காதல் வாழ்கையில் வெற்றி பெறும் வழிமுறைகள்

  • by

காதல் வாழ்கை  கைக்கூட நாம் பல்வேறு வேண்டுதல்கள் வைப்பது உண்டு. புலவர்கள் மட்டுமல்ல பல ஞானிகளும், சித்தர்களும் கூட ஆண் மற்றும் பெண்ணுக்கிடையே ஏற்படும் காதல்  எனப்படும் தீவிர அன்பு தெய்வீக தன்மை வாய்ந்தது என்பார்கள். 

இந்திய நாட்டில் வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடி திருமணம் செய்வித்து வருவது வழக்கமாகும். காதல் திருமணம் அன்று குறைவாகும். ஆனால்  சமீப காலங்களில் நமது நாட்டில் இனம், மொழி, மதம் கடந்து ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே காதல் திருமணங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. 

பலரும் இதை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். உண்மையான சில காதலர்களுக்கு தங்களின் காதல் திருமணம் நடப்பதில் சில தடைகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவை எல்லாவற்றையும் நீக்குவதற்கான பரிகாரங்களை இங்கு அறிந்து செயல்படுவது குறித்து விளக்கியுள்ளோம். 

மேலும் படிக்க – யோகாவில் இருக்கும் முத்திரைகளை செய்வதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.!

உலகில் காதலிப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். பருவ வயதில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் செய்ய தொடங்குகின்றனர். பலரும் காதலில் ஈடுபட்டாலும் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்களை ஆசிர்வதித்து, தங்களின் காதலர்களோடு திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். காதல் திருமணம் நடப்பதற்கான சில பரிகாரங்கள் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளன. அதை கடைபிடிப்பதன் மூலம் தங்களின் மனதிற்கு பிடித்தவருடன் திருமணம் செய்து கொண்டு வாழலாம்.

காதலில் வெற்றி பெறவும், காதல் திருமணம் காதல் வாழ்க்கையை வாழ்ந்த தெய்வங்களான முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் கோவில்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஆண், பெண் இருவரும் சென்று வழிபாடு செய்தல் வேண்டும்.

கிருஷ்ணர் வழிபாடு:

வெள்ளிக்கிழமைகளில் பூஜையறையில் ஸ்ரீ கிருஷ்ணர் ராதை ஒன்றாக இருக்கும் படத்தை, வாசனையுள்ள பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். இந்நாளில் கிருஷ்ணர் கோவிலுக்கு தங்களின் காதல் திருமணம் நடக்க விரும்பும் ஆண், பெண் இருவரும் ஒன்றாக சென்று வணங்க வேண்டும்.

தங்களின் காதலியையே வாழ்க்கை துணையாக அடைய விரும்பும் ஆண்கள் தங்களின் மோதிர விரலில் வெள்ளியில் மரகத கல் பதித்த மோதிரத்தை அணிந்திருந்தால் காதல், திருமண வாழ்க்கையில் நன்மைகள் பல ஏற்படும். மூன்றாம் பிறை தரிசனம் மற்றும் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவான் வழிபாடு செய்து வந்தாலும் காதல் திருமணம் நடக்கும் நிலையை உருவாக்கும்.

மேலும் படிக்க – பகவத் கீதையின் சிறப்புகள் என்ன?

தாந்திரகத்தில் காதல் ஒன்றுபட கிராம்பு:

தாந்திரகத்தின்படி கிராம்பு முக்கியப் பங்கு வகிக்கின்றது. கிராம்பு 7 எடுத்து கொண்டு அதனை ஒரு வெள்ளைத்தாளில் வைத்து உங்களுக்கு பிடித்தவருடனான திருமணம் நடந்தாக எண்ணி வேண்டுதல் நடத்த வேண்டும். வாரம் முழுவது 7 நாட்கள் பூஜை செய்து வைத்திருத்தல் வேண்டும். சனிக்கிழ்மை நாட்களில் அதனை ஓடும் ஆற்று நீரில் போட்டு வர வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன