உங்கள் காதலன் உங்களை கண்டுக்கொள்ள வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்

things to do for your boy friend to give you more love

காதலிக்கும் சமயங்களில் நாம் எப்போதும் துடிதுடிப்பாக இருப்போம் அதுபோன்ற நேரங்களில்  நாம் விரும்பும் காதலன் எப்போதும் தன்னைப் பற்றி நினைத்துக்கொண்டு அவ்வப்போது தொந்தரவுகள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள் ஆனால் சில நாட்கள் கழிந்த பின்பு நம்மை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு கடமைக்கு நம்மிடம் பேசுவார்கள் இப்படிப்பட்ட காதலனை நம் பக்கம் திரும்ப வைப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை பார்ப்போம்.

சரியான ஆடையை தேர்ந்தெடுங்கள் 

நீங்கள் சாதாரண ஆடைகளை அணிபவர்களாக இருந்தால் உங்கள் காதலனுக்கு பிடித்த மாதிரியான ஆடைகளை அணிய தொடங்குங்கள் பொதுவாகவே ஆண்களுக்கு சற்று கவர்ச்சி உடைய ஆடைகளை அணியும் பெண்களே மிகவும் பிடிக்கும் நீங்களும் அதுபோன்ற ஆடைகளை அணிந்து அவர்முன்  நில்லுங்கள் நிச்சயம் அவர் உங்களை அணைத்துக் கொள்வார் ஆனால் இது போன்ற ஆடைகளை தனிமையில் அணிந்து காட்டுங்கள்.

மேலும் படிக்க – காதல் தோல்வி அடைந்தவுடன் பார்க்க வேண்டிய சிறந்த 7 திரைப்படங்கள்.!

சிரித்த முகத்தை கொண்டு இருங்கள்

உங்கள் காதலனை சந்திக்கும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் இருங்கள் எல்லா வார்த்தைகளுக்கும் இடையே ஒரு புன்னகையை தூக்கி வீசுங்கள் அதுமட்டுமில்லாமல் அவர் நண்பர்கள் உறவினர்கள் என்று யாரைப் பார்த்தாலும் சிரித்து எந்தவித வெறுப்பும் கோபத்தையும் காட்டாதீர்கள்

உங்கள் காதலியின் உறவினர்களை நேசியுங்கள் 

உங்கள் காதலனுக்கு சகோதரன் சகோதரிகள் இருந்தால் அவர்களைப் பற்றி அவ்வப்போது விசாரியுங்கள் பின்பு அவர்களின் பெற்றோரை பற்றியும் கேளுங்கள் சில சமயங்களில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து அக்கறையுடன் பேசி வந்தால் உங்கள் காதலன் நிச்சயம் உங்களை முன்பை விட அதிகமாக காதலிப்பார்.

மேலும் படிக்க – தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

முத்த பரிமாற்றம் 

எப்போதும் உங்கள் காதலன்தான் முத்தம் தர வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து அவ்வப்போது அவருக்கு ஒரு முத்தத்தைத் தாருங்கள் எங்கேயாவது வெளியே செல்லும் வழக்கமாக இருந்தால் செல்வதற்கு முன் ஒரு முத்தத்தை தரும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள் அதேபோன்று இரவு உறங்கும் முன் இது போன்ற பரிமாற்றங்களை செய்து உறங்கினால் உங்கள் காதலன் நீங்கள் காட்டும் அன்பை முழுமையாக உணர்வார்

அக்கறையுடன் இருங்கள் 

உங்கள் காதலன் காலையில் எழுந்தவுடன் அவருக்கு அழைப்பு விடுத்து அக்கறையுடன் பேசுங்கள் அவர் உணவு சாப்பிட்டார, இன்றைய பொழுதின் அவர்களின் திட்டம் என்ன மற்றும் இரவு நேரங்களில் இன்றைய நாள் எப்படி சென்றது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதிகளவில் அவரின்களை பற்றி பேசுங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலே உங்கள் காதலன் எப்போதும் உங்களை விட்டு பிரிய மாட்டேன்.

மேலும் படிக்க – மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

பல நாட்களாக பழகி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சண்டையிடும் காதலர்கள் ஏராளமாக உள்ளார்கள் அதுபோன்று இல்லாமல் புரிந்து கொண்டவற்றை சரியாக அவருக்கு தெரியப்படுத்தி அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது செய்தால் போதும் இதைத்தவிர்த்து அவர்களிடம் தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து சண்டையிடாமல் இருந்தால் உங்கள் காதலன் உங்கள் அருகிலேயே எப்போதும் காதலுடன் இருப்பார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன