குழந்தைகள் விளையாடுவதற்காக ரிமோட்டை கொடுக்கும் பெற்றோர்களா நீங்கள்??? உஷார்!

  • by
do you give your child remote to play be careful

இன்று பெரும்பாலான குழந்தைகளின் கைகளில் விளையாட்டு பொருளாக இருப்பது டிவி ரிமோட் தான். குழந்தை அழுகாமல் இருந்தால் போதும் என்பதற்காக நம் குழந்தைகள் கையில் கொடுக்கும் அந்த ரிமோட்டில் கழிவறையை விட 20% கழிவுகள் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விளக்கும்  பதிவு தான் இது.

குழந்தைகள் ரிமோட்டை விரும்புவதற்கான காரணம்

மற்ற விளையாட்டு பொருட்களை காட்டிலும் கையில் வைத்துக் கொள்வதற்கு சுலபமாகவும், வாயில் கடிப்பதற்கு எளிதாகவும் இருப்பதினால் தான் குழந்தைகள் ரிமோட்டை அதிகமாக விளையாடுவதற்கு விரும்புகிறார்கள், அதிலுள்ள பட்டன்களை அழுத்தும் பொழுது வெவ்வேறு சேனல்கள் மாறும் அதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மின்சாதன பொருட்களை குழந்தைகளிடம் விளையாட கொடுப்பது சற்று ஆபத்தான விஷயம் என்றாலும் ரிமோட் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணி நாம் குழந்தைகளிடம் கொடுக்கிறோம். அது முற்றிலும் தவறானது.

மேலும் படிக்க – கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

கழிப்பறையை காட்டிலும்  ரிமோட்டில் கிருமிகள் உள்ளதா என்பதற்கான ஆய்வு 

ஒரு ஆய்வில் நம் வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களிலும் கிருமிகளின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுக்கப்பட்டது. அதில் நாம் பயன்படுத்தும் குப்பைத்தொட்டி. ஷோபா,படுக்கையறை, தரைவிரிப்பு, கழிப்பறை அமர்விடம் என்று பலவற்றிலும் கிருமிகள் இருக்கின்றனவா என்று சோதனை செய்யப்பட்டது.

இவற்றில் இருப்பதே காட்டிலும் மிக அதிக அளவு கிருமி தாக்கம் டிவி ரிமோட்டில் தான் இருக்கிறது.

அதாவது கழிப்பறையில் இருந்த கிருமிகளின் எண்ணிக்கையை விட 20% அதிகமாக டிவி ரிமோட்டில் கிருமிகள் இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட அவர்களுக்கே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வளவு கிருமிகள் இருக்கும் ரிமோட்டை நமது குழந்தைகள் கையில் கொடுக்கலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க – கூடுதல் எடையை குறைக்க வேண்டுமா!

ரிமோட்டில் கிருமிகள் தாக்கம் அதிகரிக்க காரணம் 

வீட்டிலுள்ள அனைத்து நேரங்களிலும் அனைவரது கைகளிலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பது டிவி ரிமோட் தான். அதை பயன்படுத்திவிட்டு நாம் அப்படியே வைத்து விடுகிறோம். அதன் பின் கைகளை கூட கழுவுவதில்லை. ரிமோட்டை எடுப்பவர் கையில் உள்ள கிருமிகள் அப்படியே ரிமோட்டில் உள்ள உட்பகுதிக்கு சென்று விட்டு பட்டன்களுக்கு இடையே தங்கிவிடுகின்றன. அதை மற்றொருவர் எடுக்கும் போது கிருமிகளின் தாக்கம் சற்று அதிகமாக அவர்களது கையில் உள்ள கிருமிகளும் ரிமோட் டில்  தங்கிவிடுகின்றன.

இதேபோல் வீட்டில் உள்ள அனைத்து பேருமே நாள் ஒன்றுக்கு எத்தனை முறை ரிமோட்டை மாறிமாறி எடுத்து டிவி சேனல்களை மாற்றுகிறோம். அதை கழுவுவதற்கும் வாய்ப்பில்லை. இதனால்தான் அதில் கிருமிகள் அப்படியே தங்கிவிடுகின்றன.

இனிமேல் ரிமோட்டை எடுத்தால் உடனே கைகளை கழுவி விட்டு வேறு வேலைகளை செய்ய தொடங்குங்கள்.

நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இப்பொழுது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்துவிட்டன. சுவாசிக்கும் காற்றையே பயந்து பயந்து தான் சுவாசித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கிருமிகளின் கூடாரம் என்று தெரிந்தும் ரிமோட் டின் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வேறு சில பிரச்சினைகள்

பொதுவாக 6 முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளை அதிக அளவில் ரிமோட்டை விளையாடுவதற்காக பயன்படுத்துகின்றனர். இவர்கள் தங்கள் கையில் இருக்கும் ரிமோட்டை வாயில் வைப்பதினால் அதிலுள்ள கிருமிகள் வயிற்றில் உட்புறம் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் கைகளை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் நன்கு சுத்தம் செய்த பின்னரே அவர்கள் கையில் கொடுக்கவும். இல்லையெனில் பொருட்களில் உள்ள கிருமிகள் மூலமாகவும் அவர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்ததாக, ரிமோட்டில் உள்ள பட்டன்களை வாயில்வைத்து கடித்துக் கொள்வதால் அவர்கள் வயிற்றில் உட்செல்ல வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வயிற்றினுள் சென்று விட்டால் குழந்தைகளின் நிலைமை மிக சிரமமானதாக ஆகிவிடும்.

மேலும் படிக்க – பல நோய்களை தீர்க்கும் ஒரே இலை அது என்னவென்று தெரியுமா???

வாந்தி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பல பிரச்சினைகளை அது ஏற்படுத்தும்.

குழந்தைகள் எடுக்க முடியாத இடத்தில் ரிமோட்டை வையுங்கள். அதற்கு மாற்றாக வேறு விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுங்கள்.

நம் குழந்தையின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இருந்தால் மட்டுமே பரவி வரும் பல்வேறு நோய்களிலிருந்து நம் குழந்தைகளை காக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன