்டு போடுபவர்கள் பின்பற்ற வேண்டியவை. நீங்கள் டாட்டூ போட்டுக் கொள்ள செல்லும் இடம் நம்பகத்தன்மையான இடமாக இருக்கவேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாத இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – பூங்ககாய் எனும் பூந்திக்காயின் தூய்மை பயன்கள்

நீங்கள் டாட்டூ குத்தும் ஊசிகள் புதிதாக இருக்கிறதா என்று கவனமாக பார்க்க வேண்டும். இதற்கு முன் பயன்படுத்திய ஊசிகளை தவிர்ப்பதன் மூலம் ஏகப்பட்ட நோய் தொற்றுகளில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொள்ள முடியும்.

டாட்டூ போட்ட பிறகு உங்கள் சருமத்தின் மேல் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி அதன்மேல் பாண்டேஜ் போடவேண்டும் இதை கவனமாக செய்யும்படி அறிவுறுத்துங்கள்.

டாட்டூ குத்தியதற்குப்பின் அது மேல் போடப்படும் பேண்டைடை உடனடியாக பிரிக்கக்கூடாது. அதன் பிறகு அதன் மேல் ஆன்டிபயாட்டிக் சோப்புகளை கொண்டு கழுவ வேண்டும்.

டாட்டூ உள்ள பகுதியில் உங்களுக்கு அரிப்பு ஏற்படும் எனவே அது ஆறும் வரை நீங்கள் அந்த பகுதியை சொரிவதை தடுக்க வேண்டும்.

மேலும் படிக்க – இந்திய ஃபேசன் மார்க்கெட்டில் ஹிட் அடித்த டிரெண்டுகள்..!

உங்கள் டாட்டூ மேல் சூரிய ஒளி நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அந்த பகுதியில் காற்று படாதவாறு இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் மற்றும் அதன் மேல் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

டாட்டூ போடுவதினால் உங்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே சரும மருத்துவரை சந்திப்பதே நல்லது.

2 thoughts on “டாட்டூ போடுபவர்கள் பின்பற்றவேண்டியவை.!”

  1. Pingback: இயற்கையான பாடி வாஷ் வீட்டில் எப்படி செய்வது

  2. Pingback: நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன