நாள் முழுவது சுறுசுறுப்பாக தேனீ போல் இயங்க இதை செய்யுங்க பாஸ்.!

do this to be active whole day

சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும் என்பது இப்போது இருக்கும் காலங்களில் எல்லோரின் கனவுகளாகவே மாறி வருகிறது. என்றால், நம்முடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பலரும் இன்று அவருடைய உடல் நிலையில் சோர்வை கொண்டிருக்கிறார்கள். என்னதான் நாம் போதுமான அளவு உறங்கினாலும் காலையில் மிக சோர்வாகவும், மதிய வேளைகளில் தானாக உறக்கம் வருவது போன்ற பிரச்சினைகள் நமக்கு ஏற்படுகிறது. இதனால் நம் செய்யும் வேலைகளில் மற்றும் செயல்களில் அதிக அளவில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதை தடுப்பதற்கான எளிய வழியை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலக அளவில் வெற்றி அடைந்த அனைத்து மனிதர்களின் வாழ்க்கையில், அவர்களின் வாழ்க்கை முறை மிகப்பெரிய பங்கை வகித்தது. அது என்னவென்றால், அவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி, தரமான உணவுகள் மற்றும் மற்றவர்களிடம் உரையாடுதல் போன்றவைகளை செய்ததினால் இவர்களின் வாழ்க்கையை தரத்தையும், வெற்றியையும் உயர்த்தியது. இவர்களைப் போலவே நீங்களும் சில வழிகளை கடைபிடிக்க வேண்டும் அது என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க – வாழ்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வழிகள்

மறக்காமல் காலை உணவை உட்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறையின் பாதிப்பினால் நாம் மிக வேகமாக காலை உணவை அருந்திவிட்டு வேலைக்கு செல்கிறோம். அதைத் தவிர்த்து காலை உணவை அருந்த மறந்து விடுகிறோம், இது மிகப்பெரிய தவறாகும். நம்முடைய உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவைப்படும் ஆற்றல்களை காலை உணவின் மூலம்தான் பெறமுடியும். என காலை உணவை தவிர்க்காமல் மிக ஆரோக்கியமான உணவை காலையில் உள்ள வேண்டும். பருப்புகள், முட்டை, பழங்கள், நல்ல கொழுப்புகளை காலையில் உட்கொண்டால் உங்களின் அன்றைய நாளுக்கான ஆற்றலைப் பெற்று சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

மற்றவர்களுடன் உரையாடுங்கள். நாம் எப்போதும் நமக்குத் தெரிந்தவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். அந்த சமயங்களில் நாம் சோர்வு எண்ணங்களை எண்ணாமல் சுறுசுறுப்புடன் மற்றவர்களும் உரையாடுவோம். ஆனால் புதுமுக நண்பர்கள் அல்லது முன்பின் தெரியாதவர்களிடம் உரையாடும்போது நம் களைப்புடன் இருப்போம். ஆனால் இவை தவிர்த்து உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து தேவையானவற்றை புதுமுக நண்பர்களுடன் உரையாடும்போது உங்கள் பதட்டத்தையும், சோர்வையும் தவிர்த்து விடும். இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் சில மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் உடலுக்கு வேலைகளை கொடுங்கள். இதனால் வீட்டில் உள்ள வேலைகளையும் நீங்களே செய்ய முயற்சியுங்கள். இல்லையெனில், உடற்பயிற்சி ஏதேனும் செய்யுங்கள் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை உங்கள் உடலில் சில வளைவு நெளிவுகளை கொண்டு வாருங்கள்.

ஒரு சிலருக்கு உடற்பயிற்சி என்பது கொஞ்சம் கூட பிடிக்காது. இவர்கள் காலை எழுந்தவுடன் தங்கள் மூளைக்கு வேலை கொடுத்தால் நல்லது. இதற்காக எழுதுவது, படிப்பது அல்லது ஓவியங்களை வரைவது போன்ற செயல்களை செய்யலாம். ஆனால் இச்சமயங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிருங்கள்.

ஒரு நாளைக்கு நாம் 8 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும், ஆனால் பெரும்பாலானோர் இதை சரியாக செய்வதில்லை. இதனால் இவர்களுக்கு சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்புக்கு தினமும் நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் நாம் சோர்வுடன் களைப்புடன் தான் இருப்போம்.

மேலும் படிக்க – மூவாயிரம் வருடம் பழமையான மம்மிகள்..!

இரவில் உங்களுக்கு எப்போதும் தூக்கம் வருகிறதோ, அப்போது உடனடியாக எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு தூங்குவது நல்லது. ஏனென்றால், நம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் உள்ளாவது தூக்கத்தினால் தான். ஒரு காலத்தில் போது பொழுது போக்கு சாதனங்கள் அதிகம் இல்லாத சமயத்தில் தூக்கம் வரும்போதுதான் நம் தூங்கிக் கொண்டிருந்தோம் ஆனால் இக்காலத்தில் நாம் மிக அதிகமாக தொலைக்காட்சி மற்றும் செல்போன்களை பயன்படுத்துகிறோம் இதனால் நாம் தூக்கத்தை தொலைத்து வருகிறோம். எனவே மிக ஆரோக்கியமான வாழ்விற்கு தூக்கம் மிக அவசியம் இது உங்களை சுறுசுறுப்புடன் சோர்வில்லாமல் வைத்துக் கொள்ளும்.

ஒருவர் எவ்வளவு அதிகமாக உழைக்கிறார்களே அவர்களுக்கு அதிகமான பசி ஏற்படும். இதனால் அவர் ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறார்கள். இதைத்தான் தேனீக்கள் செய்து வருகிறது. அது தூங்கும் நேரத்தைத் தவிர்த்து எல்லா சமயங்களிலும் சுறுசுறுப்பாக பூக்களில் இருக்கும் தேனை கொண்டுவந்து சேமிக்கிறது. இது தினமும் ஏதாவது ஒரு வேலையை சுறுசுறுப்புடன் செய்து வருகிறது. இதை போல் நாமும் வேலை இருந்தாலும் இல்லை என்றாலும் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு வேலையை எப்போதும் செய்து கொண்டிருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து உங்கள் பொழுதுகளை கழிப்பதை தவிர்ப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன