பற்க்களின் பாதுகாப்புக்கு இதை செய்யுங்கள்..!

  • by
do this to take good care of your teeth

பிறப்பது முதல் இறப்பது வரை நமக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பது நமது பற்கள் தான். நம்முடைய புன்னகையை அழகாக காண்பிப்பதும், நம் உணவுகளை கடித்து உண்பதற்கும் பயன்படும் இந்த பற்களை நாம் எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நாளும் நம் பற்களை எப்படி பராமரித்து அதை எப்படி இறுதிவரை பின் தொடர வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

ஒரு நாளைக்கு இரு முறை

பள்ளியில் நமக்கு பாடத்தை கற்பிப்பதற்கு முன்பாகவே நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை பல் துலக்க வேண்டும் என்பதை கற்பித்து இருப்பார்கள். எனவே ஒவ்வொருவரும் காலை மற்றும் இரவு என இரு வேளை கட்டாயமாக பல் துலக்க வேண்டும். இரவில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் உங்கள் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதை அழிப்பதற்காகவே நாம் காலை நேரங்களில் பல் துலக்குவோம், அதேபோல் நாள் முழுவதும் நாம் உண்ணும் உணவுகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து முழுமையாக விளக்குவதற்காக இரவு உணவு அருந்திய பிறகு பல் துலக்க வேண்டும்.

மேலும் படிக்க – கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம்..!

தரமான டூத் பேஸ்ட்

பல் துலக்குவதற்கு நீங்கள் சுவை அதிகமாக உள்ள டூத் பேஸ்ட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றமாக பல்பொடிகள் அல்லது ரசாயனங்கள் ஏதும் கலக்காத தயாரிக்கப்பட்ட ஆயூர்வேத பேஸ்ட்களை நாம் பயன்படுத்தலாம். அதேபோல் நீங்கள் இதுபோன்ற பேஸ்ட்களை கொண்டு நீண்டநேரம் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும். பற்க்கலை உடனடியாக சுத்தம் செய்துவிட்டு பிறகு தண்ணீரால் உடனே கழுவி விடவேண்டும். இதனால் பற்கள் மேல் படிந்து இருக்கும் அனைத்து கிருமிகளும் அழிந்து உங்கள் பற்களை பாதுகாக்கும்.

முழுமையான சுத்தம்

ஒரு சில நபர்கள் முன் பகுதியை மட்டுமே சரியான சுத்தப்படுத்திவிட்டு பின்னால் இருக்கும் பகுதிகளை கடமைக்கு என்று சுத்தம் செய்வார்கள். இதைத் தவிர்த்து எப்போதும் முன்பக்கம், பின்பக்கம், மேலும், கீழும் என எல்லா திசைகளிலும் உங்கள் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் நீரால் நன்கு கழுவ வேண்டும் இதன் மூலமாக பற்க்களில் இருக்கும் அனைத்து விதமான கிருமிகளும் வெளியேறும். நீரால் வாய் கொப்பளிப்பதை, ஒவ்வொரு முறை உணவு அருந்திய பிறகு செய்வது சிறந்ததாக இருக்கும்.

சக்கரையை குறையுங்கள்

கார்பனேட்டட் பானங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை குறைவாக பயன்படுத்துங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் கார்பனேட்டட் பானம் உங்கள் பற்களை உடனடியாக சேதமாக்கிவிடும். இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக பற்களில் தேய்மானம் உண்டாகி பற்களில் பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் இனிப்பு உணவுகளை உட்கொள்ளும்போது பற்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், அப்படி சுத்தம் செய்வதை மறந்து விட்டால் உங்கள் பற்களில் கேவிட்டி போன்ற கருப்பு நிற பூச்சிகள் உண்டாகும்.

மேலும் படிக்க – தேநீரில் உள்ள வகைகள் நன்மைகள் தெரியுங்களா

பற்கள் பாதிப்பு

ஒருவேளை உங்கள் பற்கள் முழுமையாக பாதிப்படைந்திருந்தால் உடனே பல் மருத்துவரிடம் சென்று அந்த பற்களை அகற்றி விட வேண்டும். அதேபோல் அந்த பற்களுக்கு இணையாக மீண்டுமொரு பற்களை பொருத்தவும் செய்யலாம். எனவே இதுபோன்ற பிரச்சினைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து உடனடி தீர்வு காணுங்கள், இல்லையெனில் உங்கள் பற்கள், ஈறுகள் என அனைத்து இடங்களிலும் வலி ஏற்பட்டு உங்கள் நிலைமை மோசமாக மாறும்.

வாழ்நாள் முழுவதும் நமக்கு உதவியாகவும், உருதுணையாகவும் இருக்கும் பற்களை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் உணவுகளை சரியாக மென்று சாப்பிட்டு அதை உடனடியாக ஜீரணமாக்கவும் செய்யலாம். எனவே உங்கள் பற்களில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் உடனடியாக அதை பராமரிக்க தொடங்குங்கள், அப்படி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சீர் செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன