உங்கள் திருமண வாழ்க்கையில் காதல் குறையாமல் இருப்பதற்கு இதை செய்தால் போதும்

do this in your marriage life to boost your love between you and partner

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தன் வாழ்க்கைத் துணையாக முழுமையாக ஏற்றுக் கொள்வதே ஒரு அழகான திருமணம் ஆனால் இதில் திருமணமான சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழிந்த பின் உங்கள் கணவர் அல்லது மனைவி உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் குறைந்த இருப்பவர்கள் இதை செய்தால் உங்கள் துணை நிச்சயம் மீண்டும் பழையபடி காதலிக்க துவங்கி விடுவார்கள்.

நீங்கள் காதலிக்கும் போது அல்லது திருமணமான முதல் வருடம் எங்கே எல்லாம் ஒன்றாக சேர்ந்து சென்றிர்களே அந்த இடத்திற்கு மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள் உங்கள் கடந்த கால நிலையை எண்ணி இப்போது நீங்கள் இருவரும் எப்படி நட்பாக இருக்கிறீர்கள் என்பதை உணரவே அந்த இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் உங்கள் காதலன் அல்லது காதலி உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மீண்டும் வெளிப்படும்.

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

இருவருக்குள் இருக்கும் உறவில் சுவை அதிகரிக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்களின் உடல் உறவில் சில மாற்றங்களைக் கொண்டு வாருங்கள் புதிதாக எதையாவது முயற்சி செய்து அவர்களை சந்தோஷப் படுத்தினால் உங்கள் காதல் அதிகரிக்கும்

ஆண் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் வெளியில் பரிமாறப்படும் உணவு வகைகளில் அதிகமான வகைகள் இருக்கும் இதனால் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை உங்கள் மனைவிக்கு இது போன்ற பலவகையான உணவு சமைத்துப் பாருங்கள் அவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் அதிகரிக்கும் அதுவே பெண்களாக இருந்தார்கள் என்றால் தினமும் கூடுதலாக ஏதாவது ஒரு வகையை அவருக்கு சமைத்து தாருங்கள்

பாராட்டுங்கள் நீங்கள் ஒருவருக்கொருவர் பல வருடங்களாக ஒன்றாக இருப்பதினால் நீங்கள் அவர்களை பாராட்டுவதை குறைத்து இருப்பீர்கள் ஆரம்பத்தில் எல்லாம் புதுமையாக தெரிந்த உங்களுக்கு நாளாக அது பழகி போய் அதை ஏன் பாராட்டுவது என்ற எண்ணத்தில் இருப்பீர்கள் ஆனால் திடீரென்று ஒருநாள் அவர்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தை பாராட்டி செல்லுங்கள் இப்படி சொல்வதன் மூலம் அவர் தன்னை அறியாமல் உங்கள் மேல் மீண்டும் காதல் வயப்படுவர்.

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

எப்போதும் அன்பாக இருங்கள் உங்கள் துணையை அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பின்னாலிருந்து கட்டிப் பிடியுங்கள் அவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள் அவர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சுபநிகழ்ச்சிகள் ஏதாவது இருந்தால் அவர்களை அழைத்துச் செல்லுங்கள் இது போன்ற செயல்களை செய்தால் அவர்கள் உங்கள் மேல் அதிகமான காதலை கொள்வார்கள்.

எப்போதும் காதல் வாழ்க்கையை சலிப்படையாமல் பார்த்துக்கொள்வது நல்லது ஆனால் பெரும்பாலான தம்பதியர்கள் செய்யும் தவறுதான் காதல் வாழ்க்கையை மறந்து புதிதாக ஏதாவது காதல் கிடைக்குமா என்ற எண்ணத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆனால் நீங்கள் உங்கள் பழைய காதலை மீண்டும் வெளிப்படுத்தி உங்கள் கணவன் அல்லது மனைவியை ஒரு புது மனிதராக பாருங்கள் நிச்சயம் அவர்கள் மேல் உங்களுக்கு அன்பு அதிகரிக்கும் ஒரு சிறிய செயல் மூலமாக உங்கள் வாழ்க்கையை அழகுபடுத்தலாம்.

1 thought on “உங்கள் திருமண வாழ்க்கையில் காதல் குறையாமல் இருப்பதற்கு இதை செய்தால் போதும்”

  1. Pingback: how to find out the chemistry between you and your life

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன