எதிர்பார்ப்பு இல்லாத காதல் வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்.!

do this to have a love without expectations and disappointments

காதல் எப்போதும் அதிக அளவில் எதிர்பார்ப்பை கொண்டே இருக்கும். எப்போது ஒரு காதலில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறதோ அப்போதிலிருந்து அந்த காதலில் விரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு முடிந்தவரை உங்கள் துணையுடன் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது, ஆனால் இது இயலாத காரியம். ஒருவர் மேல் அதிகளவில் அன்பு வைத்திருக்கும் போது அவரும் நம் மேல் அன்பு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. இதுதான் காதலின் மிக யதார்த்தமான ஒரு எதிர்பார்ப்பாகும். ஆனால் இது எப்போது மறுக்கப்படுகிறதோ அப்போதிலிருந்து காதலில் சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட தொடங்குகிறது.

எதிர்பார்க்கும் பிரச்சனையை தடுப்பதற்கு ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொள்வது மிக அவசியம். உங்கள் துணை என்ன நினைக்கிறார் என்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் செயலாக இருக்கும். அதே போல் நீங்கள் சொல்ல வருவது அவர்களுக்கு முழுமையாக புரிய வையுங்கள், அந்த இடத்தில் கோபத்தை குறைப்பது மிகவும் நல்லது.

மேலும் படிக்க – அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

உங்கள் தேவைகள் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஒவ்வொருவரின் தவறுகளை ஏற்றுக் கொள்வது நல்லது, இது உங்கள் உறவின் வலிமையை அதிகரிக்கும். எப்போது நீங்கள் விட்டுக்கொடுத்து உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறீர்களோ அப்போது உங்கள் துணை உங்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு அதிகரிக்கும், இதனால் சண்டைகள் குறையும்.

உங்கள் துணை என்ன சொல்கிறார் என்பதை கவனமாக கவனிக்க வேண்டும். அதை அலட்சியப்படுத்தினால் நீங்கள் அவர்கள் உறவையும் அலட்சியப் படுத்துகிறீர்கள் என்று அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் அவரை அவமதிப்பதை தவிர்த்து மற்றவர்களை மதித்து பேச முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உங்கள் உறவு வலிமை அடையவும் உதவும்.

மேலும் படிக்க – ஆழ புரிதலில் ஆரம்பாகும் காதல் ஆண்டாண்டுகள் வாழும்

எனவே இது போன்ற முறைகளை சரியாக பின் தொடர்ந்து உங்கள் உறவை வலுப்படுத்துங்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று உறவுகளில் இருக்கும் நம்பிக்கை தான் இதை ஒருமுறை உடைத்தால் அந்த உறவு நீடிப்பது மிகக் கடினம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன