குடும்ப ஒற்றுமைக்கு உடும்பு போல் ஒட்டும் குணம் வேண்டும்!

do this for joint family unity

நமக்கு மன நிம்மதி வேண்டும் என்றால் நம் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்கும் மன நிம்மதிக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றும் ஆம் உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இல்லாமல், ஒவ்வொருவர் அவரவர் எண்ணத்தில் தங்கள் போக்கில் இருந்தார்கள் என்றால் உங்களுக்கு தெரியாமல் அந்த ஒற்றுமை இன்மை உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். இதனால் வெளி உலகை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் முற்றிலுமாக வேறு கோணத்தில் இருக்கும். எனவே உங்கள் குடும்பத்தை முடிந்த வரை ஒற்றுமையாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களின் வெளி வாழ்க்கை எப்படி செல்கிறது என்று பாருங்கள், அதன் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

கூட்டுக்குடும்பம் ஒற்றுமை

குடும்பம் என்றால் அம்மா, அப்பா, அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகளின் மனைவி மற்றும் கணவர்கள் என இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் இப்போது இருக்கும் காலங்களில் கூட்டுக் குடும்பம் என்றால் கணவன், மனைவி, ஒரு குழந்தை மட்டும்தான் இருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் பல சந்தோஷங்களை இழக்கிறார்கள். ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது தான் ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்வதைவிட சக நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்களிடம் இருந்ததுதான் அதிகமாகக் கற்றுக் கொள்கிறார். அதேபோல்தான் கூட்டுக் குடும்பமும். நம் குடும்பத்தில் யாராவது ஒருவர் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அந்த தவறுகளை நாம் செய்தது போல் உணர்ந்து அதை மீண்டும் செய்ய மாட்டோம். அதே போல் ஒருவர் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் மற்றொருவர் அவர்களுக்கு உதவுவார்கள். இதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் மனமுடைந்து ஒரே இடத்தில் இல்லாமல் நம்முடைய அடுத்த எண்ணங்கள் எது என்று அதற்கான வேலைகளை செய்வோம்.

மேலும் படிக்க – மகிழ்ச்சியா இருந்தால் நினைத்தது நடக்கும்!

கூட்டுக் குடும்பங்களில் முடிந்தவரை தோல்விகளே இருக்காத அப்படியே தோல்விகள் இருந்தாலும் அதிலிருந்து மிக எளிமையான முறையில் மீண்டும் வரலாம். ஆனால் இப்போது இருக்கும் சமுதாயத்தில் கூட்டுக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன, அதை போல் சிறிய குடும்பமாக இருப்பவர்கள் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான எளிமையான வழிகளை இந்த பதிவில் காணலாம்.

மனம் விட்டுப் பேசுங்கள்

இப்போது இருக்கும் குடும்பத்தில் எல்லோரும் ஒவ்வொரு விதமான வேலைக்கு சென்று தங்களின் நேரங்களை அதிகளவில் அலுவலகத்திளே கழித்து விடுகிறார்கள். இதைத் தவிர்த்து வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். அப்போது, தங்கள் நாள் எப்படி இருந்தது என்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  இதன் மூலமாக உங்களின் மன அழுத்தங்கள் மட்டுமல்லாமல் அதைக் கேட்பவர்களுக்கும் மனநிறைவு கிடைக்கும்.

சிறிய குடும்பமாக இருப்பவர்கள் கணவன் மனைவிக்குள் பேச்சுவார்த்தை எப்போதும் இருக்க வேண்டும். எப்போது உங்கள் இருவருக்குள் பேச்சுவார்த்தை குறைகிறதோ அப்போதிலிருந்து எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அதிகரித்து ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டைகள் உருவாகும். என எதுவாக இருந்தாலும் அமர்ந்து பேசுங்கள் இல்லையெனில் எங்கேயாவது வெளியே செல்லும்போது பேசிக் கொண்டே செல்லுங்கள். முடிந்தவரை மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்து கேளுங்கள்.

மேலும் படிக்க – சுக்கிர போக வழிபாடு செய்யுங்க கோடிகளில் வாழலாம்

சண்டையிடும் போது கவனிக்க வேண்டியவை

சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட குடும்பத்தில் சண்டைகள் ஏற்படலாம். ஆனால் அந்த சண்டையின் நாம் என்ன பேச வேண்டும் என்பதை தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சண்டையின் போது நமக்குத் தோன்றும் எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்தி நம்முடைய துணை அல்லது குடும்பத்தினரை புண்படுத்திவிடுவோம். எனவே அதை நன்கு அறிந்து தேவையானவை மற்றும் பேச வேண்டும். அதேபோல் இதற்கு முன் நடந்த கசப்பான சம்பவங்கள் எதையும் நினைக்கக் கூடாது. அதனால் உங்கள் இருவருக்கும் சண்டைகள் அதிகமாகுமே தவிர குறையாது. அதேபோல் சண்டை முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல உரையாடலை தொடங்க வேண்டும். அதை தவிர்த்து உங்களுக்குள் இருக்கும் ஈகோ உணர்வினால் பேசாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்

நீங்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதை ஒரு நிலையாக எடுக்காமல், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த முடிவுகளைப் பற்றி சொல்லி அவர்களின் கருத்தை கேட்க வேண்டும். அது உங்களை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் எல்லோரின் கருத்தைக் கேட்பது மிக முக்கியம். ஏனென்றால், நீங்கள் ஒரு முறை அதைப் பற்றிச் சொல்லும்போது இது உன்னுடைய தனிப்பட்ட விஷயம் நீயே முடிவு எடுத்துக்கொல் சொல்லி விட்டால் அந்தப் பிரச்சனை அத்துடன் நிறைவடையும். அதை தவிர்த்து இதை ஏன் என்னிடம் சொல்லாமல் செய்தாய் என்ற கேள்வி எழும்போது தான் இதை நாம் முன்பே சொல்லி இருக்கலாமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

மேலும் படிக்க – வராஹி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோம்..!

எனவே எந்த உரையாடலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அதைப்பற்றி பேசுங்கள், இது உங்கள் உறவுகளை வலுப்படுத்த உதவும்.

எனவே குடும்ப ஒற்றுமை நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்த எல்லா பிரச்சினைகளையும் தொடர்ந்து நாம் தனிமையாக இருந்து விடலாம் என்ற எண்ணம் நமக்குள் வரும். சிலநாட்கள் அதனால் சந்தோஷம் கிடைத்தாலும் அது நிரந்தரமான தீர்வாக இருக்காது. ஏனென்றால், எல்லாவற்றையும் சமாளித்து ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து அதற்கேற்ப வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. அதை விட்டுவிட்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது கோழைத்தனமான செயல். எனவே உங்கள் குடும்பத்தினரை அழைத்து அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையும், உங்களை பார்ப்பவர்களின் வாழ்க்கையும் அழகாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன