அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!

  • by
peaceful mind

இயற்கை எப்படி தன்னுடைய காலங்களை ஏற்றி இருக்குகிறதோ அதேபோல் நம்முடைய மன நிலையும் அவ்வப்போது ஏறி இறங்குகிறது. இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் நம்முடைய மன நிலையை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சில செயல்களை மட்டும் செய்தால் போதும்.

யோகா பயிற்சி

அக்காலம் முதல் இக்காலம் வரை எல்லோருக்கும் எல்லோரும் அறிவுறுத்துவது மன அமைதிக்கு யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். இதை தினமும் காலையில் 10 நிமிடம் செய்தால் போதும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி எல்லா சூழ்நிலையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலும் படிக்க – வாழ்விற்கு வெற்றியை தரும் ஐந்து மந்திரங்கள்

தனிமையைத் தவிருங்கள்

எல்லா சூழ்நிலையிலும் அழகாக எதிர்கொள்வதற்கு உங்கள் மனநிலை அமைதியாக இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் எப்போதும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் உங்கள் நாட்களை பகிர வேண்டும். அதை தவிர்த்து அதிகளவில் தனிமையில் இருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரித்து உங்களின் குணத்தை மாற்றி விடும். எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் நாட்களையும், உங்கள் வாழ்க்கையைப் பற்றி எல்லோருடனும் பகிர்ந்து சந்தோஷமாக இருங்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்

எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு குணாதிசயம் இருக்கும். ஆனால் என் குணம் இதுதான் என்று எல்லோரிடமும் வாக்குவாதம் செய்யாமல் மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் இதை செய்வதன் மூலமாக உங்களுக்கு மன அமைதி கிடைத்து எல்லோரையும் எல்லா சூழ்நிலையும் சமாளிக்கும் சக்தியும் கிடைக்கும்.

பிடித்ததை செய்யுங்கள்

எல்லோருக்கும் அவர்களுக்கு பிடித்த சில செயல்கள் இருக்கும் ஆனால் வாழ்க்கை சூழலினால் நாம் அதை செய்யாமல் மற்றவர்களின் தேவைகளை செய்கிறோம். அதை தவிர்த்து உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து உங்கள் மன நிறைவு பெறுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழ்ந்து உங்களுக்குப் பிடித்த செயலை செய்து சந்தோஷமாக இருங்கள். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கையை அமைதியாகவும் நிறைவாகவும் இருக்கும்.

அன்பை வெளிக்காட்டுங்கள்

நாம் அந்த அளவிற்கு எல்லோரிடமும் அன்பாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மற்றவர்களும் நம் மேல் அன்பு காட்டுவார்கள். இதை அறிந்து யாரிடமும் வெறுப்பு உணர்வை காட்டாமல் அன்பாக இருங்கள். யார் ஒருவர் அதிக அளவில் கோபப்படுகிறார்கள் அவர்களின் மன நிலை மிக மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை அறிந்து அவர்கள் மனதை சாந்தப் படுத்தும் முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க – மகா சனி பிரதோச சிவபெருமான் வழிபாடு!

அமைதியாக இருங்கள்

உங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதை வேடிக்கை பாருங்கள். ஏன் என்றால் நம்மால் எல்லா சூழ்நிலையிலும் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவர முடியாது எனவே உங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை கேட்டறிந்து ஒரு பார்வையாளராக இருங்கள். பின்பு அந்த சூழல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் உங்கள் எண்ணங்களை வெளிப் படுத்தலாம்.

வாழ்க்கைக்கு மிக அவசியம் பொறுமையும், அமைதியும் தான். எனவே மிக எளிதில் கோபப்படாமல் பொறுமையாக இருந்து உங்களை சுற்றி நடக்கும் சூழலை உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக அமையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன