இல்லறத்தில் குடும்ப ஒற்றுமைக்கு இதை செய்யுங்கள்.!

do this for making unity in your family

குடும்பம் என்பது கோவில், இப்போது இருக்கும் காலங்களில் இதை பலரும் அறிவதில்லை. குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகள், போட்டிகள், பொறாமைகள் போன்றவைகளால் மிக எளிய முறையில் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை நாம் யாரும் செய்வதில்லை. இதனால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் தனிமை சுகத்தை தந்தாலும் நாள் போக்கில் குடும்ப அரவணைப்பு இல்லாமல் யாராலயும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியாது. நீங்கள் கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் அல்லது தனி குடும்பமாக வாழ்ந்தாளும் உங்களின் மனக் கவலையைப் போக்க உறவுகள் தேவை.

ஒருசில வீட்டில் எல்லா உறவினர்களும் இருந்தாலும் அவர்களுக்குள் அமைதி நிலவுவதில்லை, ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாமல் அவர்களுக்கு ஏற்படும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சண்டையிலும் முடிகிறது. கணவன் மனைவிக்கு இடையில் அவ்வப்போது சண்டைகள் மற்றும் மகிழ்ச்சி இன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது அனைத்திற்கும் காரணம் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள்தான். இதைத்தான் ஆவிகள், பில்லி, சூனியம், ஏவல் என்றெல்லாம் அழைக்கிறோம். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை பேய் என்று சொல்வார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் எதிர்மறை சக்திகள் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இதை போக்குவதற்கு அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீகத்திலும் சில வழிகள் உண்டு. அவைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க – குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்லும் இடங்கள்..!

வீட்டில் உள்ள தீய சக்திகளை போக்குவதற்கு நாம் சாம்பிராணி புகை போட வேண்டும். அது மட்டுமல்லாமல் அதன் மேல் வெள்ளை கடுகுகளை தூவி வீடு முழுவதும் அந்த புகையை காண்பிக்க வேண்டும். இதன் மூலமாக உங்கள் வீட்டில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணரலாம். வெள்ளை கடுகில் நேர்மறை சக்தி அதிகமாக உள்ளது. இதனை புகை மூலமாக வீடு முழுவதும் காண்பிப்பதால் வீட்டில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளை போக்கி நல்ல எண்ணங்களை பரப்புகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வெள்ளைக் கடுகுக்கு எப்படி இவ்வளவு சக்தி. உலகத்தில் இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் அழிக்க பிறந்தவர்தான் பைரவர். இவர் இமய மலையில் அடிவாரத்தில் வாழ்பவர், இவரைச் சுற்றி ஏராளமான வென்கடுகு செடிகள் இருக்கிறதாம். இதனாலேயே பைரவரின் சக்தி மற்றும் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் வெள்ளைக்கடுகு  தீய சக்திகளை அழிக்கிறது. இதைதான் பண்டைய காலங்களில் வாழ்ந்த அரசர்கள், மன்னர்கள் தீய சக்திகளை அழிப்பதற்காக பயன்படுத்தி வந்தார்கள்.

சிவாலயங்களுக்கு சென்று அதன் மூலவருக்குப் பின் புறத்தில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரரை 5 தேங்காய் எண்ணெய் அகல் விளக்குகளை ஏற்றி வணங்க வேண்டும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கணவன், மனைவி, மற்ற உறவுகளிடம் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

குடும்ப ஒற்றுமைக்கு நித்யக்லின்னா மந்திரம். நித்யக்லின்னா என்பதற்கு கருணை மிகுந்தவள் என்பது அர்த்தமாகும். இந்த நித்யக்லின்னா அம்பிகையின் மந்திரத்தை நாம் தினமும் சொல்லி வந்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

மேலும் படிக்க – காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

நித்யக்லின்னா மந்திரம் :

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே

நித்ய மதத்ரவாய தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

இதை தினமும் கடவுள் வழிபாட்டுடன் சொல்ல வேண்டும். அதேபோல் உங்கள் பூஜை அறையில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் ஒன்றாக இருக்கும் படத்தினை வைத்து வணங்க வேண்டும். இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் மன வருத்தங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன