உங்கள் துணையுடன் சேர்ந்து இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் பிரிவு என்பதே வராது

do this to your life partner you will never get separated

உறவை வலுப்படுத்தி அதை இறுதிவரை கொண்டு செல்வதற்கு நம் வாழ்க்கையில் காதல் என்பது அதிக அளவில் தேவைப்படுகிறது ஆனால் எப்போதெல்லாம் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ அப்போதிலிருந்து உறவுக்குள் சண்டைகள் ஏற்படும் இப்படிப்பட்ட சமயங்களில் நாம் ஒருவருக்கொருவர் பேசாமல் பல மாதங்கள் கழிந்து விடுவோம் இருந்தாலும் மீண்டும் ஒன்றுசேரும் எண்ணத்தில் இருப்போம் ஆனால் இது அனைத்தும் தேவையா என்ற எண்ணம் நமக்குள் வரும் இதுபோன்ற எண்ணம் வராமல் எப்போதும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்பதற்கான வழிகளை பார்ப்போம்

நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்

உங்கள் துணையுடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் பிரியாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் மற்றும் அவர்கள் விரும்பியதை செய்ய விடுங்கள் அதுவும் தனித்தனியாக செய்வதை விட ஒன்றாக இணைந்து செய்து பாருங்கள் அப்போதுதான் உங்கள் துணையின் எண்ணம் உங்களுக்கு முழுமையாக புரியும்.

மேலும் படிக்க – தோழியே வாழ்க்கை துணைவியானால் தொடுவானம் தொட்டுச் செல்லும்..!

நண்பர்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் துணை ஏதாவது நண்பர்களின் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அவர்களுடன் சேர்ந்து செல்லுங்கள் அதைத் தவிர்த்து அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் எவ்வளவு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் உறவு பல வருடங்கள் நீடித்திருக்கும் இதற்கு காரணம் நமக்கு முக்கியமான ஒன்றை நம் துணையும் முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்றும் உங்கள் மேல் மதிப்பு கூடும்

ஒன்றாக ஒரே நிகழ்ச்சியை பாருங்கள் 

உறவுக்குள் சண்டையில் ஏற்படுவதற்கான காரணம் ஏராளமாக இருந்தாலும் மிக குறுகிய நேரத்தில் உதயமாகும் சண்டைதான் நிகழ்ச்சி வேறுபாடுகள் நமக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருக்கும் ஆனால் அவர்களுக்கும் காதல் திரைப்படங்களில் மேல் ஆர்வம் இருக்கும் இதை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியையும் தனித்தனியே ஒன்றாக அமர்ந்து பார்த்து  அதற்கேற்ற நேரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க – வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

உங்கள் மொபைல் போனில் இருக்கும் பாஸ்வேர்டை அகற்றிவிடுங்கள் 

உறவுக்குள் எப்போதும் ரகசியங்கள் இருக்கக்கூடாது அப்படி இருந்தாலும் அதை தாமதமாக வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் உங்கள் மொபைல் போனில் ஏதாவது ரகசிய குறியீட்டு எண்களை பதித்து வைத்தீர்கள் என்றால் உங்கள் துணைக்கு அதை தெரிவித்து விடுங்கள் இல்லையெனில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்ற எண்ணத்தில் அவர்கள் வாடி வருத்தப்படுவார்கள் எனவே இருவரும் ஒருவருக்கொருவர் எந்த ஒரு ரகசியத்தையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருந்தால் உங்கள் உறவுக்கு பிரிவே இல்லை

இது போன்ற வழிகளை சரியாக கடைப்பிடித்து உங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்கள் கண்முன்னே உங்கள் துணை வேறு ஒருவருடன் வாழ்வதை காண நேரிடும்.

1 thought on “உங்கள் துணையுடன் சேர்ந்து இதை செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் பிரிவு என்பதே வராது”

  1. Pingback: காதலியை சிரிக்க வைப்பதற்கான எளிய வழிகள்.! - Spark.Live தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன