சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

  • by

சிவராத்திரி இருட்காலம் எனப் பொருள்படும்.   சிவராத்திரிக்காலத்தை பிரளய காலம், சத் சங்க காலம் எனவும் அழைப்பர்கள்.  சிவராத்திரியானது பிரளய காலத்தில் ஜிவராசிகளின் அழிவுக்குப்பின், அம்பிகை உமாதேவி பரமேஸ்வரரை நினைத்து பூஜை செய்து வந்தார். அதன்  முதல் சிவராத்திரியானது அனுஷ்டிக்கப்படுகின்றது. 

சிவராத்திரி  நான்கு காலப்பூஜை: 

சிவராத்திரியன்று  இரவு நான்கு ஜாமம் அர்ச்சனையும் அலங்காரமும் நடத்தி அம்பிக்கை நடத்திய பூஜையை  அடுத்து அதனையே மக்களும் நடத்தி வந்தனர். 

 சிவராத்திரி நாளில் சூரியன் மறைந்த  முதல் பொழுது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவனுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தி சிவ நாமம், சிவபாரணம், திருவாசகம் ஆகிய்  அனைத்தும் அந்த வேளையில் பக்தர்களால் பின்ற்றபடுகின்றது. 

சிவராத்திரியன்று பகல் பொழுது சிவபெருமானுக்கும் இரவுய் நேரம் அம்பிகைக்கும் உரியது எனப்படுகின்றது. ஆனால் சிவராத்திரியானது அம்பிகையின் வேண்டுகோளுக்கு இணங்க கொண்டாடப்படுகின்றது. ஆகையால் அந்த நாள் சிவபெருமானுக்குரியதாக கொண்டாடப்படுகின்றது. 

மேலும் படிக்க: மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

சிவராத்திரி

மாசிமாத சிவராத்திரி : 

மாதங்களில் மகத்துவம் நிறைந்த சிவராத்திரியாக மாசி மாதம் வருவது  பின்பற்றப்படுகின்றது. இது மாத சிவராத்திரியைவிட சிறப்பு வாய்ந்ததாகப் பின்பற்றப்படுகின்றது. மாசி மாதத்தில் வரும் அமாவாசை, சந்திர தரிசனம் ஆகியவை  சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது. மாசிமகம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது. 

சிவனுக்கு அபிசேகம்: 

மஹாசிவராத்திரி நான்கு சாமமும் சிவலிங்க  பூஜையும், வழிபாடும் நடைபெறும். சிவனுக்கு சந்தனக்குழம்பு வில்வத்துடன் தாமரை, துளசி ஆகியவை சேர்க்கப்படும். இந்த முதல் காலப் பூஜையில் பயிற்றம் பருப்பு நிவேதனம் செய்யப்படும். 

இரண்டாவது காலப்பூஜை:

சிவ பெருமானுக்கு  செய்யபடும் இரண்டாவது காலப்பூஜையில்  பஞ்சாமிர்த அபிசேகமும் குழபு சாத்தி, வில்வம் தாமரை துளசி அர்ச்சனை  செய்து வழிபாடு செய்வது சிறப்பாகும். 

சிவராத்திரி

மூன்றாம் சாமப்பூஜை: 

சிவராத்திரியன்று கொண்டாடும் மூன்றாம் காலப்பூஜையானது மிகவும் விசேசமானது ஆகும்.  சிவபெருமானுக்கு பச்சை கற்பூரம், சுண்ணம் சாத்தி எள் அன்னம் நிவேதனம் செய்து பூஜையானது செய்யப்படும்.இதனை பக்தர்கள் திராளாக வந்து வணங்கி கொண்டாடுவார்கள். 

மேலும் படிக்க: சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

 நான்காம் காலப்பூஜை: 

நான்காம் கால பூஜையானது  மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும்.  நான்காம் கால பூஜையானது சிவபெருமானுக்கு கரும்புச்சாற்றால் அபிசேகம்  செய்வார்கள். குங்குமம் சாற்ரி வணங்குவார்கள். வில்வம், நந்தியாவந்தனம் கொண்டு அர்ச்சித்து சுத்த அண்ணம் படைத்து பூஜையானது நடைபெறும். 

மகாசிவராத்திர்யன்று கண்விழித்து  இறை நாமம் சொல்லி வழிபாடு நடத்தி நான்கு காலப்பூஜை செய்து இறையருள் பெறலாம். அப்பொழுது நாம் விரும்பியதை நிச்சயம் பெற முடியும்.  சிவ ராத்தியன்று அடிமுடி தேடி திருமாலும், பிரம்மனும் சென்றது இதே நாளில் என்னும் குறிப்பும் இருக்கின்றது. சிவராத்திரி நாம் நான்கு கால பூஜை பார்த்து சிவபெருமானை வணங்கும்   அந்த நாளில் நம்முள் இருக்கும் அகந்தை அழியும் . சாந்தி சமாதனத்துக்கு வழிகாட்டும் காலம் மகாசிவராத்திரி காலமாக கருதப்படுகின்றது. 

நான்கு கால பூஜையும் விரதம் அவசியம்: 

சிவராத்திர் நாளில் சிவபெருமானை வணங்க  இரவு முழுவதும் கண்முழிக்கப் போகின்றிர்களா உங்களுக்கான இந்த நேரத்தை இன்னும் பக்தியுடன் கொண்டாடுங்கள் நாள் முழுவதும் சிவனை நோக்கி விரதம் இருந்து  வழிபாடு நடத்துங்கள். 

சிவராத்திரி

விரத முறை:

மாசி மாத சிவராத்திரி அன்று விரதம் அனுஷ்டிக்கப் போகின்றீர்களா அப்படியெனில் சிவராத்திரிக்கு  மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் தவிர்த்து விடுங்கள். சிவராத்திரிக்கு முந்தய நாள் மாலை குளித்து பெற்றோர்களை வணங்கி ஆசி பெற வேண்டும். சாமியை பிரார்தனை செய்து  தீப தூபம் காட்டி பிராத்தனை செய்ய வேண்டும். முதலில் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கி வேண்டுதலை முன் வைக்க வேண்டும். அனுமதிக்குப் பின் பஜனை பாட வேண்டும். 

மேலும் படிக்க: சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன